mercredi 31 juillet 2013

வெளியேற்றப்படலாம் வீட்டில் புகை பிடித்தவர் வீட்டை விட்டு --ஜெர்மனி நீதிமன்றம்

ஜெர்மனியில், வீட்டில் புகை பிடிக்கும் போது, அந்தப் புகை வீட்டை விட்டு வெளியேறி அடுக்குமாடிக் குடியிருப்பின் பொது இடங்களுக்குப் பரவினால், புகை பிடித்தவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என்று நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருக்கிறது.
ஜெர்மன் நகரான டசல்டார்பில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் கடந்த 40 ஆண்டுகளாக வசிக்கும் 75 வயதான ப்ரிட் ஹெல்ம் அடோல்ப் , தனது வீட்டை முற்றிலுமாக சீல் வைத்தால் தவிர, புகை வெளியே வருவதைத் தன்னால் கட்டுப்படுத்த முடியாது என்று கூறுகிறார்.
ஆனால் நீதிமன்றமோ, அவர் புகைத்து வெளியே விடும் புகை, அடுக்குமாடிக் குடியிருப்பின் மாடிப்படிகள் இருக்கும் பகுதியில் குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களால் நுகர முடிகிறது என்று , குடியிருப்பின் உரிமையாளர் மற்றும் பிற குடியிருப்புவாசிகளின் வாதத்தை ஏற்றுக்கொண்டது.
ஜெர்மனியில் புகைப்பதற்கு எதிராக நிலவுவதாகக் கூறப்படும், கடுமையான மற்றும் சர்வாதிகாரமான மனோநிலைக்கு எதிராக புகை பிடிப்பவர்களால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன

mardi 30 juillet 2013

மக்கள் நம்பிக்கை அற்ர‌ ரி.என்.எ கந்தசுவாமி மற்றும் .திரேசாவை நம்பி வேட்பு மனு தாக்கல்

 கிளிநொச்சி கந்தசுவாமி கோயில், மற்றும் புனித திரேசா தேவாலயம் ஆகியவற்றில் நடைபெற்ற விசேட வழிபாடுகளின் நம்பிக்கையுடன் பின்னர் இந்த வேட்பு மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வடமாகாண சபைக்கான கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் வேட்பு மனுவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சற்று முன்னர் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல் திணைக்கள அலுவலகத்தில் வேட்பு மனுவினை நண்பகல் 12.01 இற்கு தாக்கல் செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் கந்தசுவாமி மற்றும் .புனிததிரேசா கடவுள்களை நம்பி  மூட நம்பிக்கை வாதிகளின் கூட்டமைப்பின் வசமுள்ள பிரதேச சபைகளின் கீழ் உறுப்பினர் மற்றும் வேட்பாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் நடைபெற்றது.மன்னார் மாவட்ட டெலோ கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் குழுவினர் மன்னார் ஆயர் இராயப்பு ஜேசேப்பு ஆண்டகை மற்றும், இந்து மத குரு ஐங்கர சர்மா ஆகியோரை நேரடியாக சென்று சந்தித்து ஆசி பெற்றனர்.வேட்பு மனுத்தாக்கள் முடிவடைந்த நிலையில் குறித்த குழுவினர் 

நல்லெணத்துடன் வரும் ஓரினச் சேர்க்கையாளாகள் பற்றி தீர்மானிக்க நான் யார்;பாப்பாண்டவர்

ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி தீர்மானிக்க நான் யார் – பாப்பாண்டவர்ஓரினச் சேர்க்கையாளாகள் பற்றி தீர்மானிக்க நான் யார் என பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பிரேஸிலுக்கான ஐந்து நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு வத்திக்கான் திரும்பிய போது ஊடகவியலாளர்களுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஓரினச் சேர்க்சையாளர்களை ஓரம் கட்டாது சமூகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
கடவுளை நம்பி நல்லெணத்துடன் வரும் ஓரினச் சேர்க்கையாளரைத் தடுக்கும் அதிகாரம் தமக்குக் கிடையாது னஎ அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மத குருக்களாக உருவாக முடியாது என்ற போதிலும் தேவாலயங்களில் முக்கியமான பங்கினை வகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் பாப்பாண்டவராக பதவி வகித்த 11ம் பெனடிக் ஆண்டகை, ஓரினச் சேர்க்கையாளர்கள் தொடர்பில் கொண்டிருந்த கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை புதிய பாப்பாண்டவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓரினச் சேர்க்கையாள மதகுருமாரின் பாவங்கள் மறக்கப்பட்டு மன்னிக்கப்பட வேண்டுமென பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் யார் என்பதனை ஏன் மக்களுக்கு வழங்காமல் சர்வாதிகாரமாக நடந்துகொள்கின்றது கூட்டமைப்பு

வட மாகாண சபையின் முதலமைச்சர் யார் என்பதனை தீர்மானிக்கும் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களுக்கு வழங்காமல் ஏன் சர்வாதிகாரமாக நடந்துகொள்கின்றது. தமது முதலமைச்சர் யார் என்பதனை வடக்கு மக்களே தீர்மானிக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் அறிவிக்கவில்லை. அதனை மக்கள் தீர்மானிப்பதற்கு இடமளித்துவிட்டோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகாரி போன்று செயற்படுகின்றார் என்று குற்றம் சாட்டும் கூட்டமைப்புதான் உண்மையிலேயே சர்வாதிகாரி போன்று செயற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மக்களை யார் அவமதித்தது என்பதனை கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனின் அமோக வெற்றி உலகுக்கு பறைசாற்றும என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வட மாகாணத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களை அவமதித்துவிட்டது என்று கடந்தவாரம் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே கூட்டமைப்பு இந்த விடயத்தை கூறியிருந்தது.
இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

யாழ்.தந்தைசெல்வா சதுக்கத்தின் உண்ணாவிரத போராட்டம் .தமிழ் தேசிய கூட்டமைப்பானது வேட்பாளர்களை சாதி அடிப்படையில் தெரிவு

Thangamugunthanதமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் இன்று திங்கட்கிழமை யாழ்.தந்தைசெல்வா சதுக்கத்தின் முன்னால் உண்ணாவிரத போராட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழர் விடுதலை கூட்டணியைச் சேர்ந்த முன்னாள் மாநகர சபை உறுப்பினர்களான தங்க முகுந்தன், செல்வன் கந்தையா, செல்லையா விஜிதரன் ஆகியோரே இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பானது வேட்பாளர்களை சாதி அடிப்படையில் தெரிவு செய்கின்றதென்றும் தமிழர் விடுதலை கூட்டணியில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும்  இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தியேமே மேற்படி மூவரும் இவ் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை இன்று திங்கட்கிழமை மாலை 4 மணிவரை முன்னெடுக்கவுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதாகவும் சாதியின் அடிப்படையில் வேட்பாளர் நியமித்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நியமிப்பதாக வாக்குறுதி அளித்து விட்டு தற்போது அந்த வாக்குறுதியை மீறியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

வாக்கு தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு பல்வேறு குளறுபடிகளை முன்னெடுத்து வருகின்றதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்காது, தனிப்பிட்ட விருப்பங்களின் பேரில், வேட்பாளர்கள் தெரிவு செய்துள்ளதை கண்டிப்பதாகவும், இவ்வாறு கண்மூடித்தனமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நடப்பதை நிறுத்தி தமிழ் மக்களுக்கு நியாயமான மற்றும் உறுதியான பதில்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவிக்க வேண்டுமென்றும் அவர்கள் கோரியுள்ளனர்.
 உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்: ஆனந்தசங்கரி
தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் மேற்கொண்டு வருகின்ற உண்ணாவிரதப் பேராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தான் அவர்களிடம் தெரிவித்துள்ளதாக  தமிழர் விடுதலைக் கூட்டணியின்  செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர்கள் மூவர் யாழ். தந்தை செல்வா சதுக்கத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து உண்ணாவிரதம் இருந்துவருகின்றனர்.

இந்த மூவருடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட தான் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு தெரிவித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின்  செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரி கூறியுள்ளார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கும் கட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் கூறினார்.

இந்த மூவரும்  உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவ்வாறு நிறுத்தாவிடின் இந்த மூவரும் இனிவரும் காலங்களில் கட்சிக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

dimanche 28 juillet 2013

விடுதலைப் புலிகள் முன்னணி அமைப்புகள் ஐரோப்பாவில் இன்னும் நிதி சேகரிக்கிறார்கள் !

ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் மற்றும் அதன் முன்னணி அமைப்புகள் நிதிசேகரித்து வருவதாக ஜி.எல் பீரிஸ் ஐரோப்பிய எம்.பீக்களிடம் முறைப்பாடுசெய்துள்ளார். கடந்த 18ம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் எம்.பீக்கள் குழு ஒன்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அவர்கள் அமைச்சர் ஜி.எல் பீரிஸை சந்தித்தவேளையே அவர் மேற்கண்ட விடையங்களை அவர்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்த நிதி சேகரிப்பு தொடர்பாக இலங்கை அரசு பீதியில் உள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள பல தமிழ் அமைப்புகள் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்பதாகவும், அதனை ஐரோப்பிய ஒன்றியம் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் இதன்போது ஜி.எல் பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதற்கு பதிலளித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் அது தொடர்பாக கவனத்தில் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்கள். புலிகள் மீளவும் கட்டியெழுப்பப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதாகவும், ஏன் இவ்வாறு நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது என்று தமக்கு தெரியவில்லை என்றும் ஜி.எல் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார். சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட சில நாடுகளில் இன் நிதி சேகரிப்பு நடைபெறுவதாக பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார். புலம்பெயர் நாடுகளில் செயல்படும் ஜனநாயக அமைப்புகளையும், புலிகளின் முன்னணி அமைப்புகள் என்று அவர் மேலும் குற்றஞ்சுமத்தியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

இலங்கை சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக, தொடர்ந்தும் புலிகளை தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கமாக வைத்திருக்க ஜி.எல் பீரிஸ் பாரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, வெளிநாட்டில் உள்ள தமிழர் அமைப்புகளுக்கு புலிகள் சாயம் பூசவும், நிதி சேகரிப்பதாகக் கூறி, புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ள பட்டியலில் வைத்திருக்கவுமே இவர் இவ்வாறு இவர் கூறிவருவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். (ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் நடத்திய சந்திப்பின் புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது)

samedi 27 juillet 2013

போட்டுத்தல்லிய கூட்டத்துடன் ஒட்டியிருந்த கூட்டத்தின் போலி முகத்துடன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்ட தேர்தல் சுவரொட்டிகள்

தேசிய பிரச்சினைக்கு அரசாங்கத்தினால் அடுத்த வருடத்துக்குள் தீர்வு முன்வைக்கப்படாவிடின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமொன்றை மேற்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிலதினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

போலியான முகத்துடன் இருக்கும் பலர் தேர்தல்கள் வந்துவிட்டால் ஒவ்வொரு குண்டைப் போட்டு தமிழ்மக்களின் வாக்குக்களை கவருவது என்பது யாரும் அறிந்ததே இந்தநிலையில் இம்முறையும் வாக்கு வேட்டையை முன்னிறுத்தி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முகமாக டெலோ அமைப்பினரால் நாடுமுழுவது சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.

512 ஆவது படை இராணுவத்தினர் ஏற்பாட்டில் இரத்த தானம்

news
512 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதில்23 ஆவது கஜபா படைப் பிரிவிலிருந்து 150 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர். 
 
இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த நிக்ழவ ஏற்பாடு செய்திருந்ததாகத் 512 ஆவது படைப்பிரிவின் கேர்ணல்,அஜித் பல்லாவல தெரிவித்திருந்தார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=257092201327862248#sthash.WSkcDR3B.dpuf

ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என பெயர் சூட்டியதின் பின்னணி என்ன?

katebabyஇங்கிலாந்து இளவரசர் வில்லியம்–கதே தம்பதிக்கு பிறந்த அரச குடும்ப புதிய வாரிசுக்கு ஜார்ஜ் அலெக்சாண்டர் லூயிஸ் என பெயர் சூட்டி இருக்கிறார்கள். அதில் ஜார்ஜ் என்பது அரச குடும்பத்தில் கடந்த 300 ஆண்டுகளாக போற்றப்படும் பெயர் ஆகும். முன்பு ஜார்ஜ் பெயருடைய 6 மன்னர்கள் ஆட்சி புரிந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல ராணி எலிசபெத்தின் தந்தை பெயர் ஜார்ஜ் ஆகும். லூயிஸ் என்பது இளவரசர் சார்லசின் நெருங்கிய உறவினர் லார்டு லூயிஸ் மவுண்ட்பேட்டன் பெயரை நினைவு படுத்தும் வகையிலும் சூட்டப்பட்டது. இவர் தான் இந்தியாவின் கடைசி வைசிராயாக இருந்தவர். அலெக்சாண்டர் என்பது அரச குடும்பத்தின் பொதுவாக விளக்கும் பெயராகும். இருப்பினும் புதிய வாரிசின் அதிகாரபூர்வ பெயர் ஜார்ஜ் என்றே அழைக்கப்பட இருக்கிறது. முன்னதாக அரச குடும்ப வாரிசு குறித்து ஏராளமானோர் சூதாட்டத்தில் பணம் கட்டினார்கள். அதில் ஜார்ஜ் என்று பந்தயம் கட்டியவர்களுக்கு சுமார் ரூ.2 1/2 கோடியை (2 1/2லட்சம் பவுண்ட்) சூதாட்ட நிறுவனம் வழங்கியது.

மனிதஉரிமைகள் நிலையில் கொமன்வெல்த் மாநாட்டில் சிறிலங்காவுக்கு அழுத்தம் - பிரித்தானியா அறிவிப்பு

கொழும்பில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டை, மனிதஉரிமைகள் தொடர்பான கவலைகள் குறித்து சிறிலங்காவுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளப் போவதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியாவின் சமூகங்கள், உள்ளூராட்சி, வெளிவிவகார, கொமன்வெல்த் விவகாரப் பணியகத்துக்கான மூத்த அமைச்சர் பரோனெஸ் சயீடா வர்சி, “பிரதமர் டேவிட் கமரொனும், வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக்கும், களநிலவரத்தை கவனத்தில் கொண்டு வரும் நொவம்பரில் கொமன்வெல்த் உச்சி மாநாட்டை, சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வர்.” என்று தெரிவித்துள்ளார். 

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில்,நேற்று முன்தினம் வில்லிஸ் பிரபு எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

கொமன்வெல்த் உச்சி மாநாட்டின் போது சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து, பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் எவ்வாறு நடந்த கொள்ளப்போகிறது என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். 

“போருக்குப் பிந்திய நல்லிணக்கத்திலோ பொறுப்புக்கூறலிலோ முன்னேற்றம் ஏற்படாதது குறித்தும், சிறிலங்காவின் தற்போதைய மனிதஉரிமைகள் நிலை குறித்தும், சிறிலங்கா அரசாங்கத்திடம் பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியாக கவலை வெளியிட்டு வருகிறது. 

கருத்து மற்றும் வெளிப்பாட்டுச் சுதந்திரம், நீதித்துறைச் சுதந்திரம் உள்ளிட்ட சிறிலங்காவின் தற்போதைய மனிதஉரிமைகள் நிலை குறித்தும் நாம் கவலை கொண்டுள்ளோம். 

மனிதஉரிமைகள் நிலையில் உறுதியான முன்னேற்றம், நல்லிணக்கம், வடக்கு மாகாணசபைக்கு நீதியான, நியாயமான, அமைதியான தேர்தல், ஊடகங்கள் மற்றும் சமூக அமைப்புகள் கொமன்வெல்த் மாநாட்டில் சுதந்திரமாக செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என்பனவற்றை பிரித்தானியா எதிர்பார்க்கிறது என்பதை நாம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

mercredi 24 juillet 2013

வெலிக்கடை சிறைப்படுகொலையின் 30வது ஆண்டு நினைவு அரங்கம்

ஒடுக்கப்படுபவர்களின் வரலாற்றை அதிகாரத்தின் வரலாறு பலாத்காரமாக மேவும்பொழுது அவர்களுக்கு எஞ்சியிருப்பது மறதி என்னும் பொறிமுறையை எதிர்த்து நிற்றல் மட்டுமே !


வெலிக்கடை சிறைப்படுகொலையின் 30வது ஆண்டு
நினைவு அரங்கம்

28-07-2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4மணி
SALLE SAINT BRUNO
9, Rue Saint Bruno
Paris 75018. Metro La chapelle.


தொடர்புகளுக்கு :
இலங்கையர் ஒருமைப்பாட்டு மையம்
centre.solidarite.srilankais@gmail.com
தொலைபேசி : +33 (0) 7 51 41 33 05

பயங்கர பூகம்பம் 90 நிமிட இடைவெளியில் பூமி 2 முறை குலுங்கியது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 90 நிமிட இடைவெளியில் பூமி 2 முறை குலுங்கியது. அதில் 89 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. சீனாவின் வடமேற்கே கான்சு மாகாணம் அமைந்துள்ளது. அங்குள்ள மின்ஷியான் மற்றும் ஷாங்ஷியான் பகுதிக்கு இடையே நேற்று காலை 7.45 மணிக்கு 6.6 ரிக்டர் அளவில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அடுத்த 90 நிமிடத்தில் அதே பகுதியில் 9.12 மணிக்கு மீண்டும் நிலநடுக்கம் உண்டானது. அது 5.6 ரிக்டர் அளவில் பதிவானது.
அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறினர். ஒரு நிமிடமே குலுக்கிய இந்த பூகம்பம் அந்த பகுதியில் உள்ள 8 நகரங்களை புரட்டி போட்டது. மாகாணத்தின் தலைநகர் லான்ஹோவு மற்றும் பக்கத்து மாகாணத்திலும் நிலநடுக்க தாக்கம் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி ஏற்கனவே மழை, நிலச்சரிவால் பாதிப்பை சந்தித்திருந்தது. எனவே நிலநடுக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 21 ஆயிரம் வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. அதில் 1,200 வீடுகள் அடியோடு இடிந்து தரைமட்டமாகி விட்டன. மின்ஷியானில் ஒரு பள்ளிக்கூட கட்டிடமும் இடிந்தது. ஆனால் மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதா? என்பது தெரியவில்லை.
அத்துடன் 13 நகரங்களில் தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு அடியோடு துண்டிக்கப்பட்டன. மின்சார சப்ளையும் இல்லை. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.
இந்த பூகம்பத்தில் 89 பேர் உயிர் இழந்தனர். டிங்ஜி நகரில் மட்டும் 73 பேர் பலியானார்கள். 515 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு செஞ்சிலுவை சங்க குழு, தற்காலிக கூடாரங்களுடன் விரைந்தனர். மேலும் 3,000 ராணுவத்தினர், போலீசார் சென்று மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் அந்த பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியிருப்பதால் மீட்பு பணி பாதிக்கும் அபாயமும் நிலவுகிறது.
தற்போது பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு அருகேயுள்ள சிஹூயான் மாகாணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 164 பேர் செத்தார்கள். மேலும் 6,700 பேர் படுகாயம் அடைந்தனர். 3 மாதத்திற்குள் இப்போது மீண்டும் உயிர் பலி ஏற்படுத்தி இருக்கிறது.
முன்பு 2008-ம் ஆண்டு மே மாதம் 7.9 ரிக்டரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 70 ஆயிரம் பேர் இறந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

mardi 23 juillet 2013

புதுடில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க முடிவு!

ஈழத் தமிழர் பிரச்னைக்காக டெசோ அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்கிறார்.
கடந்த ஜூலை 16-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற தமிழீழ ஆதரவாளர் அமைப்பின் (டெசோ) கூட்டத்தில், இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13-வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது, இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றத்ததைத் தடுக்க வேண்டும், தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி, திருச்சியில் பொருளாளர் மு.க. ஸ்டாலின், மதுரையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கோவையில் சுப்புலட்சுமி ஜெகதீசன், காஞ்சிபுரத்தில் துரைமுருகன், தஞ்சாவூரில் நடிகை குஷ்பு, தேனியில் வழக்குரைஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், நாமக்கலில் நடிகர் வாகை சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டெசோ அமைப்பு அறிவித்துள்ளது.

நல்ல நேரம் பார்க்காது தேர்தலுக்கு முன்னர் 13இல் உள்ள அதிகாரங்களை நீக்க வேண்டும்; தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

news
மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் 13ம் திருத்தச் சட்டத்தில் இருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குவதற்கு கூட்டமைப்பு தடங்கல் ஏற்படுத்தும் எனவே, நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்காது நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அதிகாரங்களை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
  .
வடமாகாணசபைத் தேர்தல், பொதுநலவாய மாநாடு என்பன முடிவடைந்த பின்னர் அரசமைப்பில் அரசு திருத்தங்களை மேற்கொள்ளும் என வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் கருத்து வெளியிம் போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொலிஸ் காணி அதிகாரங்களை நீக்காது அரசு வடமாகாணசபைத் தேர்தலை நடத்துமானால், அதைப் பயன்படுத்திக்கொண்டு ஈழத்தை உருவாக்குவதற்கான அரசியல் போரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும்.

வடமாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர் 13 இலிருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்குவதென்பது முடியாத காரியமாகும். அரசின் முயற்சிக்குக் கூட்டமைப்பு நிச்சயம் தடங்கல் ஏற்படுத்தும் எனவே, நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருக்காது நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் அதிகாரங்களை நீக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆகவே, இந்தியாவைப் பற்றியோ அல்லது பொதுநலவாய மாநாடு குறித்தோ யோசிக்காது 13இல் இருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கவேண்டும். சிங்கள மக்களின் நிலைப்பாடு இதுதான் என்பதை அரசு உணரவேண்டும் என்றார்.

பிரான்சில் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் தனது மகனைக் கொன்று, தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

பிரான்சில் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் தனது மகனைக் கொன்று, தானும் தற்கொலை செய்ய முயன்றதை அடுத்து, அவரும் இலங்கையைச் சேர்ந்த அவரது கணவர் மற்றும் முன்னாள் காதலன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையரொருவருடன் தான் வைத்திருந்த தகாத உறவொன்றின் மூலம் பிறந்த தனது மகனையே குறித்த 28 வயதான பெண் கொல்வதற்கு முயன்றிருந்தாரெனக் கூறப்படுகின்றது. தனது மகனை எவருமே கவனிக்கமாட்டார்களென அஞ்சியே, குறித்த பெண் அவனையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரது தற்கொலை முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அவர் தலைநகர் பாரிஸில் உள்ள புனித லூயிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப விசாரணையின் போது அவர் கணவன் மற்றும் காதலன் ஆகியோரால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்ததாகவும், கணவனின் தாக்குதலுக்கு அவர் உள்ளாகியிருந்ததாகவும் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி.பிரான்சிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிகாயங்கள் மற்றும் உள்ளக ஊமைக் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிய நிலையில் உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

lundi 22 juillet 2013

தூரத்து மணியோசையாய் கேட்கிறது உன் குரல்


நள்ளிரவில் கொல்லப்பட்ட பெண் வந்த போனில் பேசினார்

கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்டு ஈம சடங்கிற்கு தயார் செய்திருந்த நிலையில், நள்ளிரவில் அந்த பெண்ணிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்ததால், அக்குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். 

கொல்லப்பட்டதாக கூறப்பட்ட திருவான்மியூரை சேர்ந்த கங்காதேவி செல்போன் மூலம் தனது சகோதரருடன் பேசியுள்ளார். கோவையில் காதலனுடன் இருப்பதாகவும் தன்னை யாரும் தேட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை திருநின்றவூரை சேர்ந்தவர் கங்காதேவி (27). கணவர் சரவணன். கடந்த 13ம் தேதி, தனது சகோதரர் ரவிச்சந்திரனிடம் செல்போனில் பேசிய கங்காதேவி, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருப்பதாகவும், தன்னை கார்த்திக் என்பவர் அடித்து கடத்தி செல்வதாகவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார். திருநின்றவூர் போலீசில் ரவிச்சந்திரன் புகார் செய்தார்.இந்நிலையில் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த நங்கமங்கலம் ஏரிக்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்தது. இது குறித்த செய்தியை படித்த தனியார் பள்ளி ஆசிரியை திலகவதி என்பவர், காவேரிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு சென்று, Ôசென்னை திருநின்றவூரில் வசிக்கும் தனது உறவினர் மகள் கங்காதேவியை காணவில்லை. எனவே அந்த சடலத்தை பார்க்க வேண்டும்Õ என்று கோரினார். இதையடுத்து கங்காதேவியின் கணவர் சரவணன் மற்றும் உறவினர்கள் வாலாஜா அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை பார்த்தனர். மூக்குத்தி, சிகப்பு கலர் கயிறு, முருகன் டாலர், புடவை போன்ற சில அடையாளங்களை வைத்து அது கங்காதேவிதான் என்று அவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து இறுதி சடங்குகளுக்காக சடலத்தை கேட்டனர். போலீசாரோ, தடயவியல் சோதனைகள் முடியும் வரை சடலம் ஒப்படைக்கப்பட முடியாது என்று கூறி விட்டனர்.

போலீஸ் விசாரணையில் கங்காதேவிக்கும் திருநின்றவூரை சேர்ந்த சந்தானத்தின் மகன் கார்த்திக் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரிந்தது. இதையடுத்து கார்த்திக்கை போலீசார் தேடி வந்தனர்.

திடீர் திருப்பம்: இந்நிலையில் ரவிச்சந்திரன் செல்போனுக்கு நேற்றிரவு ஒரு அழைப்பு வந்தது. எதிர் முனையில் பேசியவர் கங்காதேவி. அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரன், அவரிடம் விசாரித்தார். அதற்கு, Ôநான் கோவையில் தங்கியியுள்ளேன். கார்த்திக் என்னை கடத்தவில்லை. நாங்கள் இருவரும் விரும்பி தான் கோவைக்கு வந்தோம். சரவணனுடன் வாழ எனக்கு பிடிக்கவில்லை. கார்த்திக்குடன்தான் இருப்பேன். எங்களை யாரும் தேட வேண்டாம். போலீசில் சொல்ல வேண்டாம். எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள்Õ என்று அழுதபடி கூறினார். குரல் மூலம் தனது சகோதரியை அடையாளம் கண்ட ரவிச்சந்திரன், இது குறித்து திருவான்மியூர் மற்றும் காவேரிப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து திருவான்மியூர் போலீசார், கங்காதேவி மற்றும் கார்த்திக்கை அழைத்து வர கோவை விரைந்துள்ளனர். அதே சமயம், கங்காதேவி என்று அடையாளம் காட்டப்பட்ட கொலையான அந்த பெண் யார் என காவேரிப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

காடைத்தனம் மேலோங்கி மத சுதந்திரம் கேள்விக்குள்ளாகியுள்ளது ராஜபக்ஷ ஆட்சியில்: அஸாத் சாலி!

காடைத்தனம், அடாவடித்தனங்களால் முஸ்லிம் சமூகத்தினர் தமது மதக்கடமைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ ஆட்கியில் மத சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை பள்ளிவாசலில் தொழுகை நடத்த தடைபோடப்படட்தைக் கண்டித்து அஸாத் சாலிவிடுத்திருக்கும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஜும் ஆ தொழுகை அந்தப் பிரதேசத்தின் மாகாண அமைச்சர் அநுர விதான கமகேயின் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.புனித றமழான் காலத்தில் முஸ்லிம்களின் கட்டாயக் கடைமகளுள் ஒன்றான ஜும்ஆ தொழுகையில் ஈடுபடும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதை நாம் மிகவன்மையாகக் கண்டிக்கின்றோம்.
சுதந்திர இலங்கையில் நாட்டின் ஒரு பகுதியில் வாழும் முஸ்லிம்களை அவர்களது புனித கட்டாயக் கடமைகளில் ஒன்றான வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொழ விடாமல் அச்சுறுத்தித் தடுக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகுமென்பதே எனது அபிப்பிராயமாகும்.(முதலாவது சம்பவம் தம்புள்ளை பள்ளிவாசலில் இடம்பெற்றது) அந்த வகையில் மஹியங்கனை பள்ளிவாசல் தாக்குதலின் பெருமை எப்படி ஜனாதிபதியைச் சாரும் என்று குறிப்பிட்டேனோ அதேபோல் இந்தப் பெருமையும் அவரைத்தான் சாரும்.
காரணம் முஸ்லிம்களை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் ஈடுபட விடாமல் அச்சுறுத்தித் தடுத்த மற்றொரு சம்பவமும் தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியின்கீழ்தான் இடம்பெற்றுள்ளது.முஸ்லிம்களை வேதனைப்படுத்தி சண்டித்தனத்தைப் பிரயோகித்து அவர்களது கட்டாய மார்க்கக் கடமைகளைக்கூட நிறைவேற்றவிடாமல் தடுத்து ஜனாதிபதியும் அவரது இளைய சகோதரரும் தமது மார்புகளில் பதக்கங்களை அடுக்கடுக்காகக் குத்திக் கொள்வது கண்டு முஸ்லிம் சமூகம் வேதனை அடைந்துள்ளது.

பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, தலைநகர் பாரிசில் வன்முறை

பாரிஸ்:பிரான்ஸ் நாட்டில், முஸ்லிம்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டதைக் கண்டித்து, தலைநகர் பாரிசில் வன்முறை சம்பவங்கள் நடந்து உள்ளன.

பிரான்ஸ் மதச்சார்பற்ற நாடு என்பதால், பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த வாரம், பாரிஸ் நகரில், பர்தா அணிந்து சென்ற பெண்ணை, போலீஸ்காரர் ஒருவர் எச்சரித்தார். இதனால், கோபமடைந்த அந்த பெண்ணின் கணவர், போலீசை தாக்கி உள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தையடுத்து, பாரிஸ் நகரில் உள்ள முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்டவரை விடுவிக்கும்படி கோரினர். இந்தப் போராட்டம் நேற்றும் நடந்தது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், சாலை ஓரங்களில் இருந்த கார்களை தீ வைத்து கொளுத்தினர். இதில், 20 கார்கள் எரிக்கப்பட்டன.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

கிரகத்தை ஆராய்ச்சி செய்ய இந்தியா எடுக்கும் முயற்சிகள் வெறும் பெருமைக்காக அல்ல : ராதாகிருஷ்ணன்

செவ்வாய்க்கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்தியா விரைவில் செயற்கைகோளை அனுப்பவுள்ளது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில் செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் வெறும் பெருமைக்காக மட்டுமல்ல. அதில் வியாபர நோக்கமே முன்னிற்கிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு தொடக்கம், நவம்பர் மாதம் வரை ஏதாவது ஒரு திகதியில் செவ்வாய்க்கிரகத்திற்கான ஆராய்ச்சி பயணம் தொடங்கும். பி.எஸ்.எல்.வி ராகெட் மூலம் செயற்கை கோள், செவ்வாய் கிரகத்திற்கு ஏவப்படும். நவம்பர் மாதம் இந்தப் பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.

பூமியிலிருந்து செயற்கை கோள் ஏவப்பட்டதும் 10 மாதங்கள் தொடர்ந்து பயணித்து, 2014ம் ஆண்டு இந்த செயற்கை கோள் செவ்வாய் கிரகத்தை சென்றடையும்.

இந்த செயற்கை கோளின் எடை, 15 கிலோவாக இருக்கும். ஐந்து முக்கிய கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் பூமியிலிருந்து புறப்படும் போது 1,350 கிலோ எடையில் இருக்கும் நிறை படிப்படியாக குறைந்து ஒவ்வொரு பாகங்களாக அகன்று இறுதியில் வெறும் 15 கிலோவுடன் செயற்கை கோளின் மையப்பகுதி மாத்திரம் செவ்வாய்க்கு சென்றடையும்.

அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அடுத்து செவ்வாய்க்கான ஆராய்ச்சியை தொடங்கவுள்ள ஆறாவது நாடாக இந்தியா பெருமையடைகிறது. இந்தியாவுக்கும் இத்திறன் இருக்கிறது என்பதனை இந்த ஆராய்ச்சி காண்பிக்கும். எதிர்கால பொருளாதாரம், குடியேற்ற அம்சங்களை கருத்தில் கொள்கையில் செவ்வாய்க்கிரகத்திற்கான ஆராய்ச்சியை இப்போதே நாம் தொடங்கிவிட வேண்டும்.

செவ்வாய் கிரக ஆராய்ச்சி வெற்றிபெறுமானால் இன்னமும் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கு மனிதர்கள் வாழும் நிலை தோன்றும் என்றார். இதேவேளை செவ்வாய் கிரக செயற்கைக் கோளை ஏற்றிச்செல்லும் பி.எஸ்.எல்.வி - எக்ஸ். எட், ராக்கெட்டை உருவாக்கும் பணியும் தொடங்கிவிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு, வளிமண்டலம் மற்றும் கனிமங்களை ஆராயும் ஐந்து கருவிகள் இதில் பொருத்தப்படவுள்ளன. செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியா ரூ.450 கோடியை செலவிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்று சீனா விண்ணுக்கு மூன்று செயற்கை கோள்களை வெற்றிகரமாக ஏவியுள்ளது.  வானவியல் ஆய்வுக்காக இவை செலுத்தப்பட்டுள்ளன. 

samedi 20 juillet 2013

தமிழ் மக்கள் எதற்காக ஈழம் என்ற தனிநாட்டுத் தீர்வை நோக்கிச் சென்றார்கள்?


பிரபாகரன் தமிழீழம் கேட்டதில் என்ன தவறு? இலங்கையில் இருந்து  - பிரியதர்சன்விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு இலங்கை இந்திய ஒப்பந்த்தின்படி இலங்கை அரசியலமைப்பில் மாற்றம் செய்யப்பட்ட 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவேன் என்று சொல்லியே மகிந்த ராஜபக்ஸ போரை தொடங்கி மாபெரும் அழிவுகளை நிகழ்த்தினார். தமிழர்களுக்கு சிங்கள அரச தலைவர்கள் எந்தத் தீர்வையும் வழங்கமாட்டார்கள் என்ற நிலையிலேயே தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்கிற அளவுக்கு ஜனநாயக அரசியலில் ஏற்பட்ட பின்னடைவே ஆயுதப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்தது. ஏதுவுமற்;ற 13 ஐ வைத்து மாபெரும் போர் நடத்தப்பட்டதோ அந்தப் 13ஐயும் இல்லாது ஒழித்துக் கட்டுகிற வேலையில் இனவாத அணியினர் இறங்கியுள்ளனர்.
இலங்கை அரசு போரை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் எந்தத் தீர்வையும் முன் வைக்காமல் கடந்த நான்கு ஆண்டுகளாக காலத்தை இழுத்தடிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கூட்டத் தொடரில் அதிகாரங்களைப் பகிருவது மற்றும் வடக்கில் தேர்தல் நடத்துவது தொடர்பில் இலங்கைக்கு பணிக்கப்பட்டது. இலங்கைமீது எந்த பணிப்புக்களையும் நிகழ்த்த முடியாது என்று இலங்கை இறுமாப்பாக இருக்கின்றது. இலங்கையின் யுத்த கால நிகழ்வுகள் மற்றும் போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகள் குறித்த குற்றச்சாட்டுக்களுக்கு இடையில் இன்றும் இன அழிப்பும் நில அபகரிப்பும் இலங்கை அரசால் திட்டமிட்டபடி மேற்கொள்ளப்படும் நிலையில் 13 அழிக்கும் போர் உக்கிரமடைந்து வருகிறது.
எதிர்க்கும் இனவாத அணி
13ஆவது திருத்தச் சட்டத்தை முதலில் எதிர்த்தவர்கள் ஜனாதிபதி ராஜபக் ராஜபக்ஸ  குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான். அவர்கள்தான் காணி அதிகாரமும் காவல்துறை அதிகாரமும் தேவையில்லை என்றும் தமிழ் மக்களை ஜனாதிபதி பார்த்துக் கொள்ளுவார் என்றும் சொன்னார்கள். 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் அதை நடைமுறைப்படுத்துவதனால் இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தோன்றும் என்றும் கோத்தபாய ராஜபக்ஸ  தெரிவித்திருந்தார். ஆனால் 13 என்று இறுதியாக இருக்கும் சிறு தீர்வையும் அழிக்கும் பட்சத்தில்தான் இலங்கையில் மீண்டும் போராட்டம் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தமிழரை இலங்கைத்தீவிலிருந்து முற்றாக அழிக்க நினைக்கும் இனவாதியான கோத்பாய உள்ளிட்டவர்கள் தமிழர்களுக்கு சிறு அதிகாரத்தை வழங்கினாலும் உயிர்த்தெழுவார்கள் என அஞ்சுகின்றனர்.
இன்று சிறுபான்மை இனங்களுக்கு எதிரான சிங்களப் பேரினவாத அமைப்புக்கள் பலவும் பலவிதமான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன். ராவண பலய முஸ்லீம் மக்களுக்கு எதிராக தெருத் தெருவாக இறங்கி அடக்குமுறைகளை மேற்கொள்ளுகிறது. பொதுபால சேன தமிழ் மக்களுக்கு சிறு அதிகாரமும் வழங்கக் கூடாது வடக்கில் தேர்தலும் நடத்தக்கூடாது என்று தொடர்ந்து தாக்கிக்கொண்டிருக்கிறது. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ராஜபக்ஸவின் நெருங்கிய நண்பர்களான விமல் வீரவன்சவும் சம்பிக்க ரணவக்கவும் 13ஆவது அரசியல் திருத்ததை அழிக்க வேண்டும் என்றும் காணி காவல் துறை அதிகாரங்கள் வழங்கக் கூடாது என்றும் தமது தீவிர இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
மாகாண சபை அதிகாரங்களுக்கு எதிராக விமல் வீரவன்ச இலங்கை முழுவதும் பத்து லட்சம் கையெழுத்துக்களை திரட்டி மகிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கியிருக்கிறார். இது இப்படியிருக்க வடக்கில் தேர்தல் நடத்தினால் ஆயிரம் பிக்குகள் தீக்குளிப்பார்கள் என்று பொதுபலசேனா அதிரடியாக அறிவித்திருக்கிறது. இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் நடவடிக்கை உச்சமடைவதைப் பார்த்தால் நாளை தமிழர்களை அழிக்காவிட்டால் தீக்குளிப்போம் என்றும் வடக்கில் மழை பெய்தால் தீக்குளிப்போம் என்றும் பிக்குகள் எச்சரிக்கும் நிலமையும் ஏற்டபலாம். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்த வித்திலும் தீர்வாக 13 அமையாது என்றும் 13 தீர்வு என்கிற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
ஆதரிக்கவும் ஒரு அணி
இலங்கை அரசிற்குள் இருந்து கொண்டே பலத்த எதிர்ப்புக்கள் வரும் பொழுது அதே அரசிற்குள் இருந்து கொண்டே 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் வடக்கு மகாண தேர்தலுக்கும் ஆதரவுக் குரல்கள் எழுகின்றன. அரசாங்கம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் என்றும் வடக்கு மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும் என்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக் ராஜபக்ஸ  கிளிநொச்சியில் வைத்து தெரிவித்தார். இலங்கை அரசு சார்பில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவும் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏதாவது இரண்டு அதிகளை சேர்த்தோ அல்லது அகற்றியோ தேர்தல் நடைபெறும் என்றும் ஹெகலிய ரம்புக்வெலவும் தெரிவித்துள்ளார்.
13இல் கை வைத்தால் பதவியையும் துறப்பேன் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருக்கிறார். அதைப்போல இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த வாசுதேவ நாணயக்காரவும் வடக்கின் தேர்தலையும் அதிகாரங்களையும் அவசியம் என்று தெரிவிக்கின்றார். 13ம் மாற்றம் ஏற்படுத்துவதையும் அவர் எதிர்த்துள்ளார். வடக்கில் தேர்தலை நடத்தவேண்டும் என்று சொல்லும் ராஜபக்சவின் சில முற்போக்கு அமைச்சர்கள் அணியினர் நாட்டின் பாதுகாப்புக் கருதி ஏதாவது அதிகாரங்களை நீக்கினால் அதை தாம் எதிர்க்க மாட்டோம் என்றும் சொல்லுகின்றனர்.
13தான் ஜனாதிபதி முன் வைத்த தீர்வு என்றும் அதை நீக்கினாலோ, திருத்தினாலோ மீண்டும் இன முரண்பாடு ஏற்படலாம் என்று ராஜபக்ஸவின் நிழலில் வளர்ந்த பிள்ளையானின் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. 13 வேண்டாம் 19ஆவது திருத்தமே தேவை என்று மாவட்டங்களுக்கும் கிராமங்களுக்கும் அதிகாரங்களை கொடுக்கும் தீர்வு அடங்கிய ஒன்றை எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடையாளம் காட்டுகின்றார்;.
அதிகாரங்களை பறித்து தேர்தலை நடத்த மக்கள் விடுதலை முன்னணி எனும் ஜே.வி.பி கட்டளையிடுகிறது. இவைகளுக்காகவே ஒரு முற்போக்கு அணியை தயார் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. தவிரவும் 13இல்  ஏதோ இருக்கிறது என்றும் 13 தமிழர்களுக்கு கொடுக்கக்கூடிய உயர்ந்த தீர்வு என்ற தோற்றங்களும் இதனால் உருவாக்கப்படுகின்றன.
கூட்டமைப்பின் நம்பிக்கை
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தமிழ் தேசியம், சுய நிர்ணய உரிமை, மரபு வழித்தாயகம் என்கிற அடிப்படை கோட்பாடுகள் அடங்கிய ஒரு தீர்வுக்கே இணங்குவோம் என்று தேர்தலில் தமிழ் மக்களிடம் வாக்களித்தது. தவிரவும் வடக்கும் கிழக்கும் இணைந்த மரபு வழித்தாயகம் என்ற விடயத்தையும் வாக்களித்தது. இப்பொழுது பிரிக்கப்பட்ட மாகாணத்தில் போட்டியிட தீர்மானித்த கூட்டமைப்பு அதிகாரங்கள் எதுவுமற்ற தேர்தலில் போட்டியிடும் நிலைமை ஏற்படுமா என்பதும் கவனிக்க வேண்டியது.  தமிழீழம், சமஷ்டி என்று பேசி இப்பொழுது 13ஆவது திருத்தத்தை நம்பும் நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வந்துவிட்டது.
ஒரு காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 13 பிளஸையே நம்பி அரசிற்கு ஆதரவு தெரிவித்தார். வடக்கில் அரசின் குரலாகவும் ஒலித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு 13 நம்பியமை என்பது ஜனநாயக அரசியலின் இயலாமைத் தனத்தின் வெளிப்பாடுகின்றது. அதேநேரம் 13ஐ மட்டுமே தருவேன் என்று மகிந்த ராஜபக்ஸ  இந்த உலகத்திற்கு அளித்த வாக்கை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதை வெளிப்படுத்த உகந்த ஒரு சந்தர்ப்பமாகவும் கருத இயலும். ராஜபக்ஸவின் முகங்களை போதுமான அளவு உலகத்திற்கு காட்டியதும் ராஜபக்ச தீர்வு என்ற பெயரில் எதையும் தீர்வையும் நடைமுறைப்படுத்த போவதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  
அண்மையில் இந்தியாவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரைந்தது. அங்கு இந்திய அரசுடன் 13 இற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்தைக் குறித்து முறையிட்டிருக்கிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையில் நடந்த ஒப்பந்தத்தின் அரசியல் தீர்வே 13ஆவது திருத்தச் சட்டம். இந்த திருத்தச் சட்டத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை என்று இந்தியா சொன்னதாக கூட்டமைப்பு கூறுகிறது. 13ஆவது திருத்தச் சட்டத்தில் மாற்றங்களை மற்கொள்ளும் இலங்கை அரசின் நடவடிக்கை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை இணையதளம் தெரிவித்திருந்தது.
13பிளஸ் என்றுதானே ராஜபக்ஸ தம்மிடம் வாக்களித்தார் என்றும் சொன்னதை ராஜபக்ச நிறைவேற்றுவார் என்று நம்புவதாகவும் இந்திய அரசின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஞானதேசிகன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். 13ஐயும் இந்தியாவையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால் வரலாறு முழுவதும் நிகழ்வதுபோலவே, இலங்கை அரசுடன் சேர்ந்து இந்தியாவும் ஈழத் தமிழர்களை ஏமாற்றுகிறதா என்பதே இங்கு முக்கியமானது.
13 ஈழத்தை உருவாக்குமா?
13ஐ நடைமுறைப்படுத்தினால், வடக்கில் தேர்தல் நடத்தினால் காணி காவல்துறை அதிகாரத்தைக் கொடுத்தால், தனி ஈழம் உருவாகிவிடும் என்று சிங்கள இனவாதிகள் கடுமையாக எச்சரிக்கின்றார்கள். 13 தேவை என்று இந்தியாவிடம் போனால் முள்ளிவாய்க்கால்தான் தீர்வு என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூட்டமைப்பை எச்சரிக்கின்றார். உண்மையில் அது தமிழர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கையே. காணி அதிகாரமும் காவல்துறை அதிகாரமும் கொடுத்தால் புலிகள் உயிர்த்தெழுவார்கள் என்று கோத்தபாய சொல்லுகிறார்.
எஞ்சியிருக்கிற 13ஐ அழிப்பதும் அல்லது அதை சத்திர சிகிச்சை செய்து வெற்றுத் தீர்வாக்குவதுமே புலிகளை மீண்டும் இந்தத் தீவில் உயிர்த்தெழச் செய்யும்.
தமிழ் மக்கள் எதற்காக ஈழம் என்ற தனிநாட்டுத் தீர்வை நோக்கிச் சென்றார்கள்? இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட பொழுது தமிழர்கள் அழிக்கப்பட்ட பொழுதே அவர்கள் தனிநாட்டுத் தீர்வுக்குச் சென்றார்கள். இலங்கை அரச தலைவர்களுடன்; பேசி எந்த உரிமையையும் பெற முடியாது என்ற பொழுதே தனிநாட்டுத் தீர்வுக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டார்கள். எனவே அதிகாரங்களை பகிர்வதும் ஜனநாயக உரிமைகளை வழங்குவதும் ஈழத்தை உருவாக்காது. அவற்றை மறுப்பதே ஈழத்தை உருவாக்கும் நிலமையை ஏற்படுத்தும்.
இலங்கைத் தீவில் அறுபது ஆண்டுகளுக்கு மேலாக போராடிய பின்னரும் முப்பது ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய  பின்னரும் பேசித் தீர்க்க முடியாத நிலையில் ஜனநாயகம் மறுக்கப்படும் நிலையில் சம உரிமை மறுக்கப்படும் நிலையில் லட்சக்கணக்கான மக்களை பலியிட்ட பின்னரும் 13ம் அழிக்கப்படும் கையறு அரசியல் சூழலே தனிநாடுதான் தீர்வு என்ற முடிவை மறுபடியும் உருவாக்கப் போகிறது. அதை சிங்கள இனவாதிகளே உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
13இல் என்ன இருக்கிறது?
13இற்கான ஆதரவையும் எதிர்ப்பையும் வைத்து பார்க்கும் பொழுது 13இல் ஏதோ இருக்கிறது என்றே பலரும் நினைத்துக் கொள்ளுவார்கள். ஏதுவுமே இல்லாத 13 சிங்களப் பேரினவாத அரசு தனது இரண்டு அணியினரை வைத்து எதிர்ப்பையும் ஆதரவையும் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. உண்மையில் 13ஆவது திருத்தச் சட்டம் என்பது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை வழங்கப் போவதில்லை. காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களுடன் கூடியதாக இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தற்பொழுது தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சில அபகரிப்பு அழிப்பு நடவடிக்கைகளை ஓளரளவு தடுக்க இயலும். அதை  தொடர்ந்து நடத்த தடையாக அமையும் என்பதனாலே இனவாதிகள் 13 எதிர்க்கிறார்கள்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களற்ற தேர்தலை நடத்தினால் மக்கள் வாக்களிக்ககூடாது என்று மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு யோசேப்பு பேசியதற்காக மன்னார் ஆயருக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை என்று அமைச்சர் ஹெகலிய குறிப்பிட்டிருக்கிறார். புலிகளின் தலைவர் அன்று மக்களை வாக்களிக்க விடாமல் தடுத்ததுபோல இன்று ஆயரும் தடுக்கிறார் என்று ஹெகலிய சொல்லுகிறார். 13ஐ கேட்டால் பிரபாகரன், காணி அதிகாரம் கேட்டால் பிரபாகரன், காவல்துறை அதிகாரம் கேட்டால் பிரபாகரன் என்று தமிழர்கள் தங்கள் உரிமையை கேட்டால் பிரபாகரன் என்றே அடையாளப்படுத்தப்படுகிறது. உண்மையில் தமிழ் மக்கள்மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயர் குரல் கொடுப்பதினாலேயே அவரைப் பிரபாகரன் போன்றவர் என்று அமச்சர் சொல்லியிருக்கிறார். மன்னார் ஆயர் அதிகாரமுள்ள மாகாணபையை வலியுத்துகிறார். ஆனால் பிரபாகரன் 13ஐயும் மாகாண சபையையும் நிராகரித்திருக்கின்றார்.   
தமிழ் மக்கள் இலங்கைத் தீவில் எதிர்கொண்ட வரலாற்றிற்கும் தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் நடத்திய போராட்டத்திற்கும் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்காலில் கொடுத்த விலைக்கும் தமிழப் போராளிகள் சிந்திய இரத்திற்கும் 13 தீர்வாகாது. 13 தீர்வாகவும் பாதுகாப்பாகவும் அமையாது என்பதற்கு 13ஐ இலகுவாக ஒரு நீர்ப் பாம்பைப்போல அடித்து வீசிவிடத் துடிக்கும் இனவாதிகளின் நடவடிக்கையே உணர்த்துகிறது. 13 ஈழத் தமிழர்களுக்கு தீர்வாகாது என்கிற பொழுதும் 13ஐயே சிங்கள உலகம் வழங்கத்தயாரில்லை என்கிற பொழுதும் பிரபாகரன் தமிழீழம்தான் தீர்வு என்று சொன்னதும் அதற்காகப் போராடியதிலும் என்ன தவறிருக்கிறது?
இலங்கையில் இருந்து  - பிரியதர்சன்

அனைவரும் வருக..! ஆதரவு தருக..!! இலண்டன் மாநகரில் இலக்கிய மாலை ஆறு நூல்கள் அறிமுக நிகழ்வு..! 10 - 08 - 2013 சனிக்கிழமை பிற்பகல் 4. 30 மணி சைவ முன்னேற்றச் சங்க மண்டபம் Saiva Munnetta Sangam - (UK) 2, Salisbury Road, Manor Park, London E 12 6 A B


லண்டனில் கடும் வெயில் 650 பேர் பலி

லண்டன்:பிரிட்டனின் பல பகுதிகளில் கடும் கோடை வெயில் கொளுத்துவதால், 650 பேர் பலியாகியுள்ளனர்.பிரிட்டனில், 50 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பம் தாளாமல், மக்கள் பலர், நீர் நிலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.வாட்டர் லூ, கென்ட், ஹாம்டன் உள்ளிட்ட பல பகுதிகளில், 102 டிகிரி அளவுக்கு, வெப்பம் தகிக்கிறது. கடந்த, ஒன்பது நாட்களில், 650க்கும் அதிகமானவர்கள் வெயிலுக்கு பலியாகியுள்ளனர். 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் அதிகம் உயிரிழந்துள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தின் 15 படைப்பிரிவுகள் முகாமிட்டுள்ளன வடக்கு மாகாணத்தில். தற்கொலைக்கு ஒப்பானது

மாகாணசபைகளின் காணி காவல்துறை அதிகாரங்களை பறித்துக் கொள்ளும் முடிவு தற்கொலைக்கு ஒப்பானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபைத் தேர்தல் முதன்மை வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

“மாகாணசபைகளுக்கு காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை ஒப்படைக்காமல் அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை. 

மாகாணங்களில் சட்டம், ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பு அந்தந்த மாகாணசபைகளிடமே ஒப்படைக்க வேண்டும். 

வடக்கு மாகாணத்தில் தற்போது நிலை கொண்டுள்ள சிறிலங்கா காவல்துறை மற்றும் இராணுவத்தினர் அனைவரும் சிங்களவர்களே. 

அங்கு, சிறிலங்கா இராணுவத்தின் 15 படைப்பிரிவுகள் முகாமிட்டுள்ளன. 

இந்த செறிவான படைக்குவிப்பு மக்களுக்குப் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. 

மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள வழங்கப்பட்டால், தனியான இராணுவத்தை அமைக்க வழிவகுத்து விடும் என்றும், அது சிறிலங்கா இராணுவத்துக்கு இணையாக வலுப்பெற்று விடும் என்றும் பசில் ராஜபக்ச கூறியுள்ளார். 

இந்தக் கருத்து தமிழர்கள் மீதான நம்பகத்தன்மை குறைவால் ஏற்பட்டுள்ளது. 

இதுபோன்ற அச்சங்கள் முற்றிலுமாக நீங்க வேண்டும். இத்தகைய கருத்துகள் நீங்குவதற்கு நீண்டகாலம் பிடிக்கும். 

நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதன் மூலமே இந்த நிலையை மாற்ற முடியும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

jeudi 18 juillet 2013

PLOTE அமைப்பில் ஆயிரம் ஆயிரமாக உறுப்பினர்களை உள்வாங்கிய விஸ்வலிங்கம் பொன்னுத்துரை காலமானார்

குமரன் என்று அறியப்பட்ட விஸ்வலிங்கம் பொன்னுத்துரை இன்று (யூலை 18 2013) மதியம் காலமானார். கடந்த ஓராண்டு காலமாக சுவாசக் கோளாறு காரணமாக  சிகிச்சை எடுத்துவந்த இவர் யூலை 13, 2013 இல் பிரான்ஸ் சென் லூயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
இடதுசாரி செயற்பாட்டாளரும் காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளராகவும் அரசியல் பயணத்தை ஆரம்பித்த இவர் காந்தியம் அமைப்பின் யாழ் மாவட்ட பொறுப்பாளராக இருந்தவர். பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக் களகம் – (PLOTE) அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் ஆரம்பகால உறுப்பினரும் மத்திய குழு உறுப்பினருமான இவர் குமரன் என கழகத் தோழர்களால் அறியப்பட்டு இருந்தார்.
தமிழீமிழ மக்கள் விடுதலைக் கழகம் ஆயிரம் ஆயிரமாக உறுப்பினர்களை உள்வாங்கிய அக்காலப் பகுதியில் தளநிர்வாகப் பொறுப்பும் குமரனிடம் வழங்கப்பட்டு இருந்தது. யாழ் மாதகல் பகுதியைச் சேர்ந்த இவர் தளத்தில் இருந்து பின் தளமான இந்தியாவுக்கு உறுப்பினர்களை அனுப்புவதற்கும் பொறுப்பாக இருந்தவர். அதனால் ஓட்டி குமரன் என்றும் அறியப்பட்டவர்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டு உறுப்பினர்கள் வெளியேறிய போது குமரன் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி இருந்தார். அவர் தனது பிற்காலங்களிலும் எந்தவொரு அரசியல் இயக்கத்திலும் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை.
ஆயினும் பிரான்ஸ்க்கு புலம்பெயர்ந்த பின்னர் அவரிடம் இருந்த விடுதலையுணர்வு அவரை தொடர்ந்தும் ஒரு அரசியல் செயல்பாட்டாளராக வைத்திருந்தது. அரசியல் நடவடிக்கைகளில் தன்னை  ஈடுபடுத்தி வந்த குமரன் தமிழ் மக்களின் விடுதலைக்கு தமிழ் மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தி வந்தார். அரசியல் ரீதியாக முரண்பட்டவர்களையும் ஒரே தளத்திற்கு கொண்டு வந்து ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர் தன சக செயற்பாட்டாளர்களுக்கு வலியுறுத்தி இருந்தார்.
குமரன் தனது கடந்த கால அரசியல் செயற்பாடுகள் பற்றிய பதிவுகளையும் முழுமையாக எழுதி முடித்துள்ளார். அவற்றை ஒரு நூலாகக் கொண்டுவர வேண்டும் என்ற ஆவல் அவரிடம் இருந்தது. அதற்கு முன்னதாகவே அவர் இயற்கை எய்தியுள்ளார். அவருடைய பதிவுகளை அவருடன் இறுதிக்காலங்களில் செயற்பட்ட தோழர்கள் நூலுருவாக்குவாக்க உள்ளனர்.
குமரனுடைய இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.                                              தொடர்புகளுக்கு - 0033611486574

கவிஞர் வாலி காலமானார்

திரையுலகின் சகாப்தமான கவிஞர் வாலி தனது உடல்நல குறைவால் தனது 82 ஆவது வயதில் காலமானார். நுரையீரல்தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். 

35 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 

1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் ஆரம்பித்த கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். தமிழில் எதுகை மோனையில் பாடல்கள் எழுதுவதில் இவரைவிட சிறந்த கவிஞர் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு விக்கற் சம்பந்தன் அவுட் சே னாதி இன்!

மிக நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்குப்பின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரினால் தாண்தோண்றித்தனமாக மேற்கொள்ளப்பட்ட முதலமைச்சர் வேட்பாளர் நியமனத்தினால் விசனமுற்றிருக்கும் தமிழரசுக்கட்சியினர் எதிர்வரும் 20ம் திகதி  இடம்பெறவிருக்கும் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அதன் தலைவர் சம்பந்த்னுக்கு ஆப்பு வைக்கக்காத்திருக்கிண்றார்கள்.
அதாவது சம்பந்தன் சங்கரிக்கு செய்த அதே வேலையை தற்போது தமிழரசுக் க்ட்சி சம்பந்தனுக்கு செய்யப்ப்பொகிண்றார்களாம்.
திரு.விக்னேஸ்வரனின் நியமனத்தை ஏற்க மறுக்கும் பெரும்பான்மை தமிழரசுக்கட்சியினர் எதிர்வரும் 20ம் திகதி தமது தாண்தோண்றித்தனமான தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானத்தை நிறைவேற்றி அவரை திருகோணமலையில் ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு மாவை சேனாதியை முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியினர் நியமிக்கவுள்ளனர்.
இது இப்படியிருக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எண்றாலே தமிழரசுக்கட்சிதான் எண்ற தாரகை மந்திரம் புரியாத மண்டையன் குழு- தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் த தே கூட்டமைப்பின் சார்பில் சேனாதி நிறுத்தப்பட மாட்டார் என இண்றும் பலரிடம் கூறித்திரிகிண்றார். அப்படியே எதிர்வரும் 20ம் திகதி சம்பந்தனுக்கு அவ்வாறானதொரு  நிலையேற்பட்டு அவர் ஓரம் கட்டப்படும் பட்சத்தில் சேனாதிராசா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராவதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சுரேஸ் அணி தவிர்ந்த ஏனையோர்கள் மாவைக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு முடிவு வரும் பட்சத்தில் சுரேஸின் அரசியல் வாழ்க்கையும் அஸ்த்தமனமாவது  உறுதி
இந்த நிலையில் திரு. விக்னேஸ்வரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்? அல்லது போட்டியில் இருந்து ஒதுங்குவாரா? அல்லது …….? எண்ற கேள்விகளுக்கு 20ம் திகதி பதில் கிடைத்துவிடும்
எஸ்.எஸ்.கணேந்திரன்

நெருங்கி வந்துவிட்டது ராஜபக்ஷ ரெஜிமென்டை வீட்டுக்கு அனுப்பும் காலம்: சிறிதுங்க ஜயசூரிய!

நாட்டில் இடம்பெறும் கடும்போக்கு ஆட்சியை கலைத்து ராஜபக்ஷ ரெஜிமென்டை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி வந்துவிட்டதென சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டு மக்கள் பட்டினியில் வாடுகின்ற நிலையில் அரசாங்கம் நாடு முழுவதும் தேவையில்லாத அபிவிருத்திகளைமேற்கொண்டு நாட்டின் அபிவிருத்திகளை சீரழிக்கின்றது.
பொதுநலவாய மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையிலேயே அபிவிருத்தி என்றபெயரில் நாடகமாடுகின்றது.உள்நாட்டு வருமானம் என்றுமில்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அனைத்துவித நடவடிக்கைகளும் செயலிழந்துள்ளன.
தென்பகுதி சிங்கள பௌத்த மக்களை முட்டாள்களாக்கி தேர்தலில் வெற்றிபெற்ற அரசாங்கம் மாகாண சபை முறைமையையும் இல்லாதொழிக்க திட்டம் தீட்டியது.
இந்நிலையில் கடும்போக்கு ஆட்சிபுரியும் ராஜபக்ஷ ரெஜிமென்டை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி வந்துவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் செப்டெம்பர் யாழ் தேவி கிளிநொச்சி வரை பயணம்

யாழ் தேவி’ ரயில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் கிளிநொச்சி வரை சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.வவுனியாவில் இருந்து காங்கேசன்துறை வரையுள்ள 29 ரயில் நிலையங்கள் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உதவியுடன் நிர்மாணிக் கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.யுத்தத்தினால் அழிவடைந்த வடபகுதி ரயில் பாதைகள் இந்திய இர்கொன் கம்பனியினூடாக மீளமைக்கப்பட்டு வருகிறது. கொழும்பில் இருந்து வவுனியா வரையே இடம்பெற்ற யாழ் தேவி ரயில் சேவை தற்பொழுது ஓமந்தை வரையே இடம்பெறுகிறது.
நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதோடு அடுத்த வருட முடிவுக்குள் யாழ்ப்பாணம் வரை யாழ் தேவி ரயில் பயணம் செய்ய உள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது. மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான ரயில் பாதையும் துரிதமாக அமைக்கப்பட்டு வருகிறது.
தற்பொழுது புளியங்குளம், மாங்குளம், முறிகண்டி, முறிகண்டி கோயில், நாவற்குளி, பரந்தன், ஆனையிறவு, பளை, எழுதுமட்டுவாள், மிருசுவில், கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், கொக்காவில், கோண்டாவில், சுன்னாகம், மல்லாகம், தெல்லிப்பழை, காங்கேசன்துறை அடங்கலான ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

துபாய்:1 கிலோ உடல் எடையை குறைப்பவர்களுக்கு, 1 கிராம் தங்கம்

துபாய்: உடல் பருமனை குறைப்பதை ஊக்குவிப்பதற்காக, துபாயில், 1 கிலோ உடல் எடையை குறைப்பவர்களுக்கு, 1 கிராம் தங்கம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போதிய உடற்பயிற்சி மற்றும் உடலுழைப்பு இல்லாததால், உடல் பருமன் அதிகரிக்கிறது. உலகம் முழுவதும் இந்த பிரச்னை உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் இப்பிரச்னைக்கு தீர்வு காண, பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. துபாய் அரசு, அங்குள்ள நகை கடை உரிமையாளர்களுடன் இணைந்து, உடல் எடையை குறைப்பவர்களுக்கு, தங்கம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு மாதத்தில், குறைந்த பட்சம், 2 கிலோ எடையை குறைப்பவர்களுக்கு, குறைந்த பட்சம், 2 கிராம் தங்கம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேருபவர்கள் பதிவு செய்வதற்காக, ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரம்ஜானையொட்டி இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடல் எடையை குறைக்க வசதியாக, நடைபழகுதல், குதியோட்டம், உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள துபாயில், 91 இடங்களை, நகராட்சி ஒதுக்கிஉள்ளது.