mardi 23 juillet 2013

பிரான்சில் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் தனது மகனைக் கொன்று, தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

பிரான்சில் இலங்கையைச் சேர்ந்த இளம் பெண்ணொருவர் தனது மகனைக் கொன்று, தானும் தற்கொலை செய்ய முயன்றதை அடுத்து, அவரும் இலங்கையைச் சேர்ந்த அவரது கணவர் மற்றும் முன்னாள் காதலன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையரொருவருடன் தான் வைத்திருந்த தகாத உறவொன்றின் மூலம் பிறந்த தனது மகனையே குறித்த 28 வயதான பெண் கொல்வதற்கு முயன்றிருந்தாரெனக் கூறப்படுகின்றது. தனது மகனை எவருமே கவனிக்கமாட்டார்களென அஞ்சியே, குறித்த பெண் அவனையும் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரது தற்கொலை முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அவர் தலைநகர் பாரிஸில் உள்ள புனித லூயிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்டார். ஆரம்ப விசாரணையின் போது அவர் கணவன் மற்றும் காதலன் ஆகியோரால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருந்ததாகவும், கணவனின் தாக்குதலுக்கு அவர் உள்ளாகியிருந்ததாகவும் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி.பிரான்சிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிகாயங்கள் மற்றும் உள்ளக ஊமைக் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிய நிலையில் உடல்நிலை தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire