dimanche 5 juin 2016

மெயில் முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக, ஹிலாரி கிளிண்டனை சிறையில் அடைத்திருக்க வேண்டும்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கருத்துக்கணிப்பு: டிரம்பை முந்துகிறார், ஹிலாரி
மெயில் முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக, ஹிலாரி கிளிண்டனை சிறையில் அடைத்திருக்க வேண்டும்,'' என, அமெரிக்க குடியரசு கட்சியின் உத்தேச அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். 
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர், 8ல் நடக்கிறது. இதில், இரு கட்சிகளிலும் வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக, 'பிரைமரி' தேர்தல் தற்போது நடக்கிறது. குடியரசு கட்சியின் சார்பில், தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், உத்தேச வேட்பாளராக முன்னிலை பெற்று விட்டார். 
ஜனநாயக கட்சி சார்பில் அவரை எதிர்த்து நிற்க, ஹிலாரி, பெர்னி சாண்டர்ஸ் இடையே போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், நியூஜெர்சியில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஹிலாரி, ''டிரம்ப் ஊழல்வாதி; ஊழல் பல்கலைக்கழகம்,'' என, விமர்சித்தார். 
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கலிபோர்னியாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் டிரம்ப் பேசினார். 
அவர் பேசியதாவது:'இ - மெயில்' விவகாரத்தில் சிக்கிய ஹிலாரி சிறையில் இருந்திருக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கியவர், அவர். 
இவ்வாறு டிரம்ப் கூறினார். ஹிலாரி, வெளியுறவு அமைச்சராக இருந்தபோது, தனிப்பட்ட இ - மெயில் முகவரியில், அரசு சார்ந்த தகவல்களை பரிமாறியதாக புகார் எழுந்தது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire