mercredi 3 juillet 2013

அண்டார்டிகாவின் 2.7 கிலோ மீட்டர் உயரமுள்ள பனிக்கட்டி சரிந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

உலகின் 5வது பெரிய கண்டமான அண்டார்டிகாவில் 98 சதவிகிதம் பனி படர்ந்துள்ளது.
அங்கு சுமார் 1 மைல் ஆழத்திற்கு படிந்துள்ள பனியால் அப்பகுதியில் மைனஸ் 98 டிகிரி செல்சியசுக்கும் குறைவான அளவில் கடும் குளிர் நிலவுகிறது.
இந்நிலையில் தற்போது அண்டார்டிகாவின் கிழக்கு பகுதியில் உள்ள குக் பகுதியில் பனி நிறைந்த ஏரிகள் பெருமளவில் உருக தொடங்கியுள்ளது.
பாறைகள் மற்றும் பனிப்படலங்களின் அழுத்தத்தால் வெப்பம் அதிகரித்து தண்ணீர் வெளியேறுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே 2.7 கிலோ மீட்டர் உயரமுள்ள பனிக்கட்டி படலமானது திடீரென சரிந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து ஐரோப்பிய விண்கல ரேடார் அல்டிமீட்டர் கொண்டு ஆராயப்பட்டு வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இங்கு வெளியாகும் 6 பில்லியன் டன்கள் நீரானாது தெற்கு பெருங்கடலில் கலந்து வருகிறது.
இதன் காரணமாக கடலில் நீரின் அளவு அதிகரித்து நீர்மட்டம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire