mardi 30 avril 2013

தீவிரவாத குற்றச்சாட்டில் கைது;ரஷ்யாவில் பள்ளிவாசலில் இருந்த 140 முஸ்லிம்கள்


Rusia Armyரஷ்ய தலைநகர் மொஸ்கோவிலிருக்கும் தொழுகை அறை ஒன்றில் இருந்து 140 முஸ்லிம்களை அந்நாட்டு சட்ட செயலாக்கல் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தீவிரவாதிகளை தேடும் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரச அதிகாரியை மேற்கோள் காட்டி ரஷ்ய செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.ரஷ்ய பெடரர் பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அடையாளம் காணப்படாத நாடுகளைச் சேர்ந்த 30 வெளிநாட்டினர்கள் கைதுசெய்யப்பட்டோருள் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அடையாளம் காணப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் தற்போது எங்கே உள்ளார்கள் என்பது குறித்து தகவல் இல்லை என ரஷ்ய தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரஷ்ய அரச தொலைக்காட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் வரிசையாக பொலிஸ் வாகனத்தில் ஏற்றப்படுவது காண்பிக்கப்பட்டது. அமெரிக்காவில் இடம்பெற்ற பொஸ்டன் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் இந்த கைது நடவடிக்கை தொடர்புபட்டதா என்பது குறித்து எந்த அறிகுறியும் இல்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.பொஸ்டன் குண்டு தாக்குதலுடன் தொடர்பு பட்டதாக அமெரிக்க உளவுப் பிரிவு அடையாளம் கண்டுள்ள சகோதரர்கள் ரஷ்யாவின் செச்னியாவை பூர்வீகமாக கொண்டவர்களாவர். பொஸ்டன் குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டதோடு 264 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து ரஷ்யா இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
எனினும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடந்த வியாழக்கிழமை தொலைக்காட்சி ஊடாக உரையாற்றும்போது வடக்கு கவ்கேசஸ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான தமது கடுமையான நடவடிக்கைகள் பொஸ்டன் குண்டு வெடிப்பின் மூலம் நியாயப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர்களுக்கு எதிராக ரஷ்யா மற்றும் அமெரிக்கா இணைந்து செயற்பட வேண்டும் என்றார். இதில் மேற்படி மொஸ்கோ தொழுகை அறையில் வடக்கு கவ்கேசஸ் தீவிரவாத குழுவுடன் ஒருசிலர் கடந்த காலங்களில் இணைந்திருப்பதாக ரஷ்ய சட்ட செயலாக்கல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறாயின் இவ்வாறான சுற்றிவளைப்புகள் முன்னாள் சோவியட் நாடுகளில் இருந்து வரும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை இலக்குவைத்தே நடத்தப்படுவதாக ரஷ்ய அரசுக்கு எதிரான விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த பெப்ரவரியில் பீட்டர்ஸ் பேர்க்கில் இடம்பெற்ற இதேபோன்ற சுற்றிவளைப்பில் சுமார் 300 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் 13 ஊர்வலங்கள், 17கூட்டங்கள்பலத்த பாதுகாப்பு


Head of the Police
கொழும்பு மாநகரில் சுமார் 6 இலட்சம் பேர் திரள்வர் என எதிர்பார்ப்பு, தனிப்பட்ட தேவைக்கு கொழும்பு வருவதை தவிர்க்க வேண்டுகோள், உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி, இலங்கை மக்கள் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி உட்பட முக்கிய கட்சிகள், தொழிற் சங்கங்களின் ஊர்வலம், கூட்டங்கள் கொழும்பிலும், ஐக்கிய தேசியக் கட்சி குருநாகலிலும், இ. தொ. கா. மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி நுவரெலியா, தலவாக்கலை மற்றும் லிந்துலவிலும் தமிழ்க் கட்சிகள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிலும் ஊர்வலம் மற்றும் கூட்டங்களை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வழக்கம் போல் இம்முறையும் கொழும்பில் முக்கிய ஊர்வலங்கள், கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இதற்கமைய இம்முறை கொழும்பில் மாத்திரம் 13 ஊர்வலங்களும், 17 கூட்டங்களும் நடைபெறவுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.சகல ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்களில் சுமார் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக எதிர்பார்ப்பதுடன் சுமார் 10 ஆயிரம் பஸ் வண்டிகளில் இவர்கள் அழைத்து வரப்படவுள்ளதால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடு கடமைகளுக்கு சுமார் ஆறாயிரம் பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெறவுள்ள மே தின ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்க மளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு நேற்றுக்காலை ஒல்கோட் மாவத்தையிலுள்ள கொழும்பு பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.நாடு முழுவதிற்குமான போக்கு வரத்து ஏற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்ன, கொழும்பு நகர் போக்கு வரத்துக்கான பொலிஸ் அத்தியட்சகர் சூலா டி சில்வா மற்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன ஆகியோர் கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில், எந்த கட்சியாக இருந்தாலும் பரவலாயில்லை. கொழும்பில் நடைபெறவுள்ள மேதின கொண்டாட்டத்தை சிறந்த முறையில் வழமைபோன்று எதுவித பிரச்சினைகளும் இன்றி நடத்தி முடிப்பதற்கானஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்க பொலிஸ் திணைக்களம் தயாராக உள்ளது.
ஊர்வலங்களில் கலந்துகொள்ள வருகை தரும் மக்களின் பாதுகாப்பை கருதி பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோனின் ஆலோசனைகளுக்கமைய திட்டமிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.சுமார் 10 ஆயிரம் பஸ் வண்டிகளில் ஆறு இலட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொள்ள வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த அனுர சேனநாயக்க, பாதுகாப்பு கடமையில் 3,000க்கும் அதிகமான பொலிஸாரும், போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு 2981 பொலிஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் 172 ரோந்து மோட்டார் சைக்கிள்கள் விசேட ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது என்றார்.
அன்றைய தினம் ஊர்வலம் மற்றும் கூட்டங்களில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளதாக அத்தியாவசிய தேவைகளை தவிர கொழும்புக்குள் வெளி பிரதேசங்களில் இருந்து வருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க கேட்டுக்கொண்டார்.இது தவிர அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் அம்பியுலன்ஸ்வண்டி, இலங்கை மின்சார சபை, நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, ஊடக நிறுவன வாகனங்கள், டொக்டர்கள், நோயாளிகள் தங்கு தடையின்றி செல்வதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
எனவே ஊர்வலம் செல்லும் சில வீதிகள் முழுமையாகவும், சில வீதிகள் குறிப்பிட்ட நேரத்திற்கும் மூடப்பட்டிருக்கும் எனினும் பொதுமக்கள் தங்கு தடையின்றி வந்து செல்வதற்கு தேவையான மாற்று வழி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்..ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான மேதின கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பொரளை கெம்பல் பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஊர்வலம் நெலும்பொக் குன மஹிந்த ராஜபக்ஷ கலையரங்குக்கு அருகில் ஆரம்பித்து கெம்பல் பார்க் வந்தடையவுள்ளது. மக்கள் ஐக்கிய முன்னணி ஊர்வலம் ஆயுர்வேத சந்தியில் ஆரம்பித்து கெம்பல் பார்க்கையும், ஸ்ரீலங்கா மக்கள் கட்சி மருதானை ஆனந்த கல்லூரிக்கு அருகில் ஆரம்பித்து கெம்பல் பார்க்கையும் வந்தடையவுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் ஊர்வலம் எஸ்.டி.எஸ். ஜயசிங்க மைதானத்தில் ஆரம்பித்து ஹெவ்லொக் டவுன் பி.ஆர்.சி. மைதானத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. முற்போக்கு சோசலிசக் கட்சி நவகம்புரவில் ஊர்வலத்தை ஆரம்பிது கொட்டாஞ்சேனை ரத்னம் மைதானத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளது.தேசிய சுதந்திர முன்னணி தெமட கொட புனித ஜோன் வித்தியால யத்திலிருந்து ஊர்வலத்தை ஆரம்பித்து பி. டி. சிறிசேன மைதானத்தில் கூட்டம் நடத்தவுள்ளது. தொழிற் சங்கங்களின் பொது சம் மேளனம் இலங்கை வங்கி ஊழியர் மாற்று சங்கம் கோட்டை புகையிரத முன்னால் ஊர்வலத்தை ஆரம்பித்து ஹய்ட்பார்க்கில் கூட்டத்தை நடத்தவுள்ளது. இலங்கை வங்கி சேவையாளர் சங்கம் ஜயந்த வீரசேகர வீதியில் ஊர்வலத்தை ஆரம்பித்து மாளிகாவத்தை பிரதீபா மண்டபத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளது.
பொது தொழிலாளர் சங்கம் கொள்ளுபிட்டியிலும், சுதந்திர வர்த்தக வலய பொது ஊழியர் சங்கம் வின்சன் பெரேரா மாவத்தையில் ஊர்வலத்தை ஆரம்பித்து பாயிஸ் மன்ஸில் நிலையத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளது. ஐக்கிய சோசலிச கட்சி ஊறுகொட வத்தையில் ஊர்வலத்தை ஆரம்பித்து கிரேன்ட் பாஸ் கொஸ்கொஸ் சந்தியில் கூட்டத்தை நடத்தவுள்ளது. நவசமசமாஜ கட்சி, சோசலிச கட்சி பிரைஸ் பார்க்கில் கூட்டத்தை நடத்தவுள்ளது.
கிரிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ கொள்ளுப்பிட்டியிலும் லங்கா சமசமாஜ கட்சியும், சோசலிச மக்கள் முன்னணியும் சாலிகா மைதானத்திலிருந்து ஊர்வலத்தை ஆரம்பித்து கிருலப்பனை நகர மைதானத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளன. ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கொச்சிக்கடையில் ஊர்வலத்தை ஆரம்பித்து மட்டக்குளி விஸ்வைக் மைதானத்தில் கூட்டத்தை நடத்தவுள்ளது.சோசலிச சமத்துவக் கட்சி கொழும்பு நகர மண்டபத்திலும், ஜுலை வேலை நிறுத்த காரர்களின் கூட்டமைப்பு பொது நூலகத்திலும், அரச ஓய்வூதியகாரர்களின் கூட்டு தேசிய அமைப்பு பொது நூலகத்திலும் நடைபெறவுள்ளது.இதேவேளை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவுதின நிகழ்வு வாழைத்தோட்டத்திலுள்ள அவரது உருவச் சிலைக்கு அருகிலும் இடம்பெறவுள்ளது.

பாரிஸில் நடைபெறவுள்ள மே தின ஊர்வலத்தில் இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் சர்வதேச தொழிலாளர் தினமான எதிர்வரும் மே முதலாம் திகதி

france may dayபிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறவுள்ள மே தின ஊர்வலத்தில் இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்களை கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளது. மே மாதம் முதலாம் திகதி புதன்கிழமை மாலை 2 மணியளவில்  பிளேஸ் டு லா பஸ்ற்றில் என்ற முகவரியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மே தின ஊர்வலத்தில் சர்வதேச தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து மறுக்கப்படும் எம் தேச மக்களின் உரிமைகளை உரக்கச் சொல்வோம் என்ற சுலோகத்துடன் ஆரம்பித்துள்ள துண்டுப்பிரசுரத்தில்  இலங்கையில் தீர்வு-- இனங்களுக்கு சமஉரிமை , அமைதி வேண்டி- அராஜகம் ஒழிப்போம், வேற்றுமை கடந்து ஐக்கியப்படுவோம், ஒன்றுபட்டு உரிமைகளை வெல்வோம், சுற்றுச்சூழல் மாசுபடுத்தோம் - பூமிக்கு ஆயுள் கொடுப்போம், உலக முற்போக்காளர்களுடன் கைகோர்ப்போம்- உரிமைகளுக்காய் குரல் கொடுப்போம் என்றவாறான கோசங்கள் ஒலிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் எம் தேச மக்களின் வாழ்வில் ஓர் மாற்றம் வேண்டி, உங்கள் கரம்பிடித்து, எம் மக்கள் துயர் போக்க உதயமாகியுள்ள இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம் வரலாற்று சிறப்புமிக்க மே தினத்தில் தனது முதலாவது செயற்திட்டமாக இந்த மே தின பேரணியை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக விடுதலைப் புலிகள் அமைப்பினை பிரநிதித்துவப்படுத்தும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பில் புலம்பெயர் தமிழர்கள் இந்த சர்வதேச தொழிலாளர்கள் தின பேரணியில் கலந்து கொள்வார்கள். ஆனால்   இம்முறை இலங்கையர் ஒருமைப்பாட்டு மையமும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக மே தின ஊர்வலத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

‘உதயன்’ பத்திரிகை காரியாலயம் தாக்கப்படுவதும், அதன் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் கோடிக்கணக்கான பண சப்றா பினான்ஸ்’ என்ற நிதி நிறுவனத்தில் மோசடியே


Udayan-News-Paperயாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகை காரியாலயம் தாக்கப்படுவதும், அதன் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த அளவுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வேறு எந்தப் பத்திரிகையும் தாக்கப்படவில்லை எனக் கூறலாம்.

இந்தப் பத்திரிகையின் உரிமையாளர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஈ.சரவணபவன். இவர் 1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்டு, பொதுமக்கள் வைப்பிலிட்ட பொதுமக்களின் கோடிக்கணக்கான பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவான ‘சப்றா பினான்ஸ்’ என்ற நிதி நிறுவனத்தில் முக்கியமான நிர்வாகியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மோசடி குறித்து பல வருடங்களாக மக்கள் பலரிடம் முறையிட்டும் இன்றுவரை எந்தவிதமான விசாரணையும் நடாத்தப்படாததுடன், பாதிக்கப்பட்வர்களுக்கு எவ்விதமான நிவாரணமும் வழங்கப்படவும் இல்லை. மிக அண்மையில்தான் இதுபற்றி அரசாங்கம் விசாரணை நடாத்த முன்வந்துள்ளதாகத் தெரிய வருகிறது.

உண்மையில் சரவணபவன் ‘உதயன்’ பத்திரிகையின் உரிமையாளராக இருந்தாலும், அவரது மைத்துனர் ந.வித்தியாதரன் தான் இந்தப் பத்திரிகையின் அச்சாணியாக இருந்து செயல்பட்டவர். ஆனால் கடந்த பொதுத் தேர்தலின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக நியமனம் கிடைக்கும் என வித்தியாதரன் எதிர்பார்த்திருந்த நிலையில், மைத்துனர் சரவணபவன் பின்கதவால் புகுந்து வேட்பாளர் நியமனம் பெற்று பாராளுமன்ற உறுப்பினராயும் ஆகிவிட்டதால், மைத்துனர்களுக்க்கிடையில் முரண்பாடு தோன்றி, ஒருவருடன் ஒருவர் பேச்சுவார்த்தைகூட வைக்காத அளவுக்கு நிலைமை முற்றியது. அதைத் தொடர்ந்து வித்தியாதரன் உதயன் பத்திரிகையிலிருந்து வெளியேறினார்.

அதன் பின்னர் வித்தியாதரன் கொழும்பிலிரு;து ‘டெயிலி மிரர்’ ஆங்கில நாளிதழ் தமிழில் நடாத்தும் ‘தமிழ் மிரர்’ என்ற இணையப் பத்திகையில் பணியாற்றுகின்றார். (அதனால்தான் ‘தமிழ் மிரர்’ இன்னொரு உதயனாக வெளிவந்து கொண்டிருக்கிறது)
இந்த நிலைமையால் அவர்களது குடும்பங்களுக்கிடையில் விரிசல் ஏற்பட்டதால், அதை ஈடுகட்டுவதற்கு நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் தனது மைத்துனர் வித்தியாதரனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக்கி பிராயச்சித்தம் தேடுவதற்கு சரவணபவன் முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, உதயன் அடிக்கடி ‘இனம்தெரியாத’ (இந்தப் பெயரில் முன்பு புலிகள்தான் படுகொலைகளைச் செய்து வந்தனர். இப்பொழுது வேறு யாரோ புலிகளது வழியைப் பின்பற்றுகிறார்கள் போலும்!) நபர்கள் தாக்கி வருவது குறித்து அதன் உரிமையாளர் சரவணபவனும், அவருக்கு ஆதரவான உள்நாட்டு சர்வதேச சக்திகளும் அரசாங்கத்தின் மீது வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதில் எவ்வளவு தூரம் உண்மை என்பது தெரியவில்லை.

ஆனால் மற்றப் பத்திரிகைகளை விட்டுவிட்டு உதயன் பத்திரிகை மட்டும் திரும்பத் திரும்பத் தாக்கப்படுவது ஏன், என்ற கேள்வி எழுகின்றது. இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே, அதாவது வித்தியாதரன் பொறுப்பாக இருந்த காலத்திலேயே, உதயன் பத்திரிகா தர்மத்தை மீறி பல தடவைகள் செயற்பட்டதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்துள்ளன. உதாரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்துடன் உதயன் பத்திரிகைக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்ட போது, தனக்கு இருந்த ஊடக பலத்தை வைத்துக்கொண்டு பொதுமக்களை பல்கலைக்கழகத்துக்கு எதிராகத் திருப்ப முயன்றனர்.

அதுமாத்திரமில்லாமல், யாழ்ப்பாணத்தில் உதயனைத் தவிர வேறு பத்திரிகைகள் வெளிவராக்கூடாது என்பதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல அச்சுறுத்தல் நடவடிக்கைகளை உதயன் மேற்கொண்டது.

உதயன் பத்திரிகை ஒருபோதும் ஊடக தர்மத்தின்படி நடந்தது கிடையாது. பொய் செய்திகளைப் பரப்புவது, அரசியல் ரீதியில் தமக்கு எதிரானவர்களுக்கு சேறு பூசுவது, மக்கள் மத்தியில் வதந்திகளைப் பரப்புவது போன்ற மாபியத்தனமான பாணியில்தான் உதயன் செயல்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் வாழ்கின்ற மக்களில் கணிசமான ஒரு பகுதியினருக்கு உதயன் மீது கோபம் உண்டு. அது தவிர உதயன் உரிமையாளர் சரவணபவன் பொதுமக்களின் பணத்தை மோசடி செய்த சப்றா பினான்ஸ் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக இருந்ததாலும், அதன் மீது பொதுமக்களுக்கு வெறுப்பும் உண்டு.

‘உதயன்’ செய்து வரும் விசமத்தனத்துக்கு தற்பொழுது அது செய்து வருகின்ற ஒரு செயல் நடைமுறை உதாரணமாக இருக்கிறது. அது என்னவெனப் பார்த்தால் உதயன் செய்து வரும் பத்திரிகா தர்மம் என்ன என்பது தெரிந்து விடும்.
saravanabavan
வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நேரடியாக மோத உள்ளன.

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பிரதான கட்சியான தமிழரசுக் கட்சிக்கும், ஏனைய பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால், அதன் தேர்தல் நோக்கம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

மறுபக்கத்தில் கடந்த காலங்களில் பொதுத் தேர்தல் உட்பட வடக்கில் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் அரசாங்கத்தின் ஒரு பங்காளிக் கட்சியான ஈ.பி.டி.பி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனேயே இணைந்து போட்டியிட்டு வந்துள்ளது. வட மாகாணசபைத் தேர்தலிலும் அந்த நிலைமைதான் தொடரப் போகின்றது. அதில் மாற்றம் எதுவும் ஏற்பட்டதாகத் இதுவரை தகவல் எதுவும் இல்லை.

அப்படியிருக்க சில நாட்களுக்கு முன்னர் உதயன் வெளியிட்ட ஒரு செய்தியில், ஈ.பி.டி.பி கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து விலகித் தனியாக வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக நம்பிக்கையாகத் தெரிய வந்ததாக ஒரு பொய் செய்தியைக் கட்டவிழ்த்துவிட்டது. அதைத்தான் பத்திரிகைகள் வழமையாகச் செய்யும் ஒரு கயிறு திரிப்பு என்று விட்டுவிட்டாலும், அது பின்னர் செய்திருக்கிற ஒரு வேலை உதயன் பத்திhகையின் உச்ச கட்ட விசமத்தனத்தையும், கபடத்தனத்தையும் தோலுரித்துக் காட்டியுள்ளது.

வழமையாக உதயன் ஏதாவது தனக்குத் தேவையான ஒரு விடயம் குறித்துக் கருத்துக்கணிப்பு நடாத்துவதும், தானே தனக்குச் சாதகமாக அதன் முடிவுகளை அறிப்பதும் ஒரு நகைச்சுவையான நாடகம். அண்மையில் ஜெனிவா மனித உரிமைப் பேரவைக் கூட்டம் நடந்தபோது, அது சம்பந்தமாக தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறிய ஒரு கருத்தை வைத்து, அவருக்கு எதிராக ஒரு கருத்துக் கணிப்பை நடாத்தியது. அதற்கு முதல் தனது சக பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கிரிக்கட் விளையாடியதை வைத்து அவருக்கு எதிராக சரவணபவன் உதயனில் ஒரு கருத்துக் கணிப்பை நடாத்தினார். (ஆனால் சரவணபவன் மட்டும் தனது மனைவி பிள்ளைகளுடன் ஜனாதிபதி அலரி மாளிகையில் நடாத்தும் விருந்துகளில் கலந்து கொண்டு கூடிக்குலாவி வருவார்)

இப்பொழுது அவர் அவர் நடாத்தும் விசமத்தனமான கருத்துக் கணிப்பு என்னவென்று பாருங்கள்!

வட மாகாணசபைத் தேர்தல் நடந்தால் அதில் வெற்றி பெறப் போவபர்கள் யார் என்று ஒரு கேள்வியைக் கேட்டு, பின்வரும் தெரிவுகளைக் கொடுத்துள்ளது உதயன்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு
ஈ.பி.டி.பி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
மேற்குறித்த எவரும் இல்லை

இந்தக் கேள்வி எடுத்துக் காட்டுவது என்ன? ஈ.பி.டி.பியும் அது அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் தனித்தனியாகத் தேர்தலில் போட்டியிடுகின்றன என்பதுதானே? அந்த இரண்டு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிடுவது என்ற முடிவு எடுக்கப்படவில்லை என்பது மட்டுமின்றி, அப்படி ஒரு கதைகூட அரசியல் அரங்கில் எங்கும் பேசப்படவுமில்லை.

அப்படி இருக்க உதயன் ஏன் இந்த விசமத்தனத்தைச் செய்துள்ளது? அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ள பிளவை மூடி மறைப்பது அதன் பிரதான நோக்கம். அதை மறைப்பதற்கு ஈ.பி.டி.பிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் இடையில் பிளவு என்று ஒரு பொய்ச் செய்தியை முதலில் பிரசுரித்தது. அதை மக்கள் நம்பமாட்டார்கள் என்பதால், மக்களை அந்தப் பொய்யில் பங்குபற்ற வைப்பதற்காக, ஒரு பொய் கருத்துக் கணிப்பையும் நடாத்துகின்றது. அத்துடன் தனது வழமையான பாணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அதிக ஆதரவு இருக்கின்றது என்று காட்டவும் முற்படுகின்றது.

இப்படியான விசமத்தனங்களைச் செய்யும் உதயன் மறுபக்கத்தில் தான் ஊடக தர்மப்படி செயல்படுவதால்தான், தன்மீது தாக்குதல் நடாத்தப்படுகிறது என ஒப்பாரியும் வைக்கிறது. அதை நம்பி அமெரிக்க அரசாங்கம் முதல் உள்ளுhர் கந்தையா அண்ணை வரை உதயனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்புகின்றனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தன்மீது உதயன் செய்த அவதூறுகளுக்காக 1000 கோடி ரூபா நஸ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடுத்ததாகவும், அதற்கு அஞ்சி உதயன் நிர்வாகம் சமரசத்துக்கு வந்ததாகவும் அண்மையில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் எத்தனை வழக்குகள் போட்டாலும், சப்றா புகழ் சரவணபவன் போன்ற ‘அஞ்சா நெஞ்சர்களை’ அசைக்க முடியாது. மக்களாக முன்வந்து ஏதாவது தீர்ப்பு வழங்கினால் மட்டும்தான் உதயனையும் அதன் உரிமையாளரையும் வழிக்குக் கொண்டுவர இயலும் போல் தோன்றுகிறது.   

lundi 29 avril 2013

சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு - பிரான்ஸ்

E-mail : comite_cdsi@yahoo.fr                                                                           

Contre toutes les  oppressions …..,
Vois des opprimés

La journée du travailleur, avec le peuple Sri lankais nousdemandons les revendications suivantes :

:- Nous demandons l’autonomie pour les peuples qui sont opprimés.

:- Nous demandons une solution politique et une égalité entre les peuples.

:- Nous demandons une enquête sur le génocide du peuple tamoul au Sri Lanka.

:- Nous demandons de retirer les troupes militaires dans les régions du Nord-Est du Sri Lanka et retirer immédiatement les zones d’hautes sécurités.

:- Nous demandons que chaque peuple ait le droit de vivre librement sur leur territoire sans être contrôler et retenu par l’armée, nous demandons la liberté.  

Comité de Défense Sociale International

E-mail : comite_cdsi@yahoo.fr

ஹிட்லர் ஒரு சைவப் பிரியர் .....விஷம் வைத்து கொன்று விடுவார்கள் என்ற பயந்த ஹிட்லர் .

தன்னை யாராவது விஷம் வைத்து கொன்று விடுவார்கள் என்ற பயந்த ஹிட்லர் தான் உண்ணும் உணவில் விஷம் கலந்துள்ளதா என்பதை அறிய 15 இளம் பெண்களை அந்த உணவை முதலில் சாப்பிட வைத்து பிறகு தான் சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. ஜெர்மனியை சர்வாதிகாரம் செய்த ஹிட்லர் இரண்டாம் உலகப் போரின் இறுதி கட்டத்தில் உல்ப்ஸ் லையர் என்னும் பாதுகாப்பான இடத்தில் இருந்தார். 

இந்த இடம் தற்போது போலந்தில் உள்ளது. அப்போது அவரிடம்இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்த மார்கட் வோயல்க் என்ற பெண் இத்தனை ஆண்டுகள் கழித்து தனது 95வது வயதில் தனது அனுபவங்களை உலகிற்கு தெரிவித்துள்ளார். 

மார்கட் இருபதுகளில் இருந்தபோது ஹிட்லரிடம் பணியாற்றியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஹிட்லர் ஒரு சைவப் பிரியர். அவரிடம் நான் பணிபுரிந்த காலத்தில் அவர் மாமிசம் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. இங்கிலாந்துக்காரர்கள் தன்னை விஷம் வைத்து கொன்றுவிடுவார்களோ என்று அவர் அஞ்சினார். அதனால் அவர் சாப்பிடும் முன்பு அவரது உணவை சாப்பிட்டு விஷம் உள்ளதா என்பதை கண்டறிய 15 இளம் பெண்களை பணியமர்த்தி இருந்தார். அதில் நானும் ஒருத்தி. போர் காலத்தில் மக்கள் உணவுக்கு கஷ்டப்பட்ட நேரத்தில் நாங்கள் ஹிட்லருக்கு வழங்கப்படும் சுவையான உணவை ருசி பார்த்தோம். ஆனால் அதில் விஷம் இருக்குமோ என்ற பயத்திலேயே அதை ரசித்து சாப்பிட்டதில்லை. ஒவ்வொரு வேளையும் உணவை சாப்பிடுகையில் இது தான் நம் கடைசி உணவு என்று நினைப்போம். போர் மோசமடைந்ததையடுத்து நான் பெர்லினுக்கு சென்றுவிட்டேன். அதன் பிறகு என்னுடன் பணிபுரிந்த 14 பேரையும் ரஷ்ய படை சுட்டுக் கொன்று விட்டதாக கேள்விப்பட்டேன் என்றார்.

சினிமாவே காரணம் வன்முறை எண்ணம் தோன்ற –உளவியல் நிபுணர் டாக்டர் சிவதாஸ்

குழந்தைகள் பிறக்கும்போதே சமூக விரோதிகளாக பிறப்பதில்லை. அவர்கள் வாழும் சூழலே அதற்கு வழிவகுக்கின்றது. சினிமா அதற்கு உறுதுணையாக அமைவதாக உளவியல் நிபுணர் டாக்டர் சிவதாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் 16 வயதான மாணவர்கள் தம் காதலை எதிர்த்த பெற்றோரை திட்டமிட்டுக் கொலை செய்த சம்பவம் அனைவரையும் திகிலடையச் செய்துள்ளதுடன் இதுபோன்று அண்மைக் காலமாக திட்டமிட்டுச் செய்யும் கொலைகள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பில் டாக்டர் சிவதாஸை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் மேற்கண்ட கருத்தினை முன்வைத்தார்.

சினிமா இன்று மக்களின் வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதுவே உண்மை. சினிமாவை வாழ்க்கையென நினைக்கும் இளைஞர்கள் அதில் காட்சிபடுத்தப்படும் வன்முறைகளுக்கு அடிமையாகியுள்ளார்கள். இந்த வகையில் சிறு வயது முதலே இவர்கள் மனதில் வெறுப்பு விதைக்கப்படுகிறது. வன்முறைகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கப்படுவதுடன் உயிருக்கான மதிப்பினைக் குறைத்தே தற்போதைய சினிமாக்கள் படம் பிடித்துக் காட்டுக்கின்றன. ஆகையினால் பணம், காதல் என்பவற்றை பெற்றுக் கொள்ள உயிரை துச்சமென நினைத்துக் கொலை செய்ய இன்றைய இளைஞர்கள் துணிந்து விடுகிறார்கள்.

இந்நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் உயிர், உறவு, கல்வி ஆகியவற்றின் முக்கியத்துவங்கள் சிறு வயது முதலே உணர்த்தப்படுவது அவசியம் என குறிப்பிட்டார்.

மேலும் பிள்ளைகளுடனான பிணைப்பை அதிகரிக்கும் வகையில் பெற்றோர் பிள்ளைகளுடன் சிறந்த உறவு முறையை பேணுவதும் கூட எதிர்காலத்தில் இது போன்ற சமூக விரோதிகளை உருவாக்குவதனை தடுக்க வழிவகுக்குமென உளவியல் நிபுணர் டாக்டர் சிவதாஸ் கூறிப்பிட்டார்.

நாங்களும் இலங்கை குடிமக்களே. ஆனாலும், அரசு தரும் சான்றிதழில் எங்களுக்கெல்லாம் இந்தியத் தமிழர்;துக்ளக்


see streetநமது நிருபர்கள் எஸ்.ஜே. இதயா, ஏ.ஏ. சாமி ஆகியோர் ஆறு நாட்கள் இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று, அங்குள்ள பல தரப்பினரிடமும் பேசி, செய்தி சேகரித்து வந்துள்ளனர். அதில் தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் குறித்து இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் பத்திரிகைகளின் கருத்துக்கள் கடந்த இதழில் வெளியாகின. இந்த இதழில் கொழும்பு, கண்டி மற்றும் கிழக்கு மாகாணத் தமிழர்களின் கருத்துக்கள் இடம் பெறுகின்றன.
‘இலங்கைக்குப் போகிறோம்’ என்றதுமே சில உறவினர்களும், நண்பர்களும், ‘இப்படிப் பிரச்னையாய் இருக்கிற சமயத்தில் நீங்கள் ஏன் அங்கே போகிறீர்கள்? ஏன் இந்த ரிஸ்க்?’ என்று பயமுறுத்தினர். ஆனால், அங்கு எங்களை வரவேற்கக் காத்திருந்த தமிழ் நண்பரோ, ‘இங்கு துளியளவும் ரிஸ்க் இல்லை. நம்பி வரலாம்’ என்று தைரியமூட்டினார். அவர் சொன்னபடியே நாங்கள் கொழும்பு சென்றடைந்தபோது, எந்தப் பதட்டமுமின்றி எல்லோரும் இயல்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சூழல் என்பதால், இந்தியத் தமிழருக்கு விமான நிலையத்தில் சிறப்புச் சோதனைகளோ, ஆய்வுகளோ இருக்கலாம் என்று ஊகித்திருந்த எங்களுக்கு, அப்படி அங்கு ஏதுமில்லை என்பதே ஆச்சரியமாக இருந்தது.
ஈஸ்டருக்கு முந்தைய இரவு என்பதால், வழி நெடுகிலுமுள்ள கிறிஸ்தவ சர்ச்கள் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பீச்சில் இரவு பிரார்த்தனைக்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. “இலங்கையைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளாமல், பிறர் சொல்வதை மட்டுமே கேட்டுக் கொண்டு தமிழகத்தில் பலர் இயங்குவதுதான் பிரச்னை. அதில் ஒன்று, சிங்களர் என்றாலே பௌத்தர்கள் மட்டும்தான் என்பது. ஆனால், சிங்களவர்களில் சுமார் 10 சதவிகிதம் பேர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். தமிழ் இனவாதம், பௌத்த மதவாதம் என்று தமிழகத்தில் மொத்தமாகக் குழப்பிக் கொள்கிறார்கள்.
“இங்கு பௌத்த மதவாதம் சிலரிடம் இருக்கிறது. ‘பொதுபல சேனா’ என்ற அமைப்பு, சமீப காலமாகப் பௌத்த மதவெறியைத் தூண்டும் வகையில் நடந்து கொள்கிறது. சகல கட்சிகளும் இதைக் கண்டிக்கின்றன. ராஜபக்ஷ கூட இதைக் கண்டிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார். ஆனால், பௌத்த மதவாதத்தால் பாதிக்கப்படுவது தமிழர்கள் மட்டும்தான் என்பது போன்ற எண்ணம் தமிழகத்தில் உருவாக்கப்படுவதால்தான், அங்கு புத்த பிட்சுகள் தாக்கப்படுகின்றனர். ஆனால், பௌத்த மதவாதம் எழுந்தால் அதில் பாதிக்கப்படுவது தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கை முஸ்லிம்களும், சிங்கள கிறிஸ்தவர்களும் கூடத்தான்” என்றார் எங்கள் நண்பர்.
கொழும்பு நகரத்தில் உள்ள மெயின் ரோடு மற்றும் ஸீ தெருவில் பலரோடு பேசினோம். 90சதவிகித கடைகள் தமிழ்க் கடைகள்தான். நகைக் கடைகளுக்கும், ஜவுளிக் கடைகளுக்கும் முதலாளிகள், தொழிலாளிகள் எல்லாமே தமிழர்கள்தான். அவர்களிடமெல்லாம் பேசியபோது, “போர் முடிவுக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இலங்கையில் அமைதி திரும்பி, எல்லோரும் நிம்மதியாக வாழத் துவங்கி விட்டார்கள். தமிழகம் தயவு செய்து மீண்டும் ‘தமிழீழம்’ என்று ஆரம்பித்துக் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்றே பெரும்பாலோர் சொன்னார்கள்.
ஆனால், அவர்கள் எல்லோருக்குமே ‘தமிழர்கள் இலங்கையில் சமமாக மதிக்கப்பட வேண்டும்’ என்ற ஆசை இருக்கிறது. அதற்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தற்போது நடக்கும் போராட்டங்கள், தங்களின் ஆசைக்கும் எதிர்பார்ப்பிற்கும் இடையூறாக இருக்குமென்றே அவர்கள் நினைக்கிறார்கள்.
நாங்கள் சந்தித்த தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சாமான்ய மக்கள் எல்லோருமே தமிழக அரசியல்வாதிகளின் பேச்சுக்களையும், போராட்டங்களையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. கருணாநிதி மத்திய அரசை விட்டு விலகியதையும், ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதையும் அவர்கள் தமிழக அரசியலாகத்தான் பார்க்கிறார்கள். மாணவர்களின் போராட்டத்தை மட்டுமே அவர்கள் மரியாதையாகக் குறிப்பிட்டார்கள். ‘மரியாதை செய்கிறோம்; தலைவணங்குகிறோம்’ என்று மாணவர் போராட்டங்கள் குறித்துக் கருத்து தெரிவித்த அவர்கள், ‘ஆனால், மாணவர்கள் இங்குள்ள நிலைமை தெரியாமல் போராடி, தங்கள் படிப்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டாமே?’ என்று அக்கறையோடு குறிப்பிட்டனர்.
‘தமிழகத்தில் நடக்கும் போராட்டம், இலங்கையில் தமிழர்கள் எதிர்பார்க்கும் இலக்கு நோக்கி அமையாமல் இருப்பதால், அது வீணாகப் போகிறதே’ என்ற ஆதங்கத்தை அவர்களிடம் உணர முடிந்தது.
பொதுவாக, போர் நடந்த காலத்திலேயே கொழும்புவில் உள்ள தமிழர்vaiko-5கள், ‘தனி ஈழம்’ குறித்து ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. எங்களிடம் பேசிய ஜுவல்லரி முதலாளி ஒருவர், “முதலில் தமிழகத்தில் உள்ளவர்கள், இலங்கைத் தமிழர்கள் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும். இங்கு இந்திய வம்சாவழித் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ் பேசும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்திய வம்சாவழித் தமிழர்களிலேயே தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் மலையகத் தமிழர்கள், தனிப் பிரிவு போல் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஈழத்தோடு தொடர்பில்லை. இவர்களெல்லாம் ஈழத் தமிழர்கள் இல்லை.
“வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் மட்டுமே ஈழத் தமிழர்கள். நாங்களும் இலங்கை குடிமக்களே. ஆனாலும், அரசு தரும் சான்றிதழில் எங்களுக்கெல்லாம் இந்தியத் தமிழர் (India - Tamil) என்றே பெயர் இடப்படும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழருக்கு மட்டும்தான் இலங்கைத் தமிழர் (Lanka - Tamil) என்ற பெயர் இடம் பெறும்.
“ஈழத் தமிழர்களுக்குத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மனோபாவம் உண்டு. இந்திய வம்சாவழித் தமிழர்களை அவர்கள் பெரிதாக மதிக்க மாட்டார்கள். கொழும்புவில் வந்து தொழில் செய்யும் ஈழத் தமிழர்கள் மீது கூட அவர்களுக்கு கோபம் ஏற்படுவதுண்டு. விடுதலைப் புலிகள் தமிழ் ஈழத்திற்கான எல்லைகளை வகுத்துக் கொண்ட போது, சுமார் 8 ஆயிரம் முஸ்லிம் தமிழ்க் குடும்பங்களை 24 மணிநேரம் மட்டுமே கெடு கொடுத்து, வட மாகாணத்தை விட்டு வெளியேறச் செய்தனர். அந்த முஸ்லிம் தமிழ்க் குடும்பங்கள் எல்லாம், வெறும் பாலிதீன் பைகளில் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு, பெண்களையும் குழந்தைகளையும் கையில் பிடித்துக் கொண்டு வடக்கு மாகாணத்தை விட்டு வெளியேறிய துயரத்தை யாரும் மறக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது. இதனாலேயே ஈழப் போராட்டம் துவங்கியது முதலே, இந்திய வம்சாவழித் தமிழரோ, முஸ்லிம் தமிழரோ, மலையகத் தமிழரோ அதற்கு ஆதரவாக இருக்கவில்லை” என்று விளக்கினார்,
அந்த ஜுவல்லரி முதலாளி. கதிரேசன் தெருவில் உள்ள ‘சரவணா ஸcolombo street்டோர்ஸ்’ என்ற கடைக்கு வந்த தமிழர்களிடம் உரையாடினோம். ‘இலங்கையில் நாங்கள் சமமாக நடத்தப்படவில்லை’ என்றே பெரும்பாலான தமிழர்கள் தெரிவித்தனர். ‘சம உரிமை பெற்றுத் தர இந்தியாவும், தமிழ்நாடும் முயற்சி எடுத்தால் மகிழ்வோம்’ என்று அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், ‘தமிழ் ஈழம் கோரிக்கை காலம் கடந்தது. இனி சாத்தியப்படாது’ என்று மிகத் தெளிவாக அவர்கள் குறிப்பிட்டனர். தமிழகத்தில் காலம் கடந்து நடத்தப்படும் ‘தனி ஈழம்’ தொடர்பான போராட்டம் தங்களுக்குக் கெடுதல் செய்யும் என்றே அவர்கள் பயப்படுகிறார்கள்.
“கொழும்பு நகரில் தனி ஈழம் தொடர்பாக வன்முறைகள் வெடித்ததில்லை. விடுதலைப் புலிகள்தான் அவ்வப்போது இங்கு வந்து வெடிகுண்டுகளை வைப்பதும், மனித வெடிகுண்டுகளை அனுப்புவதுமாக இருந்தனர். ஒருமுறை, மும்பைத் தாக்குதலைப் போல, கைகளில் துப்பாக்கிகளை ஏந்தி கண்மண் தெரியாமல் சுட்டபடி வந்தனர். மற்றபடி கொழும்பு நகரில் தமிழர் – சிங்களர் மோதல்கள் பெரிதாக வெடித்ததில்லை” என்றார் தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர்.
மேலே சொல்லப்பட்ட கருத்துக்களை எல்லாம் நாங்கள் மட்ட களப்பு மற்றும் கண்டிக்குச் சென்றபோது, மேலும் உறுதி செய்து கொள்ள முடிந்தது.
கண்டி பகுதி தேயிலைத் தோட்டம் ஒன்றில் வரிசை வீடுகளில் வாழும் மலையகத் தமிழர்களிடம் பேசினோம். இரவு நேரம் என்பதால், ஆண்கள் பெண்கள் எல்லோரும் கூட்டமாகக் குழுமி எங்களிடம் பேசினார்கள். “ஈழம் வேண்டும் என்று நாங்கள் போராடியதில்லை. காரணம் அப்படி தமிழருக்கென்று ஒரு நாடு அமைந்திருந்தால் கூட, அதில் எங்களுக்கு இடம் தரப்பட்டிருக்காது. வட மாகாணத் தமிழர்கள் எங்களை அந்நியமாகத்தான் வைத்திருந்தார்கள். எங்கள் தமிழும், அவர்கள் தமிழுமே வித்தியாசமாக இருக்கும். நாங்கள் யாழ்ப்பாணம் பகுதிகளுக்குப் போனால் கூட, அவர்கள் எங்களை உதாசீனமாகத்தான் பார்ப்பார்கள். ஆனால், அந்தப் பகுதிகளில் சுனாமி தாக்குதல்கள் நடந்தபோது, நாங்கள் இங்கிருந்து பொருட்களை எல்லாம் திரட்டி அங்கு அனுப்பி வைத்து உதவினோம்.
“அவர்களில் பலர் புலம் பெயர்ந்து, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் மிக வசதியாக வாழ்கிறார்கள். அவர்கள் இங்குள்ள வட மாகாணத் தமிழர்களுக்கு உதவுகிறார்கள். எனவே, வட மாகாணத்தில் பலர் வசதியாக இருக்கிறார்கள். நாங்கள்தான் மிகுந்த கஷ்டத்தில் வாழ்கிறோம். எங்கள் இளைய சமுதாயம், தோட்ட வேலையை விட்டு விட்டு நகரத்தில் வேறு பல வேலைகளுக்குச் செல்கிறார்கள். தனி ஈழம் என்றில்லாமல், தமிழர்களுக்குச் சம உரிமை என்பது போன்ற தீர்வு வந்தால், அது இலங்கையில் இருக்கும் எல்லா தமிழர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்கள் அவர்கள்.
மட்டக்களப்பு தமிழர்களும் தனி ஈழம் குறித்து ஆர்வம் இல்லாமலே பேசினார்கள். “கிழக்குப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அமைதி திரும்பி விட்டது. போரிலிருந்து விடுபட்டு, இருமுறை தேர்தலைச் சந்தித்து விட்டோம். இங்கு கொஞ்ச நஞ்சம் பேருக்கு இருந்த தனித் தமிழ் ஈழ ஆசையும், வன்னி பகுதியில் நடந்த உயிரிழப்புகளைப் பார்த்துக் கரைந்து காணாமல் போய்விட்டது. அரசியல் தீர்வு மூலம் போதிய அதிகாரம் கிடைத்தாலே போதும் என்ற மனோபாவம் எல்லோருக்கும் வந்து விட்டது. தமிழகத்தில் நடக்கும் போராட்டம் அந்தக் கோணத்தில் அமைந்தால், அதுதான் யதார்த்தமாகவும் எங்களுக்குப் பலன் தரும் வகையிலும் இருக்கும்” என்கிற ரீதியிலேயே பலரும் பேசினார்கள்.
கிழக்கு மாகாணமும், ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் பிடியில்தான் இருந்தது. ஆனால், கர்ணா வெளியேற்றத்திற்குப் பிறகு புலிகள் அமைப்பு அங்கு பலம் இழந்தது. இதனால் 2007-ல் கிழக்கு மாகாணம் ராணுவத்தின் வசம் வந்தது.
“இந்தக் கிழக்கு மாகாண மக்கள் தொகை தமிழர், தமிழ் முஸ்லிம்கள், சிங்களர்கள் – என்ற வரிசையில் அமைந்திருந்தது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்தப் பகுதி, புலிகளின் பிரதேசமாகவே இருந்தது. அப்போது இங்கிருந்த சிங்களர்கள் பலர் துரத்தியடிக்கப்பட்டனர். ஈழத்தை விரும்பாத தமிழ் பேசும் முஸ்லிம்களும் துரத்தப்பட்டனர்; சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால், முஸ்லிம்கள் சுமார் 35 சதவிகிதம் பேர் என்பதால், புலிகளால் முஸ்லிம்களை முழுமையாக அப்புறப்படுத்த முடியவில்லை. முஸ்லிம்கள் ராணுவத்திற்கு ஆதரவாக இருந்தனர். இதனால் கிழக்கு மாகாணத்தில் புலிகளால் நீண்டகாலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதனால் பகுதி பகுதியாக அவர்களின் ஆதிக்கம் குறைந்து, 2007-ல் முழுமையாகப் புலிகளிடமிருந்து விடுபட்டது” என்றார் மட்டக்களப்பைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கடைக்காரர்.
1990-ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு அருகில் உள்ள காத்தாங்குடி மKattankudy incidentற்றும் ஏறாவூர் நகரங்களில், முஸ்லிம்கள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூடுதான் முஸ்லிம் – தமிழர் ஒற்றுமையைக் குலைத்துப் போட்டது என்று கூறப்படுகிறது. 3.8.90 அன்று வெள்ளிக்கிழமை இரவு 8.10 மணிக்கு காத்தாங்குடி பள்ளிவாசலிலும், ஏறாவூர் பள்ளிவாசலிலும் ஒரே நேரத்தில் தொழுகையின்போது விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 103 முஸ்லிம்கள் பலியாயினர்.
காத்தாங்குடி பள்ளிவாசலுக்கு நாங்கள் சென்றிருந்தோம். சம்பவம் நடந்து 23 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், அங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டின் அடையாளங்களைச் சரி செய்யாமல் அப்படியே வைத்துள்ளார்கள். பள்ளிவாசலின் உட்புறச் சுவர்களில் புல்லட்டுகளின் அடையாளங்கள் இன்னும் அப்படியே உள்ளன. சம்பவம் நடந்த அன்று அங்கு தொழுகையில் இருந்தபோது உயிர் தப்பிய முகமது இப்ராஹிம் என்பவரைச் சந்தித்தோம்.
“நாங்கள் ஈழத்தை ஆதரிக்கவில்லை என்ற கோபம் புலிகளுக்கு இருந்தது. ஏற்கெனவே வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை வெளியேற்றியது போல், இங்கும் வெளியேற்ற முயற்சி செய்தார்கள். ஆனால், இங்கு நாங்கள் குறிப்பிட்ட இடங்களில் மொத்த மொத்தமாகக் குடியிருந்ததால், அவர்களால் எங்களை எளிதாக அப்புறப்படுத்த முடியவில்லை. நாங்களும் விழிப்புக் குழு ஒன்றை ஏற்படுத்தி வைத்திருந்தோம். இரவு 10 மணி முதல் விடியும் வரை எங்கள் இளைஞர்களின் குழு ஊரைப் பாதுகாக்கும். ராணுவத்தினரும் எங்கள் பகுதிகளில்தான் பாதுகாப்பாக இருப்பார்கள்.
“கடைகளில் சாமான் வாங்க முஸ்லிம் பகுதிகளுக்குத்தான் எல்லா ராணுவ வாகனங்களும் வந்து போகும். பயந்து பயந்துதான் வாழ்ந்து வந்தோம். அன்றைக்கு வெள்ளிக் கிழமை நாங்கள் எல்லாம் இஷா நேரத் தொழுகையை தொழுது கொண்டிருந்தபோது, இலங்கை ராணுவ உடையில் வந்த விடுதலைப் புலிகள், பள்ளிவாசலின் எல்லா வாசல்களிலும் சுற்றி நின்று கொண்டு, இஷ்டத்திற்கு சுட்டுத் தீர்த்து விட்டு ஓடிப் போனார்கள். காயம்பட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச் செத்தவர்கள் மட்டும் 78 பேர். அதில் எனது 10 வயது மகன் அஷ்ரஃபும் ஒருவன்” என்று கண் கலங்கினார் அவர்.
அருகில் இருந்த இளைஞர் ஒருவர், “பாலசந்திரன் என்ற பாலகனுக்கு மனமிரங்கும் தமிழ் உள்ளங்கள், இந்தப் பத்து வயது அஷ்ரஃபுக்கும் மனமிரங்கத்தானே வேண்டும்?” என்று கேட்டார்.
அருகிலிருந்த எம்.சி.எம். அமீன் என்பவர், “நானும் சம்பவத்தின்போது இருந்தவன்தான். நாங்கள் அடுத்த ஊருக்குப் போவதென்றால் கூட, மொத்தமாகக் காத்திருந்து ராணுவப் பாதுகாப்போடுதான் போவோம். அப்படி ஒரு நரக வாழ்க்கை வாழ்ந்தோம். இன்றுதான் நிம்மதியாக இருக்கிறோம். தமிழர்களும் (ஹிந்துக்கள்), நாங்களும் புட்டு மற்றும் தேங்காய்ப்பூ போலத்தான் இருந்தோம். புட்டு அவிக்கும்போது அந்தக் குழாயில் கொஞ்சம் மாவைத் திணிப்பார்கள். பின்னர் கொஞ்சம் தேங்காய்ப்பூ தூவுவார்கள். பின்னர் மீண்டும் மாவு மீண்டும் தேங்காய்ப்பூ. இப்படித்தானே புட்டு தயாரிப்பார்கள்? அப்படித்தான் நாங்களும் ஹிந்துக்களும் ஒரே தமிழ் மொழி பேசும் சகோதரர்களாக இருந்தோம். புலிகள் வந்த பிறகுதான் இதில் விஷத்தைக் கலந்தார்கள். தங்களை ஆதரிக்காத முஸ்லிம்களையும், பிற தமிழ்த் தலைவர்களையும் கொன்று குவிக்க ஆரம்பித்தனர். 1986-ல் ஒரு முஸ்லிம் குடும்பத்தை அவர்கள் உயிரோடு எரித்தது முதல் எல்லாம் தலைகீழாகி விட்டது” என்றார்.
அந்தப் பள்ளிவாசல் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு நினைவுக் கல் நிறுவுவதற்குக் கூட, அவர்கள் பல ஆண்டுகளாகப் பயந்தே இருந்திருக்கிறார்கள். இறுதிப் போர் முடிந்து அமைதி திரும்பிய பிறகு, 2010-ல்தான் காத்தாங்குடியில் பலியான 78 பேருக்கும், ஏறாவூரில் பலியான 25 பேருக்குமாய் மொத்தம் 103 பேருக்கு அந்தப் பள்ளிவாசலில் நினைவுக்கல் எழுப்பியிருக்கிறார்கள்.
ஆக, நாங்கள் பார்த்த வரையில் கொழும்பு மற்றும் கண்டி தமிழர்கள் எப்போதும் போரைச் சந்திக்கவில்லை; விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. எனவே, போரின் பாதிப்போ, விடுதலைப் புலிகளின் ஆதரவோ அங்கு காணப்படவில்லை. கிழக்கு மாகாணத்தில் ஒரு கட்டம் வரை புலிகள் மீதான ஆதரவும், தமிழ் ஈழ ஆதரவும் தமிழ் மக்களிடம் இருந்துள்ளது. ஆனால், போரின் விளைவுகளாலும், இந்திய அமைதிப்படையின் வருகைக்குப் பிறகும், புலிகள் ஆதரவு அங்கு படிப்படியாகச் சரிந்து, ஈழ கோரிக்கை வலுவிழந்து விட்டது. 2012 தேர்தலில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பே தனது தேர்தல் அறிக்கையில், தனி ஈழக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டது.
போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், முள் வேலி முகாம்கள், பிடிபட்ட புலிகளின் சித்ரவதைக் கூடங்கள், தமிழர்களின் மீள் குடியேற்றம், சிங்கள புது குடியேற்றம், ஹிந்து கோவில்கள் அழிப்பு, புதிய புத்தர் கோவில்கள், ஊர்களின் தமிழ்ப் பெயர் மாற்றங்கள்... என்று பல கடுமையான குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகிற வடக்கு மாகாணத்தில் பயணம் செய்த நமது நிருபர்களின் அனுபவங்கள் அடுத்த இதழில்..

dimanche 28 avril 2013

வெற்றியின் விளிம்பில்இருந்த தமிழ் இனத்தை இந்தியாவுக்கு விரோதமாக தூண்டிவிட்டு, இந்திய தீர்வுத்திட்டத்தை குழப்பி, விடுதலைப் புலிகளிடம் கபட நாடகம் ஆடியவர்கள் யார்?

1. 1983 இல் தமிழ் மக்களின் இதய பூமியாக விளங்கிய மணலாறு பிரதேச மக்களை விரட்டியடித்து சிங்கள குடியேற்றங்களை உருவாக்கியது யார்? 

2. அம்பாறையில் சேனநாயக்க சமுத்திரத்தினை உருவாக்கி, கல்லோயா என்ற சிங்கள குடியேற்றத்தினை உருவாக்கியது யார்? 

3. திருமலையில் கிளிவெட்டி, சம்பூர், சேருவில தமிழ் மக்களை நடுத்தெருவிற்கு வர திட்டம் தீட்டியவர்கள் யார்? 

4. தமிழ் பிரதேசம் எங்கும் வலி.வடக்கு உட்பட அதியுயர் பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி, தமிழ் மக்களை உள்ளுர் அகதிகள் ஆக்கியவர்கள் யார்?

5. 1990ஆம் ஆண்டு வெற்றியின் விளிம்பில்இருந்த தமிழ் இனத்தை இந்தியாவுக்கு விரோதமாக தூண்டிவிட்டு, இந்திய தீர்வுத்திட்டத்தை குழப்பி, விடுதலைப் புலிகளிடம் கபட நாடகம் ஆடியவர்கள் யார்?

6. நிராயுதபாணிகளான தமிழ் மக்களிடம் 'போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்' என்று போர் முழக்கம் செய்தவர்கள் யார்?

7. தமிழ் மக்களின் பாரம்பரிய சொத்தாக, உலக மக்களின் அறிவு கருவூலமாக இருந்த, ஆசியாவிலே பெரிய நூலகமான யாழ் நூலகத்தை எரித்தவர்கள் யார்? 

8. சன்னிதியானின் தேரை எரித்து சாம்பலாக்கியது யார்? 

9. மகாவலி நீரை வடக்கே வரவிட்டால் தமிழர்கள் விவசாயத்தில் முன்னேறி விடுவார்கள் என்ற வஞ்சக நோக்குடன் மகாவலி திட்டத்தினை வடக்கிற்குள் செல்லவிடாமல் தடுத்தவர்கள் யார்? 

10. விடுதலைப்புலிகளை சமாதான வலையில் விழச்செய்து, தமிழரின் இராணுவ பலத்தை சூறையாடியவர்கள் யார்? 

இத்தனையும் போதுமா? இல்லை நான் இன்னும் சொல்ல வேண்டுமா?

ஐக்கிய தேசிய கட்சியானது தமிழர்களை பொறுத்தவரை ஒரு சதிகார கட்சி, தமிழர்களின் நிலங்களைப் பறித்து, தமிழர்களின் வாழ்வுரிமைகளைப் பறித்து, தமிழர்களின் கலாச்சாரத்தினை அழித்து, தமிழர்களின் பூர்வீக வாழ்விடங்களை பறித்தது மட்டுமல்ல, சமாதானம் என்ற பொறிக்குள் தமிழ் மக்களின் போரட்டத்தினை தள்ளி, தமிழ் மக்களின் இராணுவ பலத்தை சிதைத்த கட்சியாகும். எனவே ஐக்கிய தேசியக் கட்சியையும், ரணில் விக்கிரமசிங்கவையும் தமிழர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். 

இந்திய இராணுவத்துடன் இணைந்து பல்வேறு தமிழ் இளைஞர்களை படுகொலை செய்த, தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்த, மண்டையன் குழுத்தலைவன் சுரேஷ்பிரேமச்சந்திரன் எதற்காக ரணிலுடன் இரகசியச் சந்திப்பு செய்திருக்கிறார்? 

மீண்டும் தமிழ் இளைஞர்களை அழிவிற்குள் தள்ளவா? அவர்களுக்கு மீண்டும் புதைகுழி தோண்டவா? நீங்கள் புல்லுக்குளத்திற்குள் தமிழ் இளைஞர்களை புதைத்து விட்டு அசோகா கோட்டலுக்குள் உல்லாசமாக இருந்ததை மறந்து போவதற்கு யாழ்ப்பாணத் தமிழன் என்ன மடையனா? 

சுரேஷ் ஐயா நீங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக அச்சுவேலிக்கு தேல்தல் பிரச்சாரத்திற்கு சென்ற வேளை என்ன நடந்தது என்பதனை தாங்கள் மறக்கக்கூடாது. அப்போது புலிகள் இருந்ததால் உங்களை மக்களிடமிருந்து காப்பாற்ற முடிந்தது. இப்போது அது நடக்காது.

இந்திய அமைதி காக்கும் படையுடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதற்காக நீங்கள் நடத்திய கோப்பாய், அச்சுவேலி வதை முகாம்களை தமிழ் மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள். 

நரி வடைக்கு ஆசைப்படலாம், நரியும், காகமும் சேர்ந்து தயிர்வடைக்கும், தக்காளி சட்னிக்கும் ஆசைப்படுவது போல் உள்ளது உங்களின் வடமாகாண ஆட்சிக்கனவு. 

உங்கள் கனவை தமிழ் மக்கள் நிச்சயம் கலைப்பார்கள். 

இவ்வண்ணம்
வி.சகாதேவன்
தலைவர்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மேற்படி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

நேற்று சனிக்கிழமை மாலை திருகோணமலையில் நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) மாநாட்டின் போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மத்திய குழு கூட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து மத்திய குழுவினால் தீர்மானிக்கப்பட்ட விடயங்கள் வெளியிடப்பட்டன. அத்தீர்மானங்கள் பின்வருமாறு,

• தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக உழைக்கக்கூடிய அரசியல் கட்சிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் இயங்கி வந்தாலும் இலங்கை தேர்தல் திணைக்களத்தில் ஒரு அரசியல் முன்னணியாகவோ தனி அரசியல் கட்சியாகவோ பதிவு செய்யப்படவில்லை.

• பதிவு செய்வதற்கான இழுபறி நிலைகளை நீக்குவதற்கு மன்னார் இராஜப்பு ஜோசப் ஆண்டகை தலைமையிலான புத்திஜீவிகள், சிவில் சமூகம் எடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஆதரவை வழங்குவது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலைகளை எட்டுவதற்காக முழு முயற்சிகளை எடுக்க வேண்டும். 

• ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் ஆகிய கட்சிகளுடன் ஒற்றுமையை பலப்படுத்த முழு முயற்சிகள் இரு வாரங்களுக்குள் எடுக்கப்பட வேண்டும். 

• இந்த முயற்சிகள் வெற்றிபெறமுடியாத சூழ்நிலையேற்படுமிடத்து இதுவரை இணக்கம் கண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட், டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் விரைவில் ஒரு முன்னணியாக, தனி அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட வேண்டும்.

• தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டதன் பின்னர் இதில் சேர விரும்பும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தக்கூடிய ஏனைய கட்சிகளையும் இணைத்து தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் தீர்வொன்றை வென்றெடுக்க வேண்டும்' என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

துமிந்த சில்வாவின் விடுதலையானது பிழை ஹிருனிக்கா

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலையானது, இலங்கையில் நீதித்துறை பிழையாக வழிநடத்தப்படுகின்றமைக்கான சான்றாக அமைந்துள்ளது என்று கொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்தநிலையில் நடைமுறை அரசாங்கத்தின் சட்டம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே துமிந்த சில்வாவினால் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தமது தந்தையான பாரத லக்ஸ்மனின் ஆதரவாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறான நிலையில் துமிந்த சில்வாவின் விடுதலை மேலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஹிருனிக்கா குறிப்பிட்டுள்ளார்.

சட்டக்கல்லூரியின் மாணவி என்ற நிலையில் இது நாட்டின் நீதித்துறைக்கு அச்சுறுத்தலான விடயம் என்றும் ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் இன்னும் துமிந்த சில்வா, முழுமையாக குணமடையவில்லை என்று கூறப்பட்டது.

எனினும் பாரிய சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட துமிந்த சில்வா நேற்று மருத்துவமனையில் இருந்து வெளியேறியபோது அவர் பழைய உருவத்தில் எவ்வித மாற்றங்களையும் காணமுடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை


செங்கல்பட்டு சிறப்பு முகாமிலிருந்து விடுதலை பெற எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில் சசிதரன் (21) என்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.
அவர் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கை அகதிகளில், போராளி இயக்கத்தில் இருந்தவர்களும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நீதிமன்றத்தில் வழக்குகளை சந்தித்து வருபவர்கள் அல்லது சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என சிலரும் சென்னையை ஒட்டிய பூவிருந்தவல்லி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட பாதுகாப்புடன் கூடிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.இதனிடையே, செங்கல்பட்டு முகாமிலுள்ள மூன்றுபேர் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 11 நாட்களாக உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இரண்டு முகாம்களிலும் சுமார் 46 பேர் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர். இப்படி அடைக்கப்பட்டிருப்பவர்கள் தங்களை விடுவிக்ககோரி அடிக்கடி போராட்டம் நடத்திவந்துள்ளனர். தங்கள் மீதான வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தங்களை இந்த முகாம்களிலிருந்து விடுவித்து வழமையான அகதிமுகாம்களில் இருக்கும் தத்தம் குடும்பத்தினருடன் வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிவருகின்றனர்.
போலீசாரோ, இவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்படவேண்டியவர்கள் என்றும் இவர்களை இந்த உயர்பாதுகாப்பு முகாம்களை விட்டு வெளியில் விடமுடியாது என்றும் வாதாடி வருகின்றனர்.
பல்வேறு போராட்டங்களின் விளைவாக, சில அகதிகள் சிறப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுமுள்ளனர், ஆனால் மேலும் பலர் அங்கே அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே சசிதரன் என்பவர் இன்று ஞாயிறு காலை நஞ்சருந்தியிருக்கிறார். தனது கோரிக்கைகள் ஏற்கப்படாததால் வேறு வழியின்றியும் தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக சசிதரன் கடிதம் எழுதி வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
அவரது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

samedi 27 avril 2013

அடித்தட்டு மக்களின் மானத்தை வைத்து காசு பார்க்கும் சொல்வதெல்லாம் உண்மை;தமிழ் பேசும் மக்கள் சங்கம்

அடித்தட்டு மக்களின் மானத்தை வைத்து காசு பார்க்கும் ஜீதமிழ் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தடை செய்ய உங்களின் உதவி தேவை படுகிறது. தயவு செய்து உதவுங்கள்.

ந்த நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி (BCCC) க்கு ஒவ்வொருவரும் சில நிமிடங்கள் ஒதுக்கி தபால் அலுவலகத்திற்கு சென்று தந்தி அனுப்பமாறு கேட்டு கொள்கிறேன்.

இதை படிக்கும் நூறு பேரில் ஒருவராவது தந்தி அனுப்புவார்கள் என்று நம்பிக்கை உள்ளது.

ஆய்றம் தந்தியாவது இந்த நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி போக வேண்டும்.

தந்தியில் உங்களுடைய கருத்தை சொல்லி ஆங்கிலத்தில் please ban ztamil solvathellam unmai program என்று சொல்லி இந்த முகவரிக்கு முடிந்த வரை சிக்கிரம் அனுப்புங்கள்.

broadcasting content complaint council (bccc)
post box no : 3812
new delhi- 110049
fax no : #91-11-43794455
email: bccc@ibfindia.com

தந்தி முலம் அனுப்ப தவறுபவர்கள் இந்த ஈமெயிலுக்கு உங்களது புகாரை அனுப்புங்கள். bccc@ibfindia.com

குறிப்பு: நீங்கள் தந்தி அனுப்பவில்லை என்றாலும் பரவா இல்லை தயவு செய்து உங்களது நண்பர்களுக்கு இதை பகிருங்கள். உங்களது நண்பர்கள் பக்கத்தில் யாரேனும் தந்தி அனுப்புபவர்கள் இருப்பார்கள்.

தயவு செய்து இந்த பதிவிக்கு
ஒற்றுமையில் தான் வெற்றி உள்ளது.

மேதின ஊர்வலம்;இடம் : Métro; Place des Fêtes.அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ... ஒடுக்கப்படுவோரின் குரலாக ... மே - 01 - 2013 காலை 11 மணிக்கு மேதின ஊர்வலமும்- ஒன்றுகூடலும். தோழமையோடு அழைக்கின்றோம்! சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு - பிரான்ஸ்

அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக ...     

ஒடுக்கப்படுவோரின்  குரலாக ... 
  
 உலக வரலாற்றில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் நாம் மேதினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். வல்லரசுகளோ கண்டங்களைத் தாண்டி இயற்கை வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் சுரண்டியபடி இருக்கிறது. 
ஐரோப்பாவில் இளம் சந்ததியினர் படித்துவிட்டு தொழில் வாய்ப்பு ஏதுமின்றி சூன்யமான எதிர்காலத்தைச் சுமந்தபடி இருக்கின்றனர். வங்கிகள், பொருளாதார நிறுவனங்கள் வங்குரோத்து நிலையை சந்தித்த காலம் போய், இப்போது நாடுகள் வங்குரோத்து நிலையில் விளிப்பில் தளம்பிக்கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய கடனை பல நாடுகள் தவிர்க்க முடியா நிலையில் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த நாடுகள் மீள முடியாக் கடன் சுமையை வருங்கால சந்ததிக்கு வழங்கியுள்ளன.
உலகின் வல்லரசு, ஜனநாயக நாடு, அழிக்க முடியாத உலகப் பேரரசு என்றெல்லாம்  மார்தட்டிக்கொண்ட உலகின் பேட்டை சண்டியன் அமெரிக்காவின் உள் நாட்டிலேயே ஆயிரக்கணக்கான வீடற்றவர்கள் பெருந்தெருக்களின், பாலங்களின் கீழ் வசிக்கிறார்கள்.   ‘பொருளாதார நெருக்கடி’  என்று ஒற்றை வார்த்தையில் கூறப்படும்  பல்தேசிய நிறுவனங்களின் பகல் கொள்ளையால் பணமும், மூலதனமும் ஒரு சிலரிடம் குவிந்துள்ள நிலையில், மக்களின் வறுமையும், அழிவும் தவிர்க்கமுடியாத நியதியாகிவிட்டது.
வங்கிகளின் வங்குரோத்துக்களும்,  இளையோர் வேலையில்லாத் திண்டாட்டமும்  பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாத நடவடிக்கைகளுடன் போராடிக்கொண்டிருக்கின்றன. சுயநலம் மிக்க யுத்த நடவடிக்கைகள்  பயங்கரவாத ஒழிப்பு என்ற பேரில் மேற்கொள்ளப்பட்ட இராணுநடவடிக்கைகள் மூலம் அப்பாவி மக்கள் உயிர் வதைக்கும் சீர்குலைந்த சிவில் சமூக அமைப்புக்குள் அமிழ்ந்து போயுள்ளனர்.
ஆசிய பசுபிக் சமுத்திரத்தை ஆக்கிரமிக்கவும்,  அதன் மீது தத்தமது அதிகாரத்தை நிலை நாட்டவும் இந்தியா, சீனா,  அமெரிக்கா  என்பன போட்டி போட்ட படி இருக்கின்றன. இக்கெடுபிடிக்களுக்கு  மத்தியில் இந்து சமுத்திரத்தின் கண்ணீர் துளியாக நாம்  தவழ்ந்த நாடு.
பயங்கரவாத முறியடிப்பு என்ற பேரில்  இலங்கையின் தேசிய சிறுபான்மையினமான தமிழ்மக்களின் வாழ்வு தொடர்ந்தும் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. அரசியல் வாழ்வுரிமைகள் நசுக்கப்பட்டு - மேலும் மேலும் பறிப்பதிலும் தேசிய சிறுபான்மை இனங்களின் உரிமைகளை ஒடுக்குவதிலுமே கவனம் செலுத்துகின்றது. 
யுத்தம்முடிந்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்த விட்ட நிலையில் இன்னமும் யாழ் குடாநாட்டில் இராணுவம் நிலைகொண்டபடி இருக்கிறது. சுமூகமான நாளாந்த வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியாத ஒரு சந்ததி இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியில் பிறந்து வளர்கிறது.கடந்த மூன்று தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கைகளினால் மக்கள் தமது பிள்ளைகளை,  சொந்தங்களை, உற்றாரை, உறவினரை இழந்த நிலையில்  சொல்லமுடியாத மனவேதனையுடன் நாட்களை கழித்த படி இருக்கின்றனர்.காணாமல் போனவர்களின் பட்டியல்  நீண்டபடி செல்கிறது. 
யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக வெற்றிவிழாக்களைக் கொண்டாடும்  அரசு  அந்நாட்டின் தேசிய சிறுபான்மையினங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு   நடவடிக்கைகளை எடுக்கவில்லை. மக்கள் இன்னமும் சொந்த நாட்டிலே குந்தியிருக்க குடில் இல்லாதவர்களாக, இரவல் நிலங்களில் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். காணிகள் சுவீகரிப்புகள் தொடர்ந்த வண்ணமே இருக்கிறது. யாழ்ப்பாணம்,  முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் காணித்துண்டுகள் தொடர்பாக இன்னமும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. வலிவடக்கில் ஆறுஆயிரத்து இருநூற்றிஇருபத்து நான்கு காணித்துண்டுகள் தொடர்பான பிரச்சனைகளும் நீடித்த வண்ணம் இருக்கின்றன. 
நடந்து முடிந்த திட்டமிட்ட இனஒழிப்பை விசாரிக்க நடுநிலையானகுழுவொன்றை நியமிக்க மறுத்த அரசு  கண்துடைப்பிற்காக கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்கத்திற்கான குழுவொன்றை நியமித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப்போவதாக  வெளியுலகிற்கு தெரியப்படுத்துவதற்காக பெருந்தொகையான பணம்  ஆளணி மற்றும் வளங்களையும் பயன்படுத்தி ஆணைக்குழுவை அமைத்தது.  அக்குழுவின் பரிந்துரைகளின் படி பாதுகாப்புபடையினர் சிவில் நிர்வாக நடவடிக்கைகளில் இருந்து விலக வேண்டும்.   மக்களின் குடியிருப்புக்காணிகளில் பாதுகாப்பு படையினருக்கு தேவைக்கு அவசியம் எனக் கருதினால் மக்கள் குடியேறுவதற்கு அரச காணிகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.  அவர்களது சொந்தகாணிகளுக்கான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். பலாலி  வலி வடக்கு, திருகோணமலை , சம்பூர் ஆகிய பிரதேசங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் குறைக்கப்பட்டு மக்கள் தம் சொந்த இடங்களில் குடியேற அனுமதிக்கப்பட வேண்டும். ஆனால் இவைகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
இலங்கையில் காலத்திற்கு காலம் அதிகாரத்தைக் கைபற்றிக் கொண்ட அரசுக்கள் தமது நாட்டு மக்கள் மீது வன்முறையையும், இன அழிப்பையும் மேற்கொண்டபடியே இருந்து வந்துள்ளன. 2009 மே18 இல் இராஜபக்ச அரசு தேசிய சிறுபான்மையின ஒழிப்பை திட்டமிட்டு நிகழ்த்தியதைப் போலவே பலதரப்பட தொழிலாளர்கள்,  விவசாயிகள்,  பல்கலைக்கழ மாணவர்கள் இணைந்து  நடத்திய எழுச்சிகளையும் அக்காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த அரசு அடக்கி ஒடுக்கியது. சலுகைகள் பதவிகள்  அரசியல் செல்வாக்கு எனும் அற்ப விடயங்களை வழங்கி அந்த அமைப்பின் முக்கிய நபர்களை விலைக்கு வாங்கியதன் மூலம் அவற்றைப் பிளவுபடுத்தியதுடன், அதன் இயக்கத்தையும் தடைசெய்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்திய மனித வேட்டையில் பலியாகிப் போன எலும்புக்கூடுகளை இன்னமும் அகழ்ந்தபடி நாம் இருக்கிறோம்.
இலங்கையை வல்லரசுகளுக்கு அடைவு வைத்தாகிவிட்டது. இலங்கையின் பிரச்சனை பல்லின சமூகமோ பயங்கரவாதமோ அல்ல. இனங்களுக்கிடையே முரண்பாடுகளை  இனரீதியான பராபட்சமான செயற்பாடுகளை திட்டமிட்டு உருவாக்கி மக்களிடையே பிணக்குகளை ஏற்படுத்துவதில் ஆளும் வர்க்கம் எப்போதுமே வெற்றிக் கண்டு வருகிறது. இதற்கு துணைபோகுவதில் சிங்கள. முஸ்லீம் மற்றும் தமிழ் இனத்துவ குழுக்களும் , அமைப்புக்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன.  
இலங்கையில் நிரந்தர சமாதானமும்  சமத்துவமும் நிலவ வேண்டுமானால்-  ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இனங்களில் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, அனைத்து தேசிய இனங்களின் சமத்துவம் பேணப்பட வேண்டும். அனைத்து தேசிய இனங்களும் சமநிலை அரசியல் சமத்துவம் கொண்ட அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.
 இலங்கைவாழ் மக்கள் பரஸ்பரம் அங்கு வசிக்கும் ஏனைய சமூகங்களின் உரிமைகளை மதிக்க பழக வேண்டும்.  சிங்களவர் , தமிழர், முஸ்லீம்கள் ,மலையமக்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை மக்களையும் உள்ளடக்கியதுதான் இலங்கை என்ற கருத்து மக்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த புதிய சமூக உருவாக்கத்தில் தெற்கில் உள்ள இடதுசாரிகளும்  பொதுமக்களும் பரந்த மனத்துடனும்  உளசுத்தியுடனும் செயற்பட வேண்டும்.

தொழிலாளர்களின் தினமான இன்று இலங்கையிலுள்ள அனைத்து மக்கள் சார்பிலும்  பின்வருவனவற்றைக் கோருவோம்.
ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இனங்களில் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அனைத்து தேசிய இனங்களின் சமத்துவம் பேணப்பட வேண்டும். 
அனைத்து தேசிய இனங்களும் சமநிலை அரசியல் சமத்துவம் கொண்ட அரசியல் தீர்வு காணப்படவேண்டும்.
இன அழிப்பு தொடர்பாய் சர்வதேச சுயாதீன நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும்.  
இன அழிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களுக்கும் நஷ்டஈடு  மற்றும் நிவாரணம் வழக்கப்படவேண்டும் 
பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் கொன்றொழிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தவேண்டும். 
குடாநாட்டில் குடிகொண்டிருக்கும் இராணுவத்தை வெளியேற்றவேண்டும். 
அதி உயர் பாதுகாப்பு வளையங்களை உடனடியாக அகற்றவேண்டும். 
மக்களை அவர்தம் சொந்த இடங்களில் குடியேறுவதை அனுமதிக்கவேண்டும்.   

 சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு - பிரான்ஸ்  E-mail : comite_cdsi@yahoo.fr

    மே -01-  2013.
                         Place des Fêtes (19e)
  இடம் :   Métro Place des Fêtes
 carte

vendredi 26 avril 2013

மேதின நிகழ்வகளில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உழைக்கும் வர்க்கங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அன்புடன் அழைக்கின்றது.


தொழிலார்களின் நாளான மேதினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 01.05.02013 அன்று மாபெரும்மேதின ஊர்வலப் பேரணி ஒன்றினை தமிழ் மக்கள்  விடுதலைப் புலிகள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.இப்பேரணியினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஒருங்கிணைந்த நிறுவனங்களின்  பணிப்பாளர் க.மோகன் அவர்கள் ஏற்பாடு செய்வதுடன், இப்பேரணியினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசியத் தலைவர் சிவனேசதுரை  சந்திரகாந்தன் அவர்கள் தலமை தாங்கி நடாத்துகின்றார்.
செங்கலடி சந்தியிலிருந்து வாகனங்களின் பவனியுடன் ஆரம்பமாகும் இப்பேரணியானது, மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தை அடைந்து, அங்கு மேதினக் கூட்டமும் இடம்பெற இருக்கின்றது.  எனவே அன்றைய தினம் இடம்பெறும் மேதின நிகழ்வகளில் கலந்துகொள்ளுமாறு அனைத்து உழைக்கும் வர்க்கங்களையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அன்புடன் அழைக்கின்றது

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் என கூறும் சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள்: சந்திரிகா


இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்த சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள். சிறிய தரப்பினரான இவர்களின் அடிப்படைவாத செயல்கள் தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவபெயரை ஏற்படுத்தியுள்ளதாக பண்டரநாயக்க குமாரணதுங்க தெரிவித்துள்ளார்.மத்துகம பட்டபுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட உள்ள தெற்காசியாலேயே உயரமான புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று முன்தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.இரண்டாயிரத்து 500 வருட இலங்கையின் வரலாற்றில், நாட்டை ஆட்சி செய்த மன்னர்கள் எப்போதும், இலங்கையை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு எனக் கூறியதில்லை. அவர்கள் வேறு நாடுகளிடம் இருந்து மக்களை பாதுகாத்து கொள்ளவே போரிட்டனர்.
மன்னர்கள் எதிரிகள் வரும் போது தாக்குதல்களை நடத்தினார்களே தவிர இனவாதத்தில் போதை ஏறி நாட்டில் உள்ள ஏனைய இனங்களையும் மத தலங்களை தாக்கவில்லை. இலங்கையில் வேறு இனங்களுக்கும் நாடுகள் வழங்கப்பட்டிருந்தன. இலங்கை என்பது பல்லின, பல மாதங்களை கொண்ட நாடு. அவர்கள் அனைவரும் சகோதரத்துவதுடனும், சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த நாடு.
எனினும் தற்போது ஒரு சிறிய தரப்பினர் முன்னெடுத்து வரும் அடிப்படைவாத வேலைத்திட்டங்கள் இந்த விதத்திலேயே தொடர்ந்தும் சென்றால் நாட்டின் பேரழிவுக்கும், சேதத்திற்கும் காரணமாக அமைந்து விடும். இவ்வாறான அடிப்படைவாதிகள் எழுச்சி பெறும் சந்தர்ப்பங்களில் அரசாங்கம் தலையிட்டு அதனை அடக்க வேண்டும். இது அரசாங்கத்தினதும், ஆட்சியாளர்களினதும் பொறுப்பு. இதனை விடுத்து, அவர்களுக்கு உந்து சக்தியை கொடுத்தும் கொள்கையை பின்பற்றினால் பாரிய அழிவே ஏற்படும்.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த நடவடிக்கையால் ஏற்பட்டு வரும் பாதிப்பு மிகவும் பாரியளவானது. ஏற்கனவே பொருளாதார மற்றும் சர்வதேச ரீதியில் பாரிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் போல் நாட்டு மக்கள் என்ற வகையில் உரிமைகளும், கடமைகளும் உள்ளன. பௌத்தர்கள் என்ற வகையில் நாம் அந்த கடமையை நிறைவேற்ற வேண்டும். நான் கற்றுள்ள பௌத்த சமயத்தின் படி, பௌத்த மதத்தை போன்ற கருணை போன்ற உன்னதமான மனித பண்புகளை பேசும் மதங்கள் வேறு எதுவும் இல்லை. மத, இனவாத பிரச்சினைக்கு எதிராக குரல் கொடுக்கும் மதம் பௌத்த மதம் எனவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குறிப்பிட்டுள்ளார்

ஊழியர்கள் சுட்டிக் காட்டியும் கட்டடம் இடிந்து விழுந்ததில் 100 பேர் சாவு


daccaவங்கதேசத்தில் 8 மாடி வணிக வளாகக் கட்டடம் புதன்கிழமை இடிந்து விழுந்ததில் 100 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள சவார் பகுதியில் ராணா பிளாசா என்ற பெயரில் 8 மாடி வணிக வளாகம் இயங்கி வந்தது. இதில் வங்கி, மூன்று ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், ஏராளமான அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவற்றைச் சார்ந்து மொத்தம் 6ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த கட்டடத்தின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை திடீரென விரிசல் ஏற்பட்டது. இதை ஊழியர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆனால் கட்டட உரிமையாளர்களும் சில நிறுவனங்களின் மேலாளர்களும் ஊழியர்களின் எச்சரிக்கையை பொருள்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் புதன்கிழமை காலை அந்த கட்டடம் பயங்கர சப்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது கட்டடத்தின் உள்ளே இருந்த ஆயத்த ஆடை தொழிற்சாலையில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இந்த விபத்தில் 100 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கட்டடம் இடிந்த தகவல் கிடைத்ததும் பொலிசாரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியிருந்த 100 உடல்களை மீட்டனர். தொடர்ந்து மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவின்பேரில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் அரசு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றன.காயமடைந்தோரில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாலும் கட்டட இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியுள்ளதாலும் சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சுரேஸ் விக்கிரமசிங்க பிரபல விடுதி ஒன்றில்

யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் மற்றும் பொது மக்களின் பிரதிநிதிகளை சந்தித்து வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனுடனான சந்திப்பு இன்று காலை 10 யாழில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ரவி கருணாநாயக்க, சுவாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவிக்கையில், 'இந்தச் சந்திப்பில் யாழ் மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவம் அரசாங்கத்தின் அரசியல் அங்கமாகவே இன்று செயற்பட்டு வருகின்றர்கள். அரசாங்கத்திற்கும் ஆளும் கட்சிக்கும் தேவையான வற்றை செய்துகொண்டு இவ்வாறானதொரு நிலையில் வட மாகாண சபைத் தேர்தல் ஜனநாயக வழியில் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது.

அண்மையில் கூட வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 6,500 மேற்பட்ட காணிகள் சுவிகரிக்கப்பட்டுள்ளது இதனால் 7,500 குடும்பங்களைச் சேர்ந்த 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் மீளக்குடியேற முடியாத நிலையில் வாழந்து வருவதாக எடுத்துக் கூறியுள்ளதாக' அவர் தெரிவித்தார்.

இடம்பெயர்நதவர்கள் உடனடியாக அவர்களின் இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும் இதற்கு இராணுவம் அவர்களின் காணிகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதும் தொடர்ச்சியாக இராணுவம் நில ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடக்கில் இராணுவம் அரசாங்கத்தின் அரசியல் அங்கமாக செயற்பாட்டு வருகின்றது ஆளும் கட்சிக்கும், அரசாங்கத்திற்கும் எது தேவையானதோ அதனையை இன்று இராணுவம் செய்து வருகின்றது.

இவ்வாறான நிலையில் வடக்கில் ஒரு ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்க முடியாது இந்த விடயத்தை ஐக்கிய தேசிய கட்சி கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கேட்டுள்ளதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். 

இன்று மாலை வடமாரட்சியில் பகுதிக்கு விஜயம் செய்த ரணில் விக்கிரமசிங்க வடக்கு மாகாண தேர்தல் தொடர்பில் பொது மக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதனை போது வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடுவதன் நோக்கம் மற்றும் தற்போதயை பொருளாதார நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன் இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு தகுதியான வேட்பாளர் ஒருவரை தேர்ந்தெடுக்குமாறும்' கேட்டுக்கொண்டார்.