vendredi 15 juin 2012

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் குடும்பத்தினருக்கும் நடந்தது என்ன? - லங்கா நியூஸ்வெப் தகவல்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 14வயது மகன் பாலச்சந்திரன், சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நேரடி உத்தரவின் பேரிலேயே கொல்லப்பட்டதாக சிறிலங்கா இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது. 

சிறிலங்கா இராணுவத்தின் 53வது டிவிசன் தளபதியான பிரிகேடியர் கமால் குணரட்ணவின் [தற்போது மேஜர் ஜெனரல்] மேற்பார்வையிலேயே பாலச்சந்திரன் பிரபாகரன்                          புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலைக் கைப்பற்றிய இராணுவ அணியுடன் லெப்.கேணல் அலுவிகாரகொல்லப்பட்டதாக அந்த ஊடகம் கூறியுள்ளது. 

இதுதொடர்பாக ‘லங்கா நியூஸ்வெப்‘ வெளியிட்டுள்ள தகவல்கள்- மே 19ம் நாள் காலை 7.30 மணியளவில் நந்திக்கடல் அருகே பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்தார். 

4வது விஜயபா காலாற்படைப் பிரிவைச் சேர்ந்த சார்ஜன்ட் முத்துபண்டா தலைமையிலான 8 பேர் கொண்ட சிறிலங்கா இராணுவ அணியிடமே அவர் சரணடைந்தார். 

முதல் நாள் இரவே தனது தந்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டதாகவும், அவரது உடல் நந்திக்கடல் பகுதியில் உள்ள பற்றைக்குள் கிடப்பதாகவும் அவர், சிறிலங்கா படையினரிடம் கூறியிருந்தார். 

இந்த விபரங்களை சார்ஜன்ட் முத்துபண்டா 4வது விஜயபா படைப்பிரிவின் ‘சி‘ கொம்பனியைச் சேர்ந்த லெப்.நாலகவுக்கு தெரியப்படுத்தினார். 

அப்போது லெப்.நாலக இன்னொரு அதிகாரியான கிரிந்த, சார்ஜன்ட் விஜேசிங்க ஆகியோருடன் நந்திக்கடல் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். 

தன்னை பிரபாகரனின் மகன் என்று அடையாளப்படுத்திக் கொண்டு சிறுவன் ஒருவன் இரு பாதுகாவலர்களுடன் படையினரிடம் சரணடைந்துள்ளதாக 4வது விஜயபா படைப்பிரிவின் கட்டளைஅதிகாரி லெப்.கேணல் றொகித அலுவிகாரவுக்கு, லெப்.நாலக தகவல் அனுப்பினார்   
அவர் உடனடியாக, தனது மேலதிகாரியான 68-1 பிரிகேட் தளபதி லெப். கேணல் லலந்த கமகே ஊடாக 53வது டிவிசன் தளபதி பிரிகேடியர் கமால் குணரட்ணவுக்கு இந்த விபரங்களைத் தெரியப்படுத்தினார். 

அதையடுத்து, பிரிகேடியர் கமால் குணரட்ண பிறப்பித்த உத்தரவுக்கமைய, லெப்.நாலகவுடன் பாலச்சந்திரனை அழைத்துக் கொண்டு நந்திக்கடல் பற்றைக்குள் சென்றார். 

அங்கே பிரபாகரனின் உடலை பாலச்சந்திரன் காண்பித்தார். 

அதையடுத்து, பாலச்சந்திரனை லெப்.கேணல் லலந்த கமகே, பிரிகேடியர் கமால் குணரட்ணவிடம் அழைத்துச் சென்றார். 

அவர் பாலசந்திரனிடம் தனிபட்ட ரீதியாக விசாரணை நடத்தினார். 

அந்த விசாரணைகளின் போது, தனது தந்தை முதல்நாள் இரவு விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் அகப்பட்டு மரணமாகி விட்டதாக பாலச்சந்திரன் கூறியிருந்தார். 

தனது தந்தையின் உடல், பற்றைக்குள் கிடப்பதாகவும், முதல்நாள் இரவு மோதலில் உயர் தப்பிய இரு பாதுகாவலர்களுடன் தான் சரணடைந்ததாகவும் அவர் கூறினார். 

தான் தந்தையுடன் படகு ஒன்றில் தப்பிச்செல்ல முயன்றதாகவும், தாயாராரும், சகோதரியும் இன்னொரு படகில் தப்பிச் செல்ல முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார். 

எவ்வாறாயினும் மோதலில் தனது தந்தை கொல்லப்பட்டு விட்ட நிலையில், தாய்க்கும் சகோதரிக்கும் என்ன நடந்தது என்று தெரியாது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

தனது தந்தையும் மீதமிருந்த பாதுகாவலர்களும் சிறிலங்காப் படையினருடன் சண்டையிட்டதாகவும், அதன்போது இரு பாதுகாவலர்கள் தவிர ஏனையோர் மரணமாகி விட்டதாகவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.இந்த விபரங்களை பிரிகேடியர் கமால் குணரட்ண உடனடியாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு தனது கைபேசி ஊடாகத் தெரியப்படுத்தினார். 

இந்த விபரங்கள் அனைத்தையும் அவர் கருணா அம்மானுக்குக் கூறினார். 

பாலச்சந்திரன் உயிர்தப்பினால், விடுதலைப் புலிகளின் அடுத்த தலைவராக வருவதற்குச் சாத்தியம் உள்ளதால் அவரை கொன்று விட வேண்டும் என்று கருணா கூறியுள்ளார். 

வயதுகுறைந்த சிறுவன் என்பதால் நீதிமன்றம் அவரை விடுவித்து விடும் என்றும் அவர் கோதாபயவிடம் கூறியுள்ளார். 

அதையடுத்து கோத்தாபய ராஜபக்ச, பாலச்சந்திரன் கொலையை தனிப்பட்ட ரீதியாக மேற்பார்வை செய்யுமாறும், அவரது உடலை அழித்து விடுமாறும் உத்தரவிட்டார்.  இந்த விபரங்கள் சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் மூலம் வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஏனையவர்களின் பாவங்களுக்குத் தாம் பொறுப்பேற்க விரும்பவில்லை என்று அந்த இராணுவ அதிகாரி கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire