mardi 9 avril 2013

பிரான்ஸ் நாட்டுக்கான புதிய இலங்கைக் தூதுவராக பேராசிரியர் கருணாரத்ன


பிரான்ஸ் நாட்டுக்கான புதிய இலங்கைக் தூதுவராக பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஸ்பெய்ன், போர்த்துக்கல் நாடுகளின் தூதுவராகவும் அவர் செயற்படவுள்ளதுடன் யுனெஸ்கோவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநியாகவும் ஹங்கவத்த நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கான நியமனப்பத்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹங்கவத்தவிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க குடியுரிமையைக் கொண்டுள்ள ஹங்கவத்த லாஸ் வெகாஸிலுள்ள நெவடா பல்கலைக்கழகத்தில் குற்றவியல் நீதித்துறையில் பேராசிரியராகவும் உள்ளார்.
மேலும் இலங்கை உள்நாட்டுப் போரின் 2002 முதல் 2009 மே மாதம் இறுதிக் கட்டம் வரையான காலப்பகுதி தொடர்பாக ஆராயும் பொருட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான  ஆணைக்குழுவில் ஹங்கவத்த உறுப்பினராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire