vendredi 29 juin 2012

யாழ்.மாவட்டத்தில் மக்களின் வாழ்விடங்களில் 16 சதவீதமானவை உயர்பாதுகாப்பு வலயங்களாக உள்ளன.


யாழ்.மாவட்டத்தில் மக்களின் வாழ்விடங்களில் 16 சதவீதமானவை உயர்பாதுகாப்பு வலயங்களாக உள்ளன. இங்கு மக்களது நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன  யாழ்ப்பாண மாவட்டம் 1995இல் இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்து யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினரின் இருப்பு அதிகமாகக் காணப்படுகின்றது.

யாழ். குடாநாட்டை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து குறுகிய காலத்தில் பல்வேறு இடங்கள் “உயர் காப்பு வலயங்கள்’ என முத்திரை குத்தப்பட்டன. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை எதிர்நோக்குவதற்கும், இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புக் கருதியும் “உயர் பாதுகாப்பு வலயங்கள்’ அமைக்கப்பட்டன. இலங்கையில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாண மாவட்டத்திலேயே மிக அதிக எண்ணிக்கையான உயர் காப்பு வலயங்கள் காணப்படுகின்றன.

அங்கு மக்களின் வாழ்விடங்களில் 16 சதவீதமானவை உயர் காப்பு வலயங்களாகும். இந்த இடங்களில் பொதுமக்களின் நடமாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துலக மட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு மனிதாபிமான உடன்பாடுகளை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டுள்ள போதிலும், நாட்டில் உயர் காப்பு வலயங்கள் உருவாக்கப்படுவதை இந்த அனைத்துலக உடன்பாடுகளால் தடுக்கமுடியாது. அதற்கான போதியளவு சட்ட வரைபுகள் காணப்படவில்லை. எனினும் உண்மையில் இவ்வாறான உயர் காப்பு வலயங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றன.

ஜனநாயக சோசலிச குடியரசான இலங்கை பின்வரும் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சரத்துகளைக் கொண்டுள்ளது:

 பேச்சு சுதந்திரம்
 அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் சங்கம் அமைப்பதற்கான சுதந்திரம்
மத சுதந்திரம்
 ஒருவர் தனது சொந்தப் பண்பாட்டைப் பின்பற்றி அதனை மேம்படுத்துவதற்கான சுதந்திரம்
 சட்ட ரீதியான தொழில்கள், வர்த்தகம், முயற்சியாண்மை போன்றவற்றை மேற்கொள்வதற்கான சுதந்திரம்.

 நடமாடுவதற்கான சுதந்திரம், இலங்கைக்குள் எந்தவொரு பகுதியிலும் வசிப்பதற்கான சுதந்திரம்
அரசமைப்பின் மூலம் இலங்கை மக்களுக்கு இந்தச் சுதந்திரம் அனைத்தும் உறுதிப் படுத்தப்பட்டாலும் உயர் காப்பு வலயம் என்ற பெயரில் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான பெருமளவான நிலங்களை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

சொந்த இடங்களிலிருந்த மக்களைப் பலவந்தமாக வெளியேற்றியமை, மக்களின் நடமாடும் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவித்தல், சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதியாமை போன்றவற்றின் மூலம் இலங்கை அரசு அடிப்படைச் சுதந்திரத்தைக் கொண்டுள்ள உள்நாட்டு மற்றும் அனைத்துலகச் சட்டங்களை மீறிச் செயற்படுகின்றது.

யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர் காப்பு வலயங்களும் அகற்றப்படும் என ஜனவரி 2010இல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தார். 2011 ஓகஸ்ட் முடிவில் அவசரகாலச் சட்ட நடைமுறைகள் காலாவதியாகிய பின்னர், உயர் காப்பு வலயங்களுக்கு இருந்த “உத்தியோகபூர்வ’ அங்கீகாரம் இல்லாமல் போய்விட்டது.

ஆனால் இந்த மாற்றமானது ஒவ்வொரு மக்களும் இயல்பு வாழ்வை வாழமுடியும் என்பதை உறுதிப்படுத்துவதாக இருக்கவில்லை. அல்லது இவ்வாறான “உத்தியோகபூர்வ’ செயற்பாடுகள் நிறுத்தப்பட்டமை யாழ். குடாநாட்டில் இயங்கும் அனைத்து இராணுவ நிர்வாகங்களும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன என்பதைக் குறிக்கவில்லை.

இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் 2011 முடிவுக்குள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவர் என இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஆனால் இக்காலக்கெடுவுக்குள் பணி பூர்த்தி செய்யப்படவில்லை. அண்மையில், மாதகலைச் சேர்ந்த நில உரிமையாளர்கள் தமது நிலங்களைப் பெற்றுக் கொள்வதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது எனத் தீர்மானித்திருந்தனர். அப்படி நில உரிமையாளர்கள் தமது நிலங்களை மீட்பதற்குச் சட்டத்தை அணுகினாலும்கூட தற்போது நடைமுறையில் காணப்படும் நீதிமுறைகள் இவர்களுக்கு வலுவான தீர்வை வழங்கப்போவதில்லை.

வலி. வடக்கில் உயர் காப்பு வலயங்களில் காணிகளைக் கொண்ட சுமார் 26,000 வரையானவர்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குச் செல்லமுடியாது தவிக்கின்றனர். யாழ். குடாநாட்டில் உயர் காப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்த 100,000 வரையானவர்கள் அண்மைக் காலம்வரையில் சொந்த இடங்களில் மீள்குடியமர்ந்துவிட்டனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

உயர் காப்பு வலயங்கள் தொடர்பான கலந்துரையாடல், திட்டமிடல் மற்றும் அவற்றில் சில மக்களின் பாவனைக்காக விடப்பட்டமை போன்றன உயர் காப்பு வலயங்கள் தொடர்பில் தெளிவின்மையை ஏற்படுத்தியுள்ளது. யாழ். குடாநாட்டில் உள்ள அனைத்து உயர் காப்பு வலயங்களும் மக்களின் பயன்பாட்டுக்காக மீளத்திறக்கப்படுமா என்றும் சந்தேகம் தொடர்ந்தும் நிலவுகின்றது.

இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள உயர் காப்பு வலயங்கள் மக்களின் பாவனைக்காக திறந்து விடும் விருப்பத்தை இலங்கை அரசு இன்னமும் கொண்டிருக்கவில்லை என்பதையே அதன் தற்போதைய நிலைப்பாடு சுட்டிக்காட்டுகின்றது.

இலங்கை அரசானது மனித உரிமைகளுக்கான அனைத்துலக பிரகடனம், பொது மற்றும் அரசியல் உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளுக்கான அனைத்துலக சாசனம் போன்ற பல முக்கிய சாசனங்களை ஏற்றுக் கைச்சாத்திட்டுள்ள போதிலும், அவற்றைப் பின்பற்றி நடக்கவில்லை.

“ஒவ்வொருவரும் சம உரிமையுடன், கௌரவத்துடன், சுதந்திரமாக பிறக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் மற்றையவர்களை சகோதர மனப்பான்மையுடன் ஏற்று அவர்களின் உரிமைகளை மதித்து நடக்கவேண்டும்” என்று அனைத்துலக மனிதாபிமான உரிமைகள் சாசனத்தின் முதலாவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அரசு பல பத்தாண்டுகளாக இதன்படி நடக்கவில்லை என்பது துரதிர்ஷ்டம்தான். உயர் காப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வதற்கான மக்களின் அடிப்படை மனித உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மக்களின் வரலாற்றுச் சிறப்பு மிக்க பல இடங்கள் அழிந்துவருகின்றன.

அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 20-02-2006 வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் பிரகாரம், இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சில நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் கையளித்தது.

ஆனால் தற்போது அந்த நிலங்கள் உள்ளடங்கலாக பல பிரதேசங்களை அரசு உயர் காப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தியுள்ளது. தெல்லிப்பளை, கொல்லன்கலட்டி, பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள காங்கேசன்துறைப் பிரதேசம், பொன்னாலை தொடக்கம் தொண்டமானாறு வரையான கரையோரப் பிரதேசங்கள் மாதகல், கீரிமலை, மயிலிட்டி, வசாவிளான் உள்ளடங்கலாகப் பல உயர் காப்பு வலயங்களாக்கப்பட்டுள்ளன.

இதே போன்று மிருசுவில், கிளாலி, அரியாலை கிழக்கு, அல்லைப்பிட்டி போன்ற இடங்களும் இராணுவத்தால் முற்றுமுழுதாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான இடங்களில் இருந்த வசதிகள் ஏற்கனவே அழிக்கப்பட்டு இப்போது போதியளவு வசதி வாய்ப்புக்கள் காணப்படாததால் மக்கள் மீளவும் அங்கு செல்வதில் தயக்கம் காட்டுகின்றனர்.

முப்பது ஆண்டுகளாக நடந்த குருதி சிந்தும் போரை, உயர் காப்பு வலயங்களில் தமது சொந்த வீடுகளைக் கொண்ட மக்கள் படும் துன்ப துயரங்கள் இன்றும் நினைவூட்டுவனவாக உள்ளன. முதன் முதலாக உயர் காப்பு வலயம் பிரகடனப்படுத்தப்பட்ட போது, பெரும் எண்ணிக்கையான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

 இந்த மக்கள் இன்று வரை அவர்களது சொந்த இடங்களில் மீள்
குடியேற்றப்படவில்லை. இவ்வாறு இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் யாழ்ப்பாணத்திலுள்ள தமது நண்பர்களினதும், உறவினரதும் வீடுகளில் தற்காலிகமாக வாழ்கின்ற அதேவேளையில், ஏனைய மக்கள் நலன்புரி நிலையங்களில் தொடர்ந்தும் தங்கி வாழ்கின்றனர். இந்த மக்கள் தமது சொந்த நிலங்களில் வாழ முடியாததால் இவர்கள் தமது வாழ்வை மீளக்கட்டியெழுப்புவதில் சங்கடங்களை எதிநோக்கியுள்ளனர்.

எந்தவொரு தொழிலையும் கூட மேற்கொள்ள முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர். தவிர, இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரம் என்பது மிகத் தாழ்வாகக் காணப்படுகின்றது. ஏனெனில் முகாம்களில் இவர்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.

இவ்வாறான தொடர் இடப் பெயர்வுகளின் விளைவாக தமிழ் இளையோர் தமது கல்வியை இடைநிறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துவிட்டனர். இடப்பெயர்வு காலத்தில் இந்த மக்களுக்கு ஓர் உறுதியான தொழில் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

இலங்கை இராணுவத்தினர் பல ஆண்டுகளாக மக்களின் நிலங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் இந்த மக்கள் போரின் பின்னரும் தமக்கான வாழ்வை மீளக் கட்டியெழுப்ப முடியாதுள்ளனர். போர் தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், தமிழ் மக்கள் வாழ்விடங்களில் இராணுவ மயப்படுத்தலும், இராணுவச் செலவினமும் இன்றும் அதிகரித்த வண்ணமேயுள்ளன.

இந்த ஆண்டில் இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் 2 பில்லியன் டொலர்களாகும். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இது ஏழு சதவீதத்தால் அதிகரித்துள்ளது

நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஆய்வாளர் கிப்சன் பேற்மன் எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியான ஜே.வி.பி


கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியான ஜே.வி.பி போட்டியிடுமென ஜே.வி.பி. யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜே.வி.பி. யின் கிழக்கு மாகாண பொறுப்பாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் ஜே.வி.பி.போட்டியிட தீர்மானித்துள்ளது. ஜே.வி.பி. கட்சியானது எந்தக்கட்சியுடனும் கூட்டுச்சேர்ந்து போட்டியிடமாட்டாது. தனித்தே கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாம் போட்டியிடுவோம் என அவர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் ஜே.வி.பி இதற்காக வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது எனவும் சந்திரசேகரன் மேலும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளை போல நடக்கிறது:அரசு


இலங்கையில் மூன்று மாகாண சபைகளை கலைத்துவிட்டு புதிய தேர்தல்களை நடத்துவதாக அரசு அறிவித்துள்ள நிலையில், வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்த ஏன் முன்வரவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்
ஜனாதிபதிக்கான தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் வடக்கிலும் இடம்பெற்று அங்குள்ள மக்களும் வாக்களித்த்த போது, ஏன் அரசு வடமாகாண சபைக்கான தேர்தலை அறிவிக்காமல் இருக்கிறது எனவும் வினவியுள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்.
"




வடபகுதி மக்கள் ஒரு மாகாண சபையை தேர்ந்தெடுப்பதன் மூலம் தமக்கான பலன்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அம்மாகாண மக்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது எனவும் ரனில் கூறுகிறார்.
மாகாண சபைக்கான தேர்தலை நடத்த விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை என்றும், போர் முடிந்த பிறகும் தேர்தலை நடத்த அரசு முன்வராத போது அவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் என்ன வித்தியாசம் எனவும் ரனில் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாண சபைக்கு தேர்தலை நடத்துவது அரசின் தலையாய பொறுப்பு என்றும், அதன் மூலம் தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீள்குடியேற்றம் உட்பட அனைத்து அம்சங்களிலும் ஈடுபடும் நிலை ஏற்படும் எனவும் பிரதான எதிர்கட்சியின் தலைவர் கூறுகிறார்.
இப்படியான சூழலில் அரசு ஜனநாயகத்தை தாங்கள் மதித்து நடப்பதாகக் கூறுவது கேலிக்குரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண சபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டால் தமது கட்சி அதில் போட்டியிடும் எனவும் ரனில் தெரிவித்துள்ளார்
வடமாகாண சபைக்கான தேர்தலை அரசு திட்டமிட்டு நடத்தாமல் உள்ளது என்று எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை அரச தரப்பு மறுக்கிறது.
வடக்கு மாகாணத்துக்கான சிறப்பு செயலணிக் குழுவின் உறுப்பினரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், வடபகுதியின் பல இடங்களில் இன்னமும் மிதிவெடிகள் அகற்றப்படாததும், நீதிமன்ற உத்தரவுகள் காரணமாகவுமே வடமாகாண சபை தேர்தல் தள்ளிப் போவதாக தெரிவிக்கிறார்.
இது குறித்து தானும், மாற்றொரு அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் ஜனாதிபதியிடம் வடமாகாண சபையின் தேர்தல் குறித்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும் பிபிசி தமிழோசையிடம் அவர் தெரிவித்தார்.
எதிர்கட்சியினர் யதார்த்தங்களை புரிந்து கொள்ளாமால் அரசின் மீது குற்றஞ்சாட்டுவது நியாயமில்லை எனவும் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்

சர்ச்சையில் ஆண்டாள் பற்றிய கதை


தமிழ்நாட்டின் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், இளங்கலை முதலாண்டு தமிழ்ப் பாடத்திட்டத்தில், வைணவத்தின் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் பிறப்பைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொல்லும் சிறுகதை ஒன்று இணைக்கப்பட உத்தேசிக்கப்பட்டதாக வந்த செய்திகள் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது.
'திருப்பாவை' எழுதிய ஆண்டாள் , பெரியாழ்வாரால், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் துளசிச்செடி அருகே கண்டெடுக்கப்பட்டு, அவரால் வளர்க்கப்பட்டவர் என்று வைணவச் சம்பிரதாயங்கள் கூறுகின்றன.
அவரது பிறப்பைப் பற்றிய ஒரு மறு வாசிப்பு என்று கூறும் “ நோன்பு” என்ற சிறுகதை அடங்கிய ஒரு சிறுகதைத் தொகுப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் டி.செல்வராஜ் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு, பிரசுரிக்கப்பட்டது.
இந்த தொகுப்பை முதலில் தனது பாட த்திட்டத்தில் இணைப்பது குறித்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பரீசிலித்ததாகவும், ஆனால் இந்த குறிப்பிட்ட சிறுகதை பிரச்சினைக்குரிய கதை என்பதால் அதை மட்டும் தவிர்த்து, அதில் உள்ள பிற கதைகளை பாடத்திட்டத்தில் சேர்க்கலாம் என்று முடிவுக்கு வந்த்தாகவும், செய்திகள் கூறுகின்றன.
ஆனால் இதற்கிடையே, பல்கலைக்கழகம் இந்த சிறுகதைத் தொகுப்பை தனது பாடத்திட்டத்தில் சேர்ப்பதை ஆட்சேபித்து, ஹிந்து முன்னணி இன்று பல்கலைக்கழகப் பதிவாளரிடம் மனு ஒன்றைத் தந்தது.
இது குறித்து தமிழோசையிடம் பேசிய ஹிந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர், வி.பி.ஜெயக்குமார், இந்துக்களால் தெய்வத்தின் வடிவமாகக் கருதப்படும் ஆண்டாளை அவதூறாக எழுதிய இந்தப் புத்தகத்தைப் பாடப்புத்தகத்தில் வைப்பது பற்றி தாங்கள் ஆட்சேபம் தெரிவித்த்தாகவும், இது குறித்து தங்களுக்கு பல்கலைக்கழக் நிர்வாகம் உறுதி மொழி தந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்துக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் இந்தப் புத்தகத்தையே தடை செய்யவேண்டும் என்று மாநில அரசுக்குக் கோரிக்கை வைப்பதாகவும், இதற்காக, ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் அருகே நேற்று பக்தர்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இணையத்தள வளாகம் சி.ஐ.டி.யினரால் முற்றுகை: மங்கள எம்.பி.

லங்கா மிரர் இணையத்தளம் மற்றும் ஸ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையத்தளம் அமைந்துள்ள வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தற்போது சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

பிட்டகோட்டை மஹிந்தானந்த வீதியில் அமைந்துள்ள மேற்படி இணையத்தளங்களின் வளாகத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 20 முதல் 25 வரையான அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர். 'அவர்கள் வளாகத்தில் தேடுதல் நடத்துவதற்கான உத்தரவு பத்திரத்தை வைத்திருந்ததாகவும்  ஆனாலும் அதில் இணையத்தளங்கள் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எவ்வாறாயினும் அவர்கள் எங்களுக்கு எதுவும் கூறாமல் அவர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.' எனவும் அவர் கூறினார்.   

நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள லங்கா மிரர் ஆசிரியர் ருவன் பேர்டினான்ட் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக சிலரிடமிருந்து தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். (

“தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நடவடிக்கைகள் எமக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை”


தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நடவடிக்கைகள் எமக்கு திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை” என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளது இலங்கையிலுள்ள புத்த துறவிகளின் பலமான கட்சி.
புத்த துறவிகள் கட்சியின் தலைவர் டில்லிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நீங்கள் (மத்திய அரசு) சரியாகத்தான் செயல்படுகிறீர்கள். ஆனால், கருணாநிதியின் நடவடிக்கைகள்தான் விஷமத்தனமாக உள்ளன” என்று எழுதப்பட்டுள்ளது. கருணாநிதி, டெசோ மாநாடு நடத்த உள்ளது குறித்தே புத்த துறவிகளின் தலைவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இலங்கையில் நாம், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட்டதில்லை. ஆனால், இந்தியாவில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதை நீங்கள் அனுமதிக்க போகிறீர்களா? இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஈடுபடுவதை நீங்கள் அறிவீர்களா?” என்றும் தமது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் புத்த துறவிகளின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரோ!
இலங்கையில் புத்த துறவிகளின் கட்சியான ஜாதிக ஹெல உறுமய (சுமாரான தமிழ் மொழிபெயர்ப்பு: தேசிய பண்பாட்டு கட்சி), ஆளும் கட்சி கூட்டணியில் உள்ளது. இதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கை அரசில் அமைச்சர்களாக உள்ளார்கள் (இந்தியா தொடர்பாக அடிக்கடி கருத்து தெரிவிக்கும் அமைச்சர் சம்பிக ரணவாக்க, இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்தான்)
தமது கடிதம் நேரடியாக பிரதமரின் அலுவலகம் செல்வதைவிட, அதற்கு ராஜதந்திர அழுத்தம் கொடுக்க விரும்பிய துறவிகள் தலைவர், தமது கடிதத்தை கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் கொடுத்துள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சின் பதிவுகளுடன் கடிதம், பிரதமர் அலுவலகத்துக்கு போய் சேரும் என்பதே இதிலுள்ள சூட்சுமம்.
துறவிகள் தலைவர், “தமிழீழ ஆதரவு இயக்கம் எனும் அமைப்பின் சார்பில் கருணாநிதி, ஆகஸ்ட் 5-ம் தேதி மாநாடு ஒன்றை நடத்த உள்ளதாக அறிகிறோம். இலங்கையை உடைத்து, தமிழர்களுக்கு தனி நாடு ஒன்றை பிரித்துக் கொடுக்கும் எண்ணத்தோடு இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு வேண்டும் என்று 1976-ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பு தீர்மானம் போட்டதால், 30 ஆண்டுகள் எமது நாட்டில் ரத்த ஆறு ஓடியது. தற்போது யுத்தம் முடிவடைந்து இங்கு அமைதி திரும்பியுள்ள நிலையில், மற்றுமொரு அத்தியாயத்தை துவங்க நினைக்கிறார் கருணாநிதி” என்று தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய மண்ணில் இலங்கைக்கு எதிராக கருணாநிதி போன்றவர்கள் மேற்கொள்ளும் ‘தேச விரோத’ நடவடிக்கைகளை நீங்கள்தான் தடுத்து நிறுத்த வேண்டும்” என முடியும் இந்தக் கடிதம், புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது கொழும்பிலுள்ள இந்திய தூதரகம்!
சமீப காலமாக ஈழத் தமிழர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய துவங்கியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, எதிர்பாராமல் அடித்த லாட்டரி இந்தக் கடிதம். இதை, அரசியல் ரீதியாக, அட்டகாசமாக உபயோகிக்க அவரால் முடியும்! என்ன செய்கிறார் பார்க்கலாம்!

mercredi 27 juin 2012

கிழக்கு மாகாணத்தின் முதல் அமைச்சர். 60 அல்லது 75 நாட்களில் தேர்தல்


இலங்கையின் கிழக்கு , வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாண கவுன்சில்கள் இன்று,புதன்கிழமை, நள்ளிரவிலிருந்து கலைக்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.
கிழக்கு மாகாணக் கவுன்சில் கலைக்கப்படும் உத்தரவில் மாகாண ஆளுநர் கையெழுத்திட்டுவிட்டார் என்று கிழக்கு மாகாணத்தின் முதல் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
எனவே, இலங்கை அரச படைகள் கிழக்கு மாகாணத்திலிருந்து, விடுதலைப்புலிகளை அப்புறப்படுத்திய பின்னர், அந்த மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை, இன்று ( புதன் கிழமை) நள்ளிரவுடன் பதவிழக்கிறது.
தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறிய சிவநேசத்துரை சந்திரகாந்தன், இன்னும் 60 அல்லது 75 நாட்களில் தேர்தல் நடக்கலாம் என்றார்.
மாகாணக் கவுன்சில் கலைப்புக்கு எதிராக மாகாண சபை சில வாரங்களுக்கு முன்னர் தீர்மானம் நிறைவேற்றியிருந்தாலும், அது எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானம், தற்போது அரசியல் சூழ்நிலை தங்களுக்கு சாதகமாக இருப்பதாக தாங்கள் கருதுவதால், மாகாண கவுன்சில் கலைப்புக்கு தான் பரிந்துரை செய்த்தாக சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறினார்.
மாகாணக் கவுன்சிலைக் கலைப்பதை எதிர்த்து நீதிமன்ற வழக்கொன்று இருந்தாலும், கவுன்சிலைக் கலைப்பதில் தடையேதும் வழங்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய அவர், சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்ட்து என்றார்.
வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைத்தே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி போட்டியிடும் என்றார் அவர்.
கிழக்கு மாகாண முதல் அமைச்சர் பதவி, தேர்தலுக்குப் பின்னர், தமிழருக்கே தொடர்ந்து தரப்படுமா என்பது குறித்து பதிலளித்த அவர், தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும், அந்த அடிப்படையில் முதலமைச்சர் பதவியும் தமிழர்களுக்கே கிடைக்கும் என்று நம்புவதாகவும் கூறினார்.

mardi 26 juin 2012

ஜனநாயகத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; ஜே.வி.பி

திருமுறிகண்டி பகுதியில் மக்களுக்கு படையினர் அச்சுறுத்தல் விடுத்ததை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது.

படையினரின் நில ஆக்கிரமிப்புக்கெதிராக இன்று திருமுருகண்டியில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கடந்த சில தினங்களாக அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை ஜே.வி.பி. வன்மையாக கண்டித்துள்ளது. 

இது தொடர்பில் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில்,

வடக்கு, கிழக்கு மக்கள் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட முடியாத நிலையிலும் சொந்த இடங்களில் குடியிருக்க முடியாதுள்ளவர்களாகவே உள்ளனர். 

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம்  நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இன்று திருமுறிகண்டியில் நடைபெறவிருக்கும் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் தொடர்பில் அப்பகுதி வாழ் மக்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரியவருகின்றது.

வடக்கு மக்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கும் தமது உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதை தடுப்பதற்கும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதை எமது கட்சி கண்டிக்கின்றது. 

இதன் மூலம் வடக்கில் சிவில் நிர்வாகம் இல்லையென்பதையும் ஜனநாயகம் மறுக்கப்படுவதையும் தெளிவாக்கியுள்ளது.

இன்று வடக்கு, கிழக்கு மட்டுமன்றி முழு நாடுமே அபாயகரமான நிலையிலுள்ளதுடன் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்பட்டு வருகின்றது. 

இதற்கு சான்றாக, அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற எமது கட்சியின் மக்கள் சந்திப்பு மீதான துப்பாக்கி பிரயோகமாகும். தற்போது நாட்டு மக்கள் ஜனநாயகம் தொடர்பில் பேசுவது அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் வடக்கு மக்களும் இணைய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். 
 

எமது வரலாறு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று கூறினாலும் கூட அதற்கான ஆதாரங்களை எம்மால் காட்ட முடியாத நிலைமை காணப்படுகின்றது.


தமிழ் மக்களுடைய வரலாறு 3ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய தொன்மையும் பழமையும் கொண்ட வரலாறாகும். ஆனாலும் கூட இதனை ஆதாரப்படுத்தும் வகையில் நாம் உரிய ஆதாரங்களைச் சேகரித்து வைக்காமலும் பாதுகாக்காமலும் கைவிட்ட நிலையில் இருக்கின்றமை வேதனைக்குரிய விடயமாகும் இவ்வாறு கூறினார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர் பேராசிரியர் கலாநிதி புஸ்பரெட்ணம்.
 
யாழ். மாநகர மரபுரிமைக் கழக அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராசிரியர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
இலங்கை தென் ஆசியாவிலேயே வரலாற்றுத் தொடர்புகளைக் கொண்ட ஒரு நாடாகும். இதிலும் வட இலங்கை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றை தொடர்ச்சியாகக் கொண்ட பகுதியாகும்.
 
 வட இலங்கை தவிர்ந்து தென்னிலங்கையை எடுத்துக் கொண்டால் வரலாற்றுச் சின்னங்களும் தொல் பொருள் சின்னங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய நிலைமை, சூழ்நிலை இங்கு காணப்படவில்லை.
 
தென்னிலங்கையில் இருந்து வரும் தொல் பொருளியலாளர்களுடன் எமது பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து கோட்டை அகழ்வு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
 
அவர்கள் மாணவர்களிடம் வரலாறு கேட்டால் எமது வரலாறு 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்று கூறினாலும் கூட அதற்கான ஆதாரங்களை எம்மால் காட்ட முடியாத நிலைமை காணப்படுகின்றது.
 
 எமது பொருளாதார அரசியல் அபிவிருத்தியைக் காண வேண்டுமாக இருந்தால் எமது தொன்மையைக் காட்ட மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும்.
தென்னிலங்கையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாற்றுச் சின்னங்கள் மரபுகளைக்காட்டக் கூடிய நிலையில் காணப்படுகின்றது. எம்மைப் பொறுத்தவரையில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முந்திய சங்கிலியன் காலத்து வரலாற்றைக் கூடப் பேண முடியாதவர்களாகக் காணப்படுகின்றோம் என்றார்.

நாம் கேட்பது எமது உரிமை அது கிடைக்கும் வரை ஓய மாட்டோம்"நிறுத்து நிறுத்து ஆக்கிரமிப்பை நிறுத்து""


காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என அரச இயந்திரத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், தமிழ் மக்களின் நிலங்கள் வன்பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியது.

திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயச் சூழலில் காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழர் நிலம் வன்பறிக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பரித்து வருகின்றனர்.

"நாம் கேட்பது எமது உரிமை
அது கிடைக்கும் வரை ஓய மாட்டோம்"

"எமது பூர்வீகத்தை அசிங்கப்படுத்தாதே"

"போர் முடிந்து மூன்றாடுகள் ஆகிவிட்டது.
இன்னும் எம் நிலத்தில் இராணுவமா?"

"சொந்த மண்ணில் அகதிகளாக நாம்"

"நிறுத்து நிறுத்து ஆக்கிரமிப்பை நிறுத்து"

எனப் பலகோஷங்கள் எழுப்பியவாறு கவனயீர்ப்பில் பங்கு கொண்டோர் ஆர்ப்பரித்தனர்.

பொதுமக்கள் எவரும் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என அச்சுறுத்தும் வகையில் இன்று காலை முதல் ஆலயச் சுற்றாடலில் படையினர், காவற்றுறையினர் மற்றும் புலனாய்வாளர்கள் என பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர். அதனையும் மீறியே பொதுமக்கள் திரண்டுள்ளனர்.

அத்துடன், பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரிடம் படையினரும் காவற்றுறையினரும் அவர்களுடன் புலனாய்வாளர்களும் சென்று அச்சுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. போராட்டம் ஆலய முன்றலில் நடைபெற்றால் ஆலய நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சோ.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் மனோ கணேசன் உள்ளிட்ட பலரும் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்பள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.



    
      
     
   

மக்களின் நிலங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன



 மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் காணிகளை மறைமுகமாக ஆக்கிரமிக்கும் செயற்பாடுகள் அதிகரித்து வருகின்றன என்று தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக மடுப் பிரதேச செயலர் பிரிவினுள் அடங்கும் குஞ்சுக்குளம் பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தைக் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளதுடன் இதற்கான அறிவிப்புப் பலகையையும் நட்டுள்ளனர்.
இத்தகைய காணி அபகரிப்பு மூலம் மடுச்சந்திக்கு அடுத்ததாக ஒரு தனிச்சிங்களக் கிராமத்தை உருவாக்கும் முயற்சியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.
 
ஏற்கனவே குஞ்சுக்குளம் தொங்கு பாலத்துக்குப் பின்புறமாக அமைந்துள்ள காடுகளை அண்டிய பெரியதொரு நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் உட்பிரவேசிக்க இயலாதவாறு வேலியிடப்பட்டு அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
 
பொது மக்களுக்குச் சொந்தமான இந்தப் பகுதியைக் கடற்படையினர் உரிமை கொண்டாடுவது தொடர்பாக பிரதேச செயலக அதிகாரிகளும், உள்ளூராட்சித் திணைக்கள அதிகாரிகளும் மௌனம் காத்து வருகின்றனர்.
 
இவ்வாறு பல ஆயிரம் ஏக்கர் தமிழ் மக்களின் நிலங்கள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று தெரிய வருகின்றது. மாந்தை மேற்குப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள சன்னார்ப் பகுதியில் பெருமளவு நிலத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர் முள்ளிக்குளம் கிராம மக்களின் வாழ்விடங்களைக் கடற்படையினர் பறித்தெடுத்துள்ளனர்.
 
மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத் திட்டக் கிராமமும் கடற்படையினர் வசம். இவ்வாறு திட்டமிடப்பட்ட ஆக்கிரமிப்புக்கள் மூலமாக சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி நிலப்பரப்பை மாற்றி தமிழ் மக்களின் இருப்பைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி இடவேண்டுமென சமூக ஆர்வலர்கள் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து

                  தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து தங்களை வெளியேற்றுமாறு அங்குள்ள முகாம் வாசிகள் கடந்த ஒருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எட்டு பேர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழம் பெற்றுக்கொடுப்போம் என்ற முழக்கத்தின் கீழ் அரசியல் இலாபம் ஈட்டும் தமிழ் நாட்டின் தமிழ் இனவாதக் கட்சிகள் முகாம்களில் வதைக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறித்துக் கண்டுகொள்வதில்லை. இன வெறுப்புணர்வைத் துண்டும் வகையில் நாம் தமிழர் கட்சி ஆவணம் ஒன்றை வெளியிட்டுருந்தது. ஈழத் தமிழர்களின் இரட்சகர்களாகத் தம்மைப் புனைந்துகொள்ளும் இவர்கள் தமிழகம் எங்கும் உள்ள முகாம்களில் வாழும் அகதிகளின் அவலம் குறித்து வாய்திறப்பதில்லை.
புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களின் பணக் கொடுப்பனவு மீதும், தமிழகத்தில் இனவெறியைத் தூண்டி வாக்குக்களைப் பெற்றுக்கொளும் செயற்பாட்டின் மீதும் மட்டுமே அக்கறை கொண்ட சந்தர்ப்ப வாத அரசியல் தலைமைகள் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் அகதிகளுக்காக மேற்கொண்டதில்லை. செங்கல்பட்டிலிருந்து பாண்டிச்சேரி வரைக்கும் ஈழத் தமிழ் அகதிகள் வேண்டப்படாத மிருகங்கள் போல நடத்தப்படுகிறார்கள்.
பிரபாகரன் வாழ்கிறார், ஈழப் போர் ஆரம்பமாகிறது, ராஜபக்ச தூக்கில் தொங்கப்போகிறார் போன்ற கோமாளித் தனமான உணர்ச்சியூட்டும் அரசியல் நடத்தும் இந்தச் சந்தர்ப்பவாத கோமாளிகளின் அருவருப்பான அரசியல் அகதிகளை 20 வருடங்களுக்கு மேலாக முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்கவும் உதவியிருக்கிறது.
மரணத்தின் விழிம்பில் மனித உரிமைக்காகப் போராடும் அகதிகளின் போராட்டத்தை மனிதாபிமானமுள்ள ஒவ்வோர் மனிதனும் ஆதரிக்க வேண்டும்  

lundi 25 juin 2012

உதவி ஒன்றுக்கு, “நோ.. தாங்ஸ்” சொல்லி அதிர வைத்திருக்கிறது இலங்கை அரசு

                                  டில்லி செய்ய முன்வந்த உதவி ஒன்றுக்கு, “நோ.. தாங்ஸ்” சொல்லி அதிர வைத்திருக்கிறது இலங்கை அரசு. யுத்தம் நடைபெற்ற வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணத்தில், விமான நிலையத்தை டெவலப் செய்தும் திட்டத்தில் இருந்து இந்தியாவை கழட்டி விட்டிருக்கிறது கொழும்பு.
யாழ்ப்பாணத்தில், பலாலி என்ற இடத்தில் விமான நிலையம் ஒன்று உள்ளது. யுத்தம் துவங்குவதற்குமுன் சிவில் பாவனைக்கான விமான நிலையமாக இருந்த பலாலி, இலங்கை ராணுவத்தின் தளமாக மாறியது. யாழ்ப்பாணத்தில் இலங்கை ராணுவத்தின் மிகப்பெரிய படைத்தளமே பலாலிதான்.
அமைச்சர் ஜெயரத்னே: “வுடுங்க பங்காளி.. நாங்களே பாத்துக்கிறம்”
யுத்தம் முடிந்தபின், இந்த விமான நிலையத்தை மீள்கட்டமைப்பு செய்து, பன்னாட்டு விமான நிலையமாக்கும் ப்ராஜெக்ட் ஒன்றை செய்ய இந்தியா முன்வந்தது. அதற்கு இலங்கை அரசு ஒப்புதல் கொடுத்தது.
இதை இந்தியா பெற்றிராவிட்டால், என்ன ஆகியிருக்கும்? ஹம்பாந்தோட்ட என்ற இடத்தில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைத்துக் கொடுத்த சீனா, பலாலியிலும் விமான நிலையம் கட்டிக் கொடுக்க ஒப்பந்தம் போட்டிருக்கும். இலங்கையில் யுத்தம் முடிந்தவுடன், சீனாவும், இந்தியாவும் துண்டுபோட்டு சீட் பிடித்த ப்ராஜெக்ட்களில் இதுவும் ஒன்று.
இங்குள்ள முக்கிய விவகாரம் என்னவென்றால், விமான நிலைய ப்ராஜெக்ட்டை இந்தியாவுக்கு கொடுப்பதாக இலங்கை பேச்சளவில் ஒப்புக் கொண்டிருந்த போதிலும், ஒப்பந்தம் ஏதும் செய்யப்படவில்லை.
சமீபகாலமாக டில்லிக்கும், கொழும்புக்கும் இடையே உறவுகள் சுமுகமாக இல்லை. இதையடுத்து, விமான நிலைய திட்டத்தில் இந்தியாவை கூட்டுச் சேர்ப்பதில்லை என அறிவித்துள்ளது இலங்கை.
இலங்கையின் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ப்ரியங்கார ஜெயரத்னே, தமது அமைச்சு விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்திருக்கிறார். “பலாலி ஏர்போர்ட் பொதுமக்களின் பாவனைக்காக மீள்கட்டுமானம் செய்யப்படும் பணியில், எமது அமைச்சும், விமானப்படையும் இணைந்து ஈடுபட உள்ளோம். இந்திய கூட்டுத் திட்டமாக இது செயல்படாது” என அறிவித்துள்ளார்.
இப்படி சொல்லி டில்லியை கழட்டிவிட்டு, சீனாவிடம் திட்டத்தை ஒப்படைத்தால் என்னாகும்? (இருந்து பாருங்கள். அநேகமாக அப்படித்தான் நடக்கும்).

dimanche 24 juin 2012

முள்ளிவாய்க்கால்: புலிகளின் இறுதிப்போரா?


  • விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாக 2009 மே 19ம் திகதி அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், நடத்திய முதலாவது செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 2009 ஏப்ரல் 19ம் திகதியே போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறியிருந்தார். இரட்டைவாய்க்காலை கைப்பற்றியதுடன் போர் முடிந்து விட்டதாகவும், அதற்குப் பின்னர்- 2009 மே 19ம் திகதி வரை கேணல்கள் மற்றும் லெப்.கேணல்கள் தலைமையில் நடந்தது தேடியழிக்கும் நடவடிக்கைகள் தான் என்றும் அவர் கூறியுள்ளார். திடீரென அவர் இவ்வாறு கூறியுள்ளதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு விடை தேட முன்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போர் எது என்பதை வரையறுத்தாக வேண்டியுள்ளது.இருதரப்பும் பெரும் பலத்துடன் பொருதிய பெரும் சமரைத் தான் இறுதிப்போர் எனலாம். அப்படிப் பார்த்தால், உண்மையில் புலிகளின் இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் நடக்கவில்லை. ஆனந்தபுரத்தில் நடந்தது தான் இறுதிப்போர். புதுக்குடியிருப்புக்குக் கிழக்கே ஆனந்தபுரத்தில் இந்த இறுதிச்சமர் – 2009 ஏப்ரல் முதல் வாரம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தது. இந்தச் சமர் தான் விடுதலைப் புலிகள் நடத்திய மிகப்பெரிய இறுதிச்சமர். இந்தச் சமரில் புலிகளின் முக்கிய தளபதிகள் தீபன், கடாபி, மணிவண்ணன், விதுசா, துர்க்கா, நாகேஸ், கோபால் போன்ற பலரும், 600 இற்கும் அதிகமான போராளிகளும் உயிரிழந்தனர். அரசபடையினருக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்த புலிகளின் அணிகளைச் சுற்றிவளைத்து நடத்தப்பட்ட இந்த அழித்தொழிப்புச்சமர், விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக அமைந்தது. ஆனந்தபுரம் சமருடன் புலிகளின் மரபுவழிப் போர்ப்பலமும், அணிகளும் சிதைந்து போயின. இதற்குப் பின்னர் புலிகள் நடதியதெல்லாம் வெறும் தற்காப்புக்கான சிறு சிறு சண்டைகளைத் தான். அதையும் கூட அவர்கள், அழிவில் இருந்து தப்பிக் கொள்வதற்கான காலஅவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்கே நடத்திக் கொண்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் வரை நீண்ட தற்காப்புக்கான இந்த சண்டைகள் 2009 மே 19இல் முடிவுக்கு வந்தன.
கட்டுரையாளர் இன்போ தமிழின் இராணுவ ஆய்வாளர் சுபத்ராinfo@infotamil.ch
இனி,
  • விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்து விட்டதாக 2009 மே 19ம் திகதி அரசாங்கத்தினால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வெலிக்கடைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், நடத்திய முதலாவது செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, 2009 ஏப்ரல் 19ம் திகதியே போர் முடிவுக்கு வந்து விட்டதாக கூறியிருந்தார். இரட்டைவாய்க்காலை கைப்பற்றியதுடன் போர் முடிந்து விட்டதாகவும், அதற்குப் பின்னர்- 2009 மே 19ம் திகதி வரை கேணல்கள் மற்றும் லெப்.கேணல்கள் தலைமையில் நடந்தது தேடியழிக்கும் நடவடிக்கைகள் தான் என்றும் அவர் கூறியுள்ளார். திடீரென அவர் இவ்வாறு கூறியுள்ளதற்குக் காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு விடை தேட முன்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போர் எது என்பதை வரையறுத்தாக வேண்டியுள்ளது.
    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை, தளபதிகள், கட்டமைப்புகள் எல்லாமே முற்றாக அழிக்கப்பட்டது 2009 மே 17, 18, 19ம் திகதிகளில் தான்.
    ஆனால் அதையே இறுதிப்போராக வரையறுக்க முடியாது.
    அதேவேளை சரத் பொன்சேகா சொல்வது போல, புலிகளுக்கும், அரச படையினருக்கும் இடையிலான இறுதிப்போராக ஏப்ரல் 19ம் திகதியைக் குறிப்பிடவும் முடியாது.
    இருதரப்பும் பெரும் பலத்துடன் பொருதிய பெரும் சமரைத் தான் இறுதிப்போர் எனலாம். அப்படிப் பார்த்தால், உண்மையில் புலிகளின் இறுதிப் போர் முள்ளிவாய்க்காலில் நடக்கவில்லை. ஆனந்தபுரத்தில் நடந்தது தான் இறுதிப்போர். புதுக்குடியிருப்புக்குக் கிழக்கே ஆனந்தபுரத்தில் இந்த இறுதிச்சமர் – 2009 ஏப்ரல் முதல் வாரம் தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தது. இந்தச் சமர் தான் விடுதலைப் புலிகள் நடத்திய மிகப்பெரிய இறுதிச்சமர். இந்தச் சமரில் புலிகளின் முக்கிய தளபதிகள் தீபன், கடாபி, மணிவண்ணன், விதுசா, துர்க்கா, நாகேஸ், கோபால் போன்ற பலரும், 600 இற்கும் அதிகமான போராளிகளும் உயிரிழந்தனர். அரசபடையினருக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்த புலிகளின் அணிகளைச் சுற்றிவளைத்து நடத்தப்பட்ட இந்த அழித்தொழிப்புச்சமர், விடுதலைப் புலிகளின் வரலாற்றில் மிகப்பெரிய பேரழிவாக அமைந்தது. ஆனந்தபுரம் சமருடன் புலிகளின் மரபுவழிப் போர்ப்பலமும், அணிகளும் சிதைந்து போயின. இதற்குப் பின்னர் புலிகள் நடதியதெல்லாம் வெறும் தற்காப்புக்கான சிறு சிறு சண்டைகளைத் தான். அதையும் கூட அவர்கள், அழிவில் இருந்து தப்பிக் கொள்வதற்கான காலஅவகாசத்தைப் பெற்றுக் கொள்வதற்கே நடத்திக் கொண்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் வரை நீண்ட தற்காப்புக்கான இந்த சண்டைகள் 2009 மே 19இல் முடிவுக்கு வந்தன.
    தற்காப்புக்காக புலிகள் கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் நடத்திய சண்டைகளில் சில பெரியதாக இருந்தாலும் – அவை மரபுரீதியான போராயுதங்களுடனோ, ஒழுங்கமைக்கப்பட்ட அணிகளுடனோ நடத்தப்பட்டவையல்ல. ஆனந்தபுரம் சமருக்குப் பின்னர், புலிகள் செயலற்ற நிலைக்குள் தள்ளப்பட்டு விட்டனர். அவர்களால் அதன் பிறகு எதையும் செய்ய முடியாது போனது. இதை உணர்ந்து கொண்டே, அரசபடையினர் மெல்ல மெல்ல புலிகளின் கழுத்தை இறுக்கி – நெரித்து – முற்றாக அழித்தனர். இதுதான் போரின் இறுதிக்கட்டம். இந்தநிலையில் தான் சரத் பொன்சேகா, இரட்டைவாய்க்காலை கைப்பற்றியதுடன் போர் முடிந்து விட்டதாகவும், அதன்பின்னர் நடந்தது வெறும் தேடியழிப்பு நடவடிக்கைகள் (mopping-up operation) தான் என்றும் கூறியுள்ளார்.
    ஒரு சமரின் முடிவில் நடத்தப்படுவது தான் இந்தத் தேடியழிப்பு நடவடிக்கை.
    அதாவது சண்டையில் தப்பி எஞ்சியிருப்போரை தேடிப்பிடித்து அழிக்கும் நடவடிக்கையே இது.
    இதற்கு ஆட்டிலறிகள், மோட்டார்கள் தேவைப்படாது. விமானக்குண்டு வீச்சுகளும் தேவையில்லை.
    சாதாரணமான துப்பாக்கிகளுடன் படையினர் நடத்தும் தேடுதலைப் போலத் தான் இதுவும்.
    சரத் பொன்சேகா சொல்வது போல, இரட்டைவாய்க்காலுடன் போர் முடிவுக்கு வந்திருந்தது உண்மையானால்- அதற்குப் பின்னர் எதற்காக பீரங்கிகள், மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டன?
    தேடியழிக்கும் நடவடிக்கைகளுக்கு அவை தேவையில்லையே.
    இரட்டைவாய்க்கால் கைப்பற்றப்பட்ட பின்னர், மே 18 வரை இடம்பெற்ற பீரங்கித் தாக்குதல்களில் பெருமளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில் இதை மறுத்து வந்த அரசதரப்பு இப்போது இறுதிப்போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் அது எவ்வளவு என்பதில் தான் முரண்படுகிறது. சரத் பொன்சேகா சொல்வது போலவே, இரட்டைவாய்க்காலுடன் போர் முடிந்து விட்டதாகவே கருதினாலும், போர் நடக்காத – வெறும் தேடியழிப்பு நடவடிக்கைகள் மட்டும் நடந்த ஒரு மாத காலத்தில் எப்படி அதிகளவிலான பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்? இந்தக் கேள்விக்கு சரத் பொன்சேகா விடை கூறுவது சிரமமானது, அதேவேளை, இரட்டைவாய்க்காலுடன் போர் முடிந்த விவகாரத்தை சரத் பொன்சேகா இப்போது வெளியே சொல்லக் காரணம் என்ன? 
    போரின் இறுதி நாட்களில் அவர் கொழும்பில் இருக்கவில்லை. ஒருவார கால அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு 2009 மே 11ம் திகதி சீனா சென்றவர் மே 17ம் திகதி தான் திரும்பினார். சரத் பொன்சேகா கொழும்பு திரும்பிய போது போர் கிட்டத்தட்ட முடிந்தே விட்டது. புலிகளின் போராளிகள் சரணடையத் தொடங்கியிருந்தனர். புலிகளின் தலைமையைத் தேடியழிக்கும் நடவடிக்கை தான் மீதியாக இருந்தது. இதையே சாட்டாக வைத்துக் கொண்டு, சரத் பொன்சேகா போரின் இறுதிக்கட்டத்தை வழிநடத்தவில்லை என்ற பிரசாரத்தை பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஸ கட்டவிழ்த்து விட்டிருந்தார். சரத் பொன்சேகாவே புலிகளுக்கு எதிரான போரை வென்று கொடுத்திருந்தார். ஆனாலும் அவர் இறுதிநேரத்தில் சீனாவில் இருந்ததை காரணம் காட்டி, வரலாற்றில் இருந்து அவரது பெயரை அழிக்கும் முயற்சிகள் நடந்தன-நடக்கின்றன. இந்தக் கட்டத்தில் தான் சரத் பொன்சேகா, தான் சீனாவுக்குச் செல்ல முன்னரே போர் முடிந்து விட்டது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
    போரின் வெற்றியைப் பங்கு போடுவதில், கோத்தாபய ராஜபக்ஸவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது. சரத் பொன்சேகா சிறையில் இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, சந்திரபிறேம என்ற உபாலி குறூப்ஸ் ஊடகவியலாளரை வைத்து கோத்தாவின் போர் என்ற நூலை எழுதி வெளியிட்டு விட்டார் கோத்தாபய ராஜபக்ஸ. மூன்றாண்டுகள் போரை நடத்திய கோத்தாபயவுக்கு, முப்பதாண்டுப் போரின் ஒட்டு மொத்த புகழும் ஒரே நூலின் மூலம் தாரை வார்க்கப்பட்டது. இந்தநிலையில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சரத் பொன்சேகா, தனது சுயசரிதையை எழுதப் போகிறார். இராணுவத் தளபதியானது வரை ஒரு நூலாகவும், அதன் பின்னர் நடந்தவற்றை வைத்து தனிநூலாகவும் வெளியிடப் போகிறார். சரத் பொன்சேகாவின் சுயசரிதை, போர் பற்றிய பல வெளிவராத தகவல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரவும் கூடும். சிலவேளைகளில் பல உண்மைகள் மறைக்கப்படவும் கூடும்.
    சரத் பொன்சேகாவிடம் இப்போது ஜெனரல் பட்டம் இல்லை. இதனால் அவர் தனது வரலாற்றை சுயசரிதை மூலமே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதேவேளை, சரத் பொன்சேகா எழுதப்போகும் சுயசரிதை பலரது வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இது வெளியாகும் வரை பலருக்குத் தூக்கம் வரப்போவதும் இல்லை.

வீடியோச் செய்திகள்

               

யாருக்காகவும் எதற்காகவும் எம் இருப்பிடத்தை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை


எதிர்ப்பு அரசியலில் அபிவிருத்திகளை விட்டுக் கொடுக்கவோ கலப்பு அரசியலால் உரிமைகளை விட்டுக் கொடுக்கவோ த.ம.வி.பு கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் என்றும் தயார் இல்லை. தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்போம் என்று மக்களின் வரிப்பணத்தின் மூலம் கிடைக்கப்பெறும் அபிவிருத்திப் பணிகளை 65 வருடங்களாக ஏனைய சமூகங்களிற்கும் ஏனைய மாவட்டங்களிற்கும் கொடுத்து விட்டு அண்ணார்ந்து பார்க்கும் நிலையினையோ அல்லது அபிவிருத்தி மட்டும் போதும் என்று யதார்த்த பூர்வமான உரிமை விடயங்களையும் கை விட்டு விடவும் இல்லை, என்பதை கடந்த 4 வருடங்களில் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.
கிழக்கு மாகாணம் 3 இனங்களையும் கொண்ட பல் இன மக்கள் வாழும் மாகாணம். ஒவ்வொரு அரசியல் தலைமைகளும் தாம் சார்ந்த இனக் குழுக்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்படுவார்கள். அபிவிருத்திகள் என்று வரும் போதும் உரிமைப் பிரச்சினைகளையேனும் தம் மக்களினையே கருத்தில் கொண்டு செயற்படுவார்கள். இதுவே உண்மையானதும் கடந்த காலம் கற்றுக் கொண்ட பாடமும் ஆகும்.
கிழக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்ட 2008ம் வருடம் தொடக்கமே தமிழ் பேசும் கிழக்கு மாகாணத்தில் அரசியல் ரீதியான அதிகாரங்களை நுகரத் தொடங்கியது மட்டுமன்றி அரசியல் பேசவும் ஆரம்பித்துள்ளனர். பல இளம் தலைமுறைகள் அரசியலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இது நல்ல எதிர் காலத்தினை தோற்றுவிக்கும் இவ் வேளையில் மீண்டும் மாகாண சபை ஆட்சி அதிகாரமும் தமிழரின் கரங்களை விட்டுச் சென்றதால் விளைவு விபரீதமாக மிகவும் பிடிப்போடு இருக்கும் மட்டக்களப்பு மாவட்டம் நாளை தனித்துவத்தினை இழக்கும் நிலை ஏற்படும்2010ம் வருடம் நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அதிகமாவாதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் த.ம.வி.பு கட்சி எடுத்த தீர்க்கத்தரிசனமான முடிவே காரணம். இன ஒற்றுமை தொடர்ந்து நிலவுவதற்கு ஏற்றத் தாழ்வற்ற அபிவிருத்தியும் அரசியல் அதிகாரங்களும் மிகவும் தேவைப்பாடான ஒன்றாகும். என்று வளங்கள் ஓர் இனத்தின் பக்கம் குவிக்கப்படுகின்றதோ ஏனைய இனங்கள் பாதிக்கப்படுவதனை உணர்ந்து தமது இருப்பை நிலைப்படுத்த போராட ஆரம்பிக்கின்றது. இதன் வெளிப்பாடு கடந்த கால ஏக்கம். இவ் ஏக்கத்திற்கு வித்திட்டது எமது எதிர்ப்பு அரசியலும் சில கால கலப்பு அரசியலும் ஆகும்.
ஆனால் இன்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மேற்கொள்வது இணக்கப்பாட்டு அரசியல் தாம் சார்ந்த சமூகத்தின் வலுவாக்கத்திற்காக ஆனாலும் அரசுடன் சுமூகமான இனக்கப்பாட்டு அரசியலை மேற்கொள்கின்றது. யதார்த்த பூர்வமான தேவைப்பாடும் இதுவாகவே உள்ளது.கிழக்கு மாகாணத்தின் எதிர்க்கட்சி ஆசனத்தில் தமிழர்கள் இருக்கும் நிலை உருவானால் மீண்டும் எமது இருப்பு கேள்விக் குறியாகி விடும். இதற்கு இடம் கொடுக்க ஒரு போதும் த.ம.வி.பு.கட்சி தயாராக இல்லை என்பதனை உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன் என கி.மா.சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி தொடர்பான கொள்கை விளக்கக் கூட்டம் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் ஆரையம்பதி மாகாணசபை இணைப்பு பணிமனையில் நடைபெற்றபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ராஜினாமா ஜனாதிபதியின் ஆலோசகர் ஹேமகுமார நாணயக்கார

ஜனாதிபதியின் விவசாய அபிவிருத்தி ஆலோசகர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் கலாநிதி ஹேமகுமார நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார். நாட்டின் விவசாயத்துறை தொடர்பான  முட்டாள் தனமான தீர்மானங்கள் பலவற்றை அரசாங்கம் மேற்கொண்டதன் காரணமாகவே தான் ராஜினாமா செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். "நெல் கொள்வனவுக்கான உத்தரவாத விலை 24 ரூபா என உறுதியளிக்கப்பட்டது. இப்போது அது 18 ரூபாவாக குறைக்கப்பட்டமை விவசாயிகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துகொண்டு நான் இதை கூறவில்லை. அநுராதரபும், பொலன்னறுவை, மெதிரிகிரிய, கவுடுல்ல, கினிதம, ஹிங்குராக்தமன உட்பட  இடங்களுக்குச் சென்று விவசாயிகளை சந்தித்தேன். இப்பயணங்களுக்கு பின்னர் அறிக்கையொன்றை தயாரித்து, பொறுப்பான அனைவரிடமும் சமர்ப்பித்து இப்பிரச்சினையை தீர்க்குமாறு கோரினேன். ஆனால் இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை" என அவர் கூறினார். "குண்டசாலை விவசாய கல்லூரி உள்ள இடத்தில் விமான நிலையமொன்றை அமைப்பது முட்டாள்தனமான திட்டம். சீதா எலிய விதை நிலையத்திலும் அவர்கள் விமான நிலையமென்றை அமைக்க விரும்புகிறார்கள்"  எனவும் அவர் கூறினார். தனது எதிர்கால அரசியல் குறித்து இன்னும் சில தினங்களில் தீர்மானிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இறுதியாக 2004 ஆம் ஆண்டு காலி மாவட்டத்திலிருந்து ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான ஹேமகுமார பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் 2010 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த அவர், 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.  பின்னர் அவர் ஜனாதிபதியின் விவசாயத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.இலங்கையின் நிலையான விவசாய அபிவிருத்திக்காக சேதன விவசாயத்தை கடைப்பிடித்தல் தொடர்பாக அவர் மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக கடந்த வருடம் பேராதனை பல்கலைக்கழகத்தினால் அவருக்கு கலாநிதி பட்டம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

samedi 23 juin 2012

ரஞ்சிதா தோளருகே.வைஷ்ணவி காலருகே.மதுரை போலீஸ் கோர்ட்டருகே...


நித்தியானந்தா விவகாரம் தொடர்பில் தமிழக காவல்துறைக்கு ஒரு சாஃப்ட் கார்னர் உள்ளது என்ற தோற்றம் உண்டு. அதை உறுதி செய்வது போல, இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலை கண்ணன், மதுரை ஹைகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுமீது வழக்கு தாக்கல் செய்யாமல் ‘கம்’மென்று இருந்து வந்தது மதுரை போலீஸ்.
சோலை கண்ணனின் மனு என்ன சொல்கிறது?
மே 12-ம் தேதி அவரும், நண்பர்களும் மதுரை ஆதீன மடத்துக்கு சென்றிருக்கின்றனர். அங்கேயிருந்த ‘இளைய ஆதீனம்’ நித்யானந்தா அவர்களைத் தனியாக அழைத்து, சமாதானம் பேசியிருக்கிறார். “எனது பூஜைகளில் கலந்துகொண்டால் ‘பேரின்பம்’ கிட்டும்” என்றும் சொன்னாராம்.
‘பேரின்பத்தை’ காணும் ஆவலில் இவர்களும் பூஜையில் கலந்து கொண்டனர்.
முத்த ஆதீனம் வந்தார், இளைய ஆதீனம் வந்தார். இளம் பெண்கள் வந்தார்கள். ரஞ்சிதா வந்தார். பூஜை ஆரம்பமானது.
மூத்த ஆதீனத்துக்கு பெரிய சிம்மாசனம் போடப்பட்டிருந்தது. (பூஜை அவரது ஹோம்-கிரவுண்டில் நடந்ததால்!) பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த மூத்த ஆதீனத்தின் கால்களை வைஷ்ணவி வருடிக் கொண்டிருந்தார். சிறிய சிம்மாசனத்தில் நித்தி சுவாமிகள் அமர்ந்திருக்க, அவரருகே ரஞ்சிதா நின்று கொண்டார்.
அனைவருக்கும் ‘பரிசுத்த தீர்த்தம்’ வழங்கப்பட்டது. அதை குடித்ததும் லேசான போதை ஏற்பட்டது. ஆங்கில பாடல் இசையுடன் ஒலிக்க துவங்கியது. அங்கிருந்தவர்கள் இசைக்கு ஏற்ப ஆடினர். ஆனந்த தாண்டவத்தில் அணைந்து கொள்ளுமாறு இவர்களையும் அன்புடன் அழைத்த நித்தியானந்தா, புலித்தோலில் படுத்துக் கொண்டார்.
இதற்கு மேலும் பேரின்பத்தைக் காண்பதில் ஆர்வமில்லாமல், மடத்தை விட்டு வெளியே வந்துவிட்டதாக சோலை கண்ணன் தமது மனுவில் தெரிவித்திருந்தார். இந்த பேரின்பமே ஃபவுல்-கேம் என்ற ரீதியில் உள்ள அவரது மனுவில், “நித்யானந்தா, ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிமன்றம் வருவதற்கு முன் இதே மனுவை அவர், விளக்கத்தூண் காவல் நிலையத்திலும் புகாராக கொடுத்திருந்தார்.
விளக்கத்தூண் காவல் நிலையத்தில் இருந்த போலீஸாருக்கு, இவர்களது மனு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். “என்னய்யா இந்தாள்.. பேரின்பம் அடைந்ததை குற்றம் சொல்கிறார்” என்று நினைத்தார்களோ, என்னவோ, மனுவை பரணில் தூக்கி போட்டுவிட்டு பஜ்ஜி சாப்பிட போய்விட்டார்கள்.
அவர்கள் நடவடிக்கை எடுக்காத காரணத்தாலேயே, நீதிமன்றக் கதவைத் தட்டியிருந்தார் இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சோலை கண்ணன்.
மதுரை ஹைகோர்ட் கிளையில் இந்த மனுவை நீதிபதி ஏ.செல்வம் நேற்று விசாரித்தார். சோலை கண்ணன் கொடுத்த புகார்மீது விளக்கத்தூண் காவல் நிலையத்தில் கேஸே பதிவாகவில்லை என்பதை தெரிந்து கொண்டதும் கோபம் கொண்ட நீதிபதி, அரசு வக்கீலிடம், “மனுதாரர் புகார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்கிறார்களா? அல்லது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமா?” என காட்டமாகவே கேள்வி கேட்டார்.
போலீஸ் பஜ்ஜி செஷனில் இருந்து திரும்பி வழக்கு பதிவு செய்ய அவகாசம் கொடுக்கும் நோக்கத்துடன், விசாரணையை பிற்பகல்வரை ஒத்தி வைத்தார்.
நீதிபதியின் கோபம் பற்றி தகவல் அறிந்த விளக்குதூண் போலீசார், அலறியடித்துக் கொண்டு வழக்கு பதிவு செய்து கொண்டனர்.
பிற்பகல் மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு வக்கீல் அன்பரசன், “விளக்குதூண் போலீசார், துரித கதியில் செயற்பட்டு, நித்யானந்தா, ரஞ்சிதா, வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்றார் பெருமிதத்துடன்.
அரசு வக்கீல் பெருமிதம் அடைவது நியாயம்தானே!

ஆயுத சப்ளை!ரகசியமாக எல்லை ஓரமாக நின்று சி.ஐ.ஏ.,


அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.-வின் ஏஜென்டுகள், போராளிகளுக்கு ரகசியமாக எந்திரத் துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்களை சப்ளை செய்யும் ‘ரகசியத்தை’ அம்பலப்படுத்தியுள்ளது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை. வழங்கப்பட்ட ஆயுதங்களில் டாங்கிகளை தாக்கும் சிறிய ரக ஏவுகணைகளும் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.
சிரியாவில், அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளிகளுக்கு, சிரியா நாட்டு எல்லையில் வைத்து இந்த ஆயுதங்கள் கொடுக்கப்பட்டதாக, அப்பத்திரிகை குறிப்பிடுகிறது.
சிரியா போராளி இயக்கத்தினரின் கைகளில் வெளிநாட்டு ஆயுதங்கள்!
உளவு வட்டாரங்களில் அடிபடும் கதைகளில் இருந்து, பத்திரிகைச் செய்தி நிஜம்தான் என்று தெரியவருகிறது. ஆனால், சி.ஐ.ஏ.-வின் இந்த ரகசிய சப்ளை விவகாரம் பற்றி பிரிட்டிஷ் உளவுத்துறை எம்.ஐ.-6. தமது அதிருப்தியை தெரிவித்துள்ளதாகவும் தகவல் உண்டு.
சிரியாவில் அரசுக்கு எதிராக யுத்தம் புரிவது, குறிப்பிட்ட ஒரு போராளி இயக்கம் அல்ல. அவர்களுக்குள் வெவ்வேறு போராளி இயக்கங்கள் கலந்து போய் உள்ளார்கள். இந்த இயக்கங்களில் சில அமைப்புகளுக்கு அல்-காய்தாவுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.
சிரிய அரசை எதிர்ப்பதற்காக சி.ஐ.ஏ. கொடுக்கும் இந்த ரகசிய ஆயுதங்கள், நாளையே அல்-காய்தாவினரின் கைகளில் போய் சேர்ந்து விடலாம் என்பதே, பிரிட்டிஷ் உளவுத்துறையின் அதிருப்திக்கு காரணம்.
ஆனால், இந்த விஷயத்தில் பிரிட்டிஷ் உளவுத்துறையால் பெரிதமதாக ஏதும் செய்ய முடியாது என்ற நிலையே தற்போது உள்ளது. காரணம் என்னவென்றால், சிரியாவின் எல்லையில் வைத்து ஆயுத சப்ளை செய்யும் ரகசிய நடவடிக்கை, துருக்கி நாட்டின் தென்பகுதியில் வைத்தே ஆபரேட் செய்யப்படுவதாக தெரிகிறது.
துருக்கியில் சி.ஐ.ஏ.-யின் செயல்பாடு, வேறு எந்த உளவுத் துறையையும்விட பெரியது. அவர்களுக்கு அங்கே ஒரு பெரிய ஆபரேஷன் சென்டரே உள்ளது. துருக்கி அரசின் ஆதரவும் உண்டு. பிரிட்டிஷ் உளவுத்துறையும் துருக்கியில் இருந்து இயங்குகிறது என்றாலும், அவர்களது துருக்கி ஆபரேஷன் மிக சிறியது.
இதனால், துருக்கியில் வைத்து சி.ஐ.ஏ. செய்வதை, ‘சூரியன் அஸ்தமிக்காத நாட்டுசாம்ராஜ்யத்தின்’ ஏஜென்டுகள் சும்மா வேடிக்கைதான் பார்க்க முடியும்!
தற்போது வெளியாகியுள்ள இந்த ரகசிய சப்ளை விவகாரம் குறித்து, சி.ஐ.ஏ. இதுவரை வாய்திறந்து கருத்து எதையும் சொல்லவில்லை! அநேகமாக நாளை மறுப்பு அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.

வீடியோச் செய்திகள்

                                                                           

vendredi 22 juin 2012

தமிழினியை புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்துமாறு இலங்கை நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.


சுப்ரமணியம் சிவகாமி என்ற இயற்பெயரிலான தமிழினி, கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் படையினரிடம் சரணடைந்ததை அடுத்தே கைது செய்யப்படதாக கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றத்திடம் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
தமிழினிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதை தவிர்த்து அவரை புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு உட்படுத்த சட்டமா அதிபர் பரிந்துரைத்ததாக பொலிஸார் தரப்பில் இன்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதாக தமிழினியின் சட்டத்தரணி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழினியும் அதற்கு உடன்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவரை வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mercredi 20 juin 2012

வீடியோச் செய்திகள்

                                                                                                        

காணி சுவீகரிப்பா? முடியுமானால் நிரூபியுங்கள்; - கோத்தபாய


லிகள் இருந்தபோது எத்தனையோ தமிழர்களின் காணிகள் அவர்களின் கையகப்படுத்தி இருந்தார்கள். கொழும்பின் அரசியல் பிரமுகர் சார்லி மகேந்திரன் மற்றும் முன்னாள் மேயர் கணேசலிங்கம் போன்றவர்களுக்கும் இதேபோன்ற பிரச்சினைகள் இருந்தன. அவற்றை நாம்தான் தீர்த்துவைத்தோம். “
வடக்கில் தனியாரின் காணிகள் அரசால் சுவீகரிக்கப்படுகின்றன என எழுப்பப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, "வடக்கில் பலவந்தமாகத் தனியார் காணிகள் எவையும் சுவீகரிக்கப்பட்டிருந்தால் அவற்றை இனவாதம் பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டட்டும்'' என்றும் சவால் விடுத்தார்.
காணி சுவீகரிப்பு என்பது வடக்கில் சில அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்படும் பொய்ப்பிரசாரம் எனவும் கோத்தபாய குறிப்பிட்டார். வடக்கில் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் காணிகள் சுவீகரிப்புத் தொடர்பாகப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:வடக்கில் காணிகள், குறிப்பாகத் தனியார் காணிகள் எவையும் சுவீகரிக்கப்படவில்லை; அபகரிக்கப்படவுமில்லை. சில இடங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகளைப் பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தினாலும் அந்தக் காணிகள் மீளளிக்க முடியாத ஒரு நிலைமை இருக்குமாயின் காணி உரிமையாளருடன் பேசி அவர்களுக்குரிய காணி நட்டஈட்டைச் செலுத்திய பின்னரே காணியை நாம் ஏற்கிறோம்.
இதுதான் உண்மை நிலைமை. இதற்கப்பால் அரச காணிகள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. அவற்றையே நாம் பொறுப்பேற்கிறோம். இன வாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகள் இனவாதக் கண்ணோட்டத்துடன் இவற்றை நோக்கி தமிழ் மக்களிடம் தவறான அரசியலை நடத்தக்கூடாது.
வடக்கின் பாதுகாப்பு
வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை முற்றாக அகற்றிவிட வேண்டுமெனக் கேட்கிறார்கள். அதிகளவான இராணுவ முகாம்கள் வடக்கிலா இருக்கின்றன? இராணுவ முகாம்கள் கூடுதலாக இருப்பது அநுராதபுரம் மாவட்டத்தில். இரண்டாவதாக கொழும்பு மாவட்டத்தில்தான் கூடுதலான இராணுவ முகாம்கள் உள்ளன. எனவே, கூடுதலாக இராணுவ முகாம்கள் வடக்கில் உள்ளன, அவை மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் வகையில் இருக்கின்றன என்று தவறான தகவல்களை மக்களுக்கு வழங்கித் தவறாக வழிநடத்தக்கூடாது.
புலிகளை முறையிட்டார்களா?
புலிகள் இருந்தபோது எத்தனையோ தமிழர்களின் காணிகள் அவர்களின் கையகப்படுத்தி இருந்தார்கள். கொழும்பின் அரசியல் பிரமுகர் சார்லி மகேந்திரன் மற்றும் முன்னாள் மேயர் கணேசலிங்கம் போன்றவர்களுக்கும் இதேபோன்ற பிரச்சினைகள் இருந்தன. அவற்றை நாம்தான் தீர்த்துவைத்தோம்.

புலிகளின் காலத்தில் தமிழர்களின் காணிகளும், சொத்துகளும் அவர்களால் கையகப்படுத்தப்பட்டிருந்தன. இப்போது வீறாப்பாகப் பேசும் தமிழ்க் கூட்டமைப்பினரோ அல்லது வேறு எவருமோ புலிகள் காணிகளை அபகரித்துள்ளனர் என்று அப்போது அமெரிக்காவிடமோ அல்லது இந்தியாவிடமோ முறையிட்டார்களா என்று நான் கேட்க விரும்புகின்றேன்.

இப்போது தமிழ்நாட்டுக்குச் சென்று முறையிடுபவர்கள் அப்போதும் இதனைச் செய்திருக்கலாமல்லவா?
வடக்கில் நாம் புலிகளைப் போன்று செயற்படவில்லை. தனியாரின் காணிகளைக் கபளீகரம் செய்யும் எந்த நோக்கமும் எமக்குக் கிடையாது. அவ்வாறான திட்டங்களும் எம்மிடம் கிடையாது. இவ்வாறு குறிப்பிட்டார் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய
.

மாதகல் மேற்கு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ...துணுக்காய் பிரதேசத்தில் 712 ஏக்கர் நிலம் இராணுவத்தினரால் அபகரிப்பு!

தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி மாதகல் மேற்கில் ஜெ. 162 கிராம மக்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக

துணுக்காய் பிரதேசத்தில் 712 ஏக்கர் நிலம் இராணுவத்தினரால் அபகரிப்பு  தென்னியன்குளம் பகுதியில் 200 ஏக்கர் காணியையும் கோட்டை கட்டியகுளம் பகுதியில் 150 ஏக்கர் காணியையும் தேறாங்கண்டல் பகுதியில் சுமார் 250 ஏக்கர் காணியையும் துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் 112 ஏக்கர் காணியையும் இராணுவத்தினர் ஆக்கிரமித் துள்ளனர்.முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் சுமார் 712 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர் என்று தெரிய வருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் பொதுமக்களின் காணிகளையும் அரச காணிகளையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளதுடன் அந்தக் காணிகளைத் தமக்கு வழங்குமாறு தொடர்ந்தும் வற்புறுத்தி வருகின்றனர்.

துணுக்காய் தென்னியன்குளம் பகுதியில் 200 ஏக்கர் காணியையும் கோட்டைகட்டியகுளம் பகுதியில் 150 ஏக்கர் காணியையும் தேறாங்கண்டல் பகுதியில் சுமார் 250 ஏக்கர் காணியையும் துணுக்காய் ஆலங்குளம் பகுதியில் 112 ஏக்கர் காணியையும் இராணுவத்தினர் ஆக்கிரமித்து அந்தக் காணிகளில் முகாம்களை அமைத்துள்ளதுடன் பயிர்ச் செய்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தப் பிரதேசத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணிகள் இன்றி வாழ்ந்து வருகின்றன.
அமைதிபுரம், தென்னியன்குளம், கோட்டைகட்டிய குளம், பழைய முறிகண்டி, தேறாங்கண்டல், ஆலங்குளம், அனிஞ்சியன்குளம், ஐயன்கன்குளம் போன்ற பகுதிகளிலேயே இராணுவத்தால் இந்தக் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டங்களை ஜூலை மாதம் ஆரம்பிக்க போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொது மக்களின் பணத்தை கொள்ளையிட்டு ஆட்சி நடாத்தி வரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை விரட்டியடிக்கும் மக்கள் போராட்டங்களை ஜூலை மாதம் ஆரம்பிக்க போவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சகல தொகுதி அமைப்பாளர்களும் தற்போது இருந்தே அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஊழல் மிக்க இந்த அரசாங்கத்தை வீழ்த்தி, மக்கள் மற்றும் நாட்டுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த போகும் இந்த பயணத்திற்னு பங்களிப்புச் செய்யாத, பொறுப்புக்களை தட்டிக்கழிக்கும் தொகுதி அமைப்பாளர், ஊடனடியாக அந்த பதவிகளில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் ரணில் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதங்களை வழங்குவதற்காக கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (18) ஏற்பாடு செய்திருந்த வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு சொந்தமான ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி ஆகியவற்றை கொள்ளையிட அரசாங்கம் பாரிய முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாக சுட்டிக்காட்டும் ரணில் விக்ரமசிங்க, இந்த நிதியங்களில் உள்ள பணத்தை பாதுகாத்து, அதனை உழைக்கும் மக்களின் எதிர்காலத்திற்காக, அவர்களிடம் பெற்றுக்கொடுக்க வேண்டியது அனைத்து அரசியல்வாதிகளினதும் கடமையாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.