mercredi 17 avril 2013

சேவை நேற்று முதல் ஆரம்பம் இலங்கைக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ்

British-Airwaysபிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான தனது விமான சேவையை நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. பிரிட்டிஷ் கெஸ்டிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த பிரிட்டிஷ் எயர்வேஸ்ஸின் அயன்பொய்ட் 777-200 என்ற விமானம் நேற்று நண்பகல் 12.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று வந்திறங்கிய இந்த விமானத்தில் மேற்படி விமான நிலையத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிடி விலியம்ஸ், பிரித்தானியாவின் பத்து முன்னணி ஊடகவியலாளர்களும் பயணிகளுடன் வருகை தந்ததாக சிவில் விமான போக்கு வரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார். இவ்விமான நிறுவனம் வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் அதாவது திங்கள், வியாழன், சனி ஆகிய மூன்று தினங்களிலும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு சேவை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வட, தென் அமெரிக்கா, ஆசியா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா ஆகிய ஐந்து கண்டங்களிலுள்ள நாடுகளுக்கிடையில் விமான சேவையை நடத்தும் ஒரே நிறுவ னம் இதுவே என்றும் அவர் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இலங்கைக்கு விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதனால் எமது ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் கூறினார். பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் 1998 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire