lundi 22 juillet 2013

காடைத்தனம் மேலோங்கி மத சுதந்திரம் கேள்விக்குள்ளாகியுள்ளது ராஜபக்ஷ ஆட்சியில்: அஸாத் சாலி!

காடைத்தனம், அடாவடித்தனங்களால் முஸ்லிம் சமூகத்தினர் தமது மதக்கடமைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ராஜபக்ஷ ஆட்கியில் மத சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மஹியங்கனை பள்ளிவாசலில் தொழுகை நடத்த தடைபோடப்படட்தைக் கண்டித்து அஸாத் சாலிவிடுத்திருக்கும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசலில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஜும் ஆ தொழுகை அந்தப் பிரதேசத்தின் மாகாண அமைச்சர் அநுர விதான கமகேயின் அச்சுறுத்தல் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.புனித றமழான் காலத்தில் முஸ்லிம்களின் கட்டாயக் கடைமகளுள் ஒன்றான ஜும்ஆ தொழுகையில் ஈடுபடும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது. இதை நாம் மிகவன்மையாகக் கண்டிக்கின்றோம்.
சுதந்திர இலங்கையில் நாட்டின் ஒரு பகுதியில் வாழும் முஸ்லிம்களை அவர்களது புனித கட்டாயக் கடமைகளில் ஒன்றான வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையை தொழ விடாமல் அச்சுறுத்தித் தடுக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகுமென்பதே எனது அபிப்பிராயமாகும்.(முதலாவது சம்பவம் தம்புள்ளை பள்ளிவாசலில் இடம்பெற்றது) அந்த வகையில் மஹியங்கனை பள்ளிவாசல் தாக்குதலின் பெருமை எப்படி ஜனாதிபதியைச் சாரும் என்று குறிப்பிட்டேனோ அதேபோல் இந்தப் பெருமையும் அவரைத்தான் சாரும்.
காரணம் முஸ்லிம்களை வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையில் ஈடுபட விடாமல் அச்சுறுத்தித் தடுத்த மற்றொரு சம்பவமும் தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சியின்கீழ்தான் இடம்பெற்றுள்ளது.முஸ்லிம்களை வேதனைப்படுத்தி சண்டித்தனத்தைப் பிரயோகித்து அவர்களது கட்டாய மார்க்கக் கடமைகளைக்கூட நிறைவேற்றவிடாமல் தடுத்து ஜனாதிபதியும் அவரது இளைய சகோதரரும் தமது மார்புகளில் பதக்கங்களை அடுக்கடுக்காகக் குத்திக் கொள்வது கண்டு முஸ்லிம் சமூகம் வேதனை அடைந்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire