lundi 1 juillet 2013

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 19 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்.

அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய இந்தத் தீ, அருகே யார்னெல் நகரை அண்டாமல் தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள்.செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், ஒரே சம்பவத்தில் அதிகளவில் தீயணைப்புப் படைவீரர்கள் பலியாகியுள்ள சம்பவம் இதுவென்றே கருதப்படுகிறது.
கடந்த வெள்ளியன்று மின்னல் தாக்குதலினால் ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ, கடுமையான காற்று, காற்றில் குறைந்தளவு ஈரலிப்பு மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வேகமாக பரவத் தொடங்கியது.
அதிக வெப்பம் காரணமாக உள்ளூர்வாசிகள் எல்லோரும் அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.
இப்போது சுமார் 1000 ஏக்கர் அளவில் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் கிட்டத்தட்ட 200 பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
1933-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 25 தீயணைப்புப் படைவீரர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire