mardi 30 juillet 2013

முதலமைச்சர் யார் என்பதனை ஏன் மக்களுக்கு வழங்காமல் சர்வாதிகாரமாக நடந்துகொள்கின்றது கூட்டமைப்பு

வட மாகாண சபையின் முதலமைச்சர் யார் என்பதனை தீர்மானிக்கும் உரிமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களுக்கு வழங்காமல் ஏன் சர்வாதிகாரமாக நடந்துகொள்கின்றது. தமது முதலமைச்சர் யார் என்பதனை வடக்கு மக்களே தீர்மானிக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வட மாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராக யாரையும் அறிவிக்கவில்லை. அதனை மக்கள் தீர்மானிப்பதற்கு இடமளித்துவிட்டோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகாரி போன்று செயற்படுகின்றார் என்று குற்றம் சாட்டும் கூட்டமைப்புதான் உண்மையிலேயே சர்வாதிகாரி போன்று செயற்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வடக்கு மக்களை யார் அவமதித்தது என்பதனை கூட்டமைப்பின் வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனின் அமோக வெற்றி உலகுக்கு பறைசாற்றும என்று கூட்டமைப்பு தெரிவித்துள்ளமை தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வட மாகாணத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மக்களை அவமதித்துவிட்டது என்று கடந்தவாரம் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே கூட்டமைப்பு இந்த விடயத்தை கூறியிருந்தது.
இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

Aucun commentaire:

Enregistrer un commentaire