mercredi 24 avril 2013

என்ஜினீயர்கள் 11 பேரை தலிபான்கள் சிறைபிடித்தனர்.

ஆப்கானிஸ்தானில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் வெளிநாடுகளை சேர்ந்த என்ஜினீயர்கள் புறப்பட்டு சென்றனர். லோகார் மலை பிரதேசத்தில் சென்றபோது கடும் சூறைக்காற்றுடன் புயல் வீசியது. எனவே ஹெலிகாப்டரை அங்குள்ள அஷ்ரா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் அவசரமாக தரை இறக்கினர்.அப்பகுதி தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே ஹெலிகாப்டரில் இருந்த 11 பேரையும் தலிபான்கள் சிறைபிடித்தனர். அவர்களில் 8 பேர் துருக்கியை சேர்ந்த என்ஜினீயர்கள். ஒருவர் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர். ஹெலிகாப்டர் விமானிகள் 2 பேர் ரஷியாவை சேர்ந்தவர்கள்.
இவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பக்ராம் சிறையில் 3 ஆயிரம் தலிபான் தீவிரவாதகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்கள் சமரச பேச்சுவார்த்தை நடைபெறும் சூழ்நிலை உள்ளது.
இச்சம்பவம் நிகழும்போது சிறையில் இருக்கும் தலிபான்களை விடுவிக்க இந்த வெளிநாட்டினரை பிணைக் கைதிகளாக பயன்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire