பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.
பிரான்ஸ் நாட்டில் 100 ஆண்டு களில் இல்லாத வகையில் பலத்த மழை பெய்தது. ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 3 நாட் களில் கொட்டித் தீர்த்தது. அந்த நாட்டின் தலைநகர் பாரீஸில் செய்ன் நதி ஓடுகிறது. அந்நதியில் வெள்ளம் அபாய அளவைத் தாண்டியதால் தலைநகரின் பெரும் பகுதி தண்ணீ ரில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் மழை ஓய்ந்திருப்பதால் செய்ன் ஆற்றில் வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளது. இதனால் நகரை சூழ்ந்திருந்த அபாயம் நீங்கியுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரான்ஸ் பிரதமர் மானுவேல் நேரில் ஆய்வு செய்தார். அவர் கூறியபோது, ‘‘வெள்ளம் காரண மாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் காயம் அடைந்துள்ளனர், நிவாரண பணிகள் முடுக்கி விடப் பட்டுள்ளன. பிரான்ஸ் முழுவதும் வெள்ளம் படிப்படியாக வடியத் தொடங்கியுள்ளது, 3 நாட்களில் இயல்பு நிலை திரும்பிவிடும்’’ என்று தெரிவித்தார்.