
இலங்கைக்கு 40 கோடி டொலர்கள் செலவில் (இலங்கை மதிப்பில் சுமார் 5 ஆயிரத்து 800 கோடி ரூபா) யுத்த விமானங்கள் எதற்காக? எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ விதாரண. கொழும்பில் நேற்று புதன்கிழமை அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இக்கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 150 கோடி டொலரை (இலங்கை மதிப்பில் 21 ஆயிரத்து 750 கோடி ரூபா) கடனாகப் பெற்றுள்ளது. இந்த நிலையில் 40 கோடி டொலருக்கு யுத்த விமானங்களை வாங்குவது ஏன்? நாட்டில் இன்னமும் யுத்தம் நடந்து கொண்டிருக்கிறதா? அல்லது நாட்டுக்கு வெளிநாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்கிறதா என்றும் கேள்விகளை எழுப்பினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire