dimanche 10 juin 2012

இலங்கை எழுத்தாளரான ஷொன் கருணாதிலக்கவுக்கு பொதுநலவாய புத்தக விருது

இலங்கை எழுத்தாளரான ஷொன் கருணாதிலக்கவுக்கு பொதுநலவாய புத்தக விருது கிடைத்துள்ளது. 'சினமன்: லெஜன்ட் ஒவ் பிரதீப் மத்திவ்' என்ற தலைப்பில் அவர் எழுதிய முதலாது நாவலுக்காக இவ்விருது கிடைத்துள்ளது. சிறந்த சிறுதைக்கான விருதை நியூஸிலாந்தைச் சேர்ந்த எம்மா மார்ட்டின், வென்றுள்ளார். பிரதீப் சிவநாதன் மத்திவ் என்ற கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை விளையாட்டுச் செய்தியாளர் ஒருவர் எப்படி தேடி ஆராய்கிறார் என்பதன் அடிப்படையில் இந்நாவலின் கதை அமைந்துள்ளது. பொதுநலவாய நூல் விருதுக்கு 10,000 ஸ்ரேலிங் பவுண் பரிசும் சிறந்த சிறுகதைக்கு 5000 ஸ்ரேலிங் பவுண் பரிசும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பொதுநலவாய மன்றம் இவ்விருது வழங்கலை இவ்வருடம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. பிரதான நூலுக்கான விருது அறிமுக நாவலாசிரியர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தனது நாவலுக்கு விருது கிடைத்தமை பெரும் ஆச்சரியகரமானது என ஷெஹான் கருணாதிலக்க கூறியுள்ளார். 'நீங்கள் ஆங்கிலத்தில் எழுதும் ஒரு இலங்கையராக இருந்தால் இலங்கைக்கு வெளியே நூலை வெளியிடலாம் என எதிர்பார்க்க முடியாது. நான் இந்த நாவலை பூர்த்தி செய்தபோது, அது இலங்கையர்களையும் பெரும்பாலும் இந்தியா, பாகிஸ்தானிலுள்ள வாசகர்களையும் கவரும் என எண்ணினேன். ஆனால் அவற்றுக்கு அப்பால் அது செல்லூம் என நிச்சயமாக நான் எண்ணவில்லை' என அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire