vendredi 28 juin 2013

அன்று வந்ததும் இதே நிலா.... இன்று வந்ததும் அதே நிலா....அரசாங்கத்துடன் ..................... நடத்தத் தயார் : TNA

அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென் ஆபிரிக்க பிரதி வெளிவிவகார அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிமை இரண்டாவது தடவையாக சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும் அரசாங்கம் தம்மை பிழையாக மீண்டும் வழிநடத்தி விடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போது 13ம் திருத்தச் சட்டம் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்கும் முனைப்புக்கு முழு அளவில் யதார்த்தமான ஒத்துழைப்பு வழங்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றையே தமிழ் மக்கள் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் தமிழ் மக்களின் மெய்யான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அசராங்கம் தயாரில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவது குறித்து தீர்மானிக்கவில்லை :
காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதா இல்லை என்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னும் முடிவு செய்யவில்லை என அதன் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் குறித்து அறிவித்த பின்னர், தெரிவுக்குழுவில் கலந்து கொள்வதா இல்லையா என்ற தீர்மானத்தை அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்தியா சென்றிருந்த சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து 45 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை திருத்;;த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால், இந்திய எப்படியான செயற்பாடுகளை முன்னெடுக்கும் என்பது குறித்து இங்கு பேசப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire