jeudi 27 juin 2013

விலகிக்கொள் தனது அதிகாரத்திற்கு தனது பேச்சுக்கு மதிப்பளிக்க முடியாதவர்கள்;ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

மாறுப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது.இதேவேளை தமது பேச்சுக்கு மதிப்பளிக்க முடியாதவர்கள் ஆளும் கட்சியை விட்டு விலகிக் கொள்ள முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த எவருக்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது. ஏற்கனவே சுதந்திரக் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த நினைத்தவர்கள் வெளியேற்றப்பட்டடு உள்ளனர்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கக் கூடும் என்ற போதிலும்,ஆளும் கட்சியின் இறுதித் தீர்மானத்திற்கு அனைவரும் இணங்க வேண்டும்.
கடந்த தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐந்து மில்லியன் வாக்குகளைப் பெற்றுக்கொண்டதாகவும் இதனால் அனைவரும் கட்சியின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.
கட்சியின் தீர்மானத்திற்கு முரணாக எவரும் செயற்பட முடியாது அதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire