samedi 31 janvier 2015

அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில்

ஆணுகுண்டை ஏந்தி ஐயாயிரம் கிலோ மீட்டர் தூரம் செல்லக்கூடிய இந்தவகை ஏவுகணை மூன்றாவது முறையாக இன்று சோதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், முதன்முறையாக சாலையில் செல்லும் கனரக வாகனத்தில் வைத்து இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணையைக் கொண்டு சீனாவில் உள்ள முக்கிய நகரங்கள் அனைத்தையும் இலக்கு வைக்க முடியும். நாட்டின் மேற்குப் பகுதியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டால் அது ஐரோப்பாவை அடையும்.
இந்த சோதனை வெற்றிபெற்றுள்ளதை பாராட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாகனத்தில் இருந்து ஏவப்படும் நீண்டதூரம் செல்லும் ஏவுகணை நாட்டின் பாதுகாப்புக்கு கிடைத்த முக்கிய ஆயுதம் என்று வர்ணித்துள்ளார்.
அக்னி ஏவுகணைத் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த விஞ்ஞானியான அவினாஷ் சந்தர், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சனிக்கிழமையன்று ஒய்வு பெறும் நிலையில் இந்த சோதனை வந்துள்ளது.
அவினாஷ் சந்தரின் பதவிக் காலத்தை காரணம் ஏதும் கூறாமல் மோடி அரசு சில வாரங்களுக்கு முன்னர் குறைத்தமை குறிப்பிடத்தக்கது

jeudi 29 janvier 2015

அமெரிக்க அரசின் கொள்கைகளைத்" தான் நம்பவில்லை! காஸ்ட்ரோ

அமெரிக்காவுடனான உறவு இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டுமானால், குவாண்டனாமோ ராணுவ முகாம் அமைந்துள்ள இடத்தை தங்களிடம் திரும்பக் கொடுக்க வேண்டுமென க்யூபா கோரியுள்ளது.
க்யூபாவை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வர்த்தகத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் க்யூப அதிபர் ரவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் க்யூபாவுக்கும் இடையிலான உறவு மேம்பட்டிருப்பதாக கடந்த மாதம் இரு நாடுகளும் அறிவித்தன. 1961ல் நிறுத்தப்பட்ட தூதரக உறவுகளை மீண்டும் அமைக்கப்போவதாகவும் இருநாடுகளும் தெரிவித்திருந்தன.
இது தொடர்பாக கடந்த வாரம் உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இரு நாடுகளின் தலைநகரங்களிலும் தூதரகங்களைத் திறப்பது குறித்த பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று ஹவானாவிற்கு வந்திருக்கிறது.
இரு நாடுகளும் நெருங்குவதற்கு, முன்னாள் க்யூப அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, தனது ஒப்புதலைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
க்யூபாவில் அரசுக்குச் சொந்தமான செய்தித்தாள் ஃபிடல் எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், "எங்கள் அரசியல் எதிரிகள் உள்பட உலகில் உள்ள எல்லா மக்களுடனும் ஒத்துழைப்பையும் நட்பையும் நாங்கள் பாதுகாப்போம்" என ஃபிடல் குறிப்பிட்டுள்ளார்.
"அமெரிக்க அரசின் கொள்கைகளைத்" தான் நம்பவில்லை என்றாலும் "மோதல்களுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதைத்" தான் எதிர்ப்பதாக அதற்கு அர்த்தமாகாது என அவர் கூறியுள்ளார்.
கோஸ்டாரிகாவில் நடந்த லத்தீன் அமெரிக்க - கரீபியன் நாடுகளின் உச்சிமாநாட்டில் பேசிய ரவுல் காஸ்ட்ரோ, குவாண்டநாமோ தளத்தை திரும்ப அளிக்க வேண்டும், தடைகளை நீக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
க்யூபாவின் அதிபராக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவுக்குப் பதிலாக, 2008ல் ரவுல் காஸ்ட்ரோ அதிபரானார்.
'தடைகள் நீடித்தால், உறவு சாத்தியமில்லை'

குவாண்டனாமோ, 1903ல் அப்போதைய க்யூப அரசால் அமெரிக்காவுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டது.
"இருதரப்பு உறவுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகத்தான் தூதரக உறவுகளை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சிகள் நடந்துவருகின்றன. தடைகள் தொடர்ந்து நீடித்தால், கடற்படைத் தளத்தால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் குவாண்டனாமோ பகுதிகளைத் திரும்பத் தராவிட்டால், இது சாத்தியமில்லை" என ரவுல் தெரிவித்துள்ளார்.
1903ல் க்யூபாவை அப்போது ஆட்சி செய்த அரசால், அமெரிக்க அரசுக்கு குவாண்டநாமோ குத்தகைக்கு அளிக்கப்பட்டது.
ரவுலின் கோரிக்கை குறித்து, அமெரிக்க அதிகாரிகள் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
1962ஆம் ஆண்டிலிருந்து க்யூபா மீது விதிக்கப்பட்டிருக்கும் வர்த்தகத் தடையை நீக்குவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா நாடாளுன்றத்தில் பேசியுள்ளார்.
தனக்கு இருக்கும் செயல்படுத்தும் அதிகாரத்தைப் பயன்படுத்தி க்யூபாவுக்கு பயணம் செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளையும் வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் அதிபர் ஒபாமா இம்மாதத் துவக்கத்தில் தளர்த்தினார்.

உலகப் போர் வெற்றி விழா

இண்டாம் உலகப் போர் வெற்றி விழாவை ரஷ்யா நடத்துகிறது, இந்த விழாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங்வுன் கலந்து கொள்கிறார்.
 
இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகள் கூட்டணியாகிய ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டணி வெற்றி பெற்றது.
 
ஹிட்லரின் ஜெர்மனியையும், முசோலினியின் இத்தாலியையும், ஜப்பானையும் வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தெடர்ந்து இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது.இந்த இண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜெர்மனியை தோற்கடித்தை, ரஷ்யா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மே மாதம் கொண்டாடப்படும் இரண்டாம் உலகப் போர் வெற்றி விழாவில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் வுன் கலந்து கொள்ளும்படி ரஷ்யா ஏற்கனவே அழைப்பு விடுத்திருந்தது.
 
இந்த அழைப்பை வட கொரியா ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், அதிபர் கிம் ஜாங் வுன் வருகையை உறுதி செய்துள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ளும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் வுன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடீனை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த சந்திப்பின்போது முக்கிய உடன்பாடுகள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யா நடத்தும் உலகப் போர் வெற்றி விழாவில் 20 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
2011 ஆம் ஆண்டு வட கொரிய அதிபராக கிம் ஜாங் வுன் பதவி ஏற்ற பின்னர் முதன் முதலாக செல்லும் நாடு ரஷ்யா என்பது குறிப்பிடத்தக்கது.

mercredi 28 janvier 2015

அணுஉலைகளையும்,ஆயுதங்களையும், சோலார்ளையும் இந்தியாவிடம் விற்க வந்துள்ள, ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க, அப்பாயிண்ட்மெண்ட் கேட்டார்.சர்வ அலட்சியமாக நிக்ஸனின் வேண்டுகோளை நிராகரித்த காமாராஜர்,பின்வருமாறு கூறினார்."நம்ம அண்ணாதுரைய சந்திக்க மறுத்த நிக்ஸனை, நான் எதுக்கு சந்திக்கணும்னேன். பெருச்சாளி போல வளரும் நாடுகளை சுரண்டி வாழும் அமெரிக்காவை நான் கண்டிக்கிறேன்னேன். அமெரிக்க அதிபர்களை, நாம முக்கிய விழாக்களுக்கு டெல்லிக்கு கூப்பிடக் கூடாதுன்னேன்". பெருந்தலைவரின் இந்த வீர உரையை சீன, ரஷ்ய, ஐப்பான் ஊடகங்கள் மீண்டும், மீண்டும் ஒலிபரப்பின. அதைக்கேட்ட ஒட்டு மொத்த ஆசியக்கண்டமும், எழுந்து நின்று ஆரவாரம் செய்து பெருந்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தன.

அன்றுமுதல் இன்று வரை, நமது குடியரசு தின விழாவிற்கு அமெரிக்க அதிபர்களை,நாம் ஒருபோதும் அழைத்ததில்லை.பெருந்தலைவரின் வாக்கை மீறி அமெரிக்க அதிபர்களை குடியரசு விழாவிற்கு,இதுவரை எந்தப் பிரதமரும் அழைக்கத் துணிந்ததில்லை.

பிரதமராக பதவி ஏற்கும் விழாவிற்கு,மோடி யாரும் எதிர்பாராத வகையில், இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சேவை அழைத்து கொஞ்சிக் குலாவினார்.
இப்பொழுது,ஆயுத வியாபாரியான அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை,குடியரசு விழாவிற்கு அழைத்துள்ளது,ஒட்டு மொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

அமெரிக்க சோலார் பேனல்களையும்,அணுஉலைகளையும்,ஆயுதங்களையும்,இந்தியாவிடம் விற்க வந்துள்ள, ஒபாமாவை,குடியரசு தின விழாவிற்கு மோடி அழைத்து வந்துள்ளது,நமதுதேசத்தையே சிறுமைப்படுத்தி விட்டது.

இந்தச் சோதனையான நிகழ்வை தாண்டி,இந்திய மக்கள், அமெரிக்கப் பொருட்களைப் இனி புறக்கணிப்பார்கள் என நம்புகிறேன்.நம் ஜனநாயக மாண்புகளை மீட்டெடுக்க,அமெரிக்க பொருட்களை புறக்கணிக்க உறுதி பூணுவோம்.

குடியரசு தின வாழ்த்துக்கள்.

தோழமையுடன்

வழக்கறிஞர் திலகர்

mardi 27 janvier 2015

1580 கோடி ரூபாய் மதிப்புள்ள பறக்கும் வெள்ளை மாளிகை கழுகு

அமெரிக்க ஜனாதிபதியின் அலுவல் விமானத்தின் பெயர் "ஏர்போர்ஸ் 1". போயிங் 747 ரக விமானமான இதில் தான் அவர் டில்லிக்கு வந்தார். அணுஆயுதங்களால் கூட இந்த விமானம் பாதிக்கப்படாது. 1580 கோடி ரூபாய் மதிப் புள்ள இந்த விமானமே ஒரு "பறக்கும் வெள்ளை மாளிகை". அதாவது, அந்த அளவுக்கு இதிலேயே ஜனாதிபதி; அலுவ லகமே இயங்கும். அதிநவீன தகவல் தொடர்பு சாத னங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வ தற்கு அவர் "மெரைன் ஒன்" என்ற ஹெலிகொப்டரை பயன்படுத்துவார். இதுவும் அமெரிக்காவில் இருந்து வர வழைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி யுடன்; அமெரிக்காவின் நவீன "மெரைன்' பாதுகாப்பு படையினர் இருப்பர். வானிலும் அமெரிக்க விமானப்படை தொடர்ந்து கண்காணித்தபடி இருக்கிறது. அணு ஆயத இழப்பீடு சட்ட மசோதா குறித்து விவா திக்கப்படும் என தெரிகிறது. எரிவாயு விநியோகம், திரவ இயற்கை வாயு, எரிசக்தி தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு பாதுகாப்பு பயிற்சி போன்ற வி'யங்கள் விவாதிக்கப்பட உள்ளன. ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே போன்ற துறைகளில் அமெரிக்க முதலீட்டை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறலாம். ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் பாக். - ஆப்கன் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக நடவடிக்கை ஒருங்கிணைந்த பயற்சி பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.

vendredi 23 janvier 2015

குடும்ப உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால அரச நியமனங்களுக்கு பயன்படுத்தமாட்டேன் அவரது சகோதரருக்கு.டெலிகொம் தலைவர்

1_XLஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தகுதி அடிப்படையில் மிகமூத்த அதிகாரியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம் நிறுவனத்தின் தலைமைக்கு பொருத்தமானவர் என்ற காரணத்தினாலேயே இப்பதவி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.குடும்ப உறுப்பினர்களை அரச நியமனங்களுக்கு பயன்படுத்தமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்த நிலையில், அவரது சகோதரருக்கு ஸ்ரீ லங்கா டெலிக்கொம் தலைவர் பதவி வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.2006ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடம் டிசெம்பர் வரை, அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பொது முகாமையாளராகவும் குமாரசிங்க சிறிசேன கடமையாற்றியிருந்தார். அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கியதன் பின்னர் குமாரசிங்க சிறிசேனவின் பதவி பறிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிற...........???

i7647TNA330_nகிழக்கு முதலமைச்சர் பதவியினை தமக்கு விட்டுத்தருமாறும் புதிய ஆட்சி அமைவதிலுள்ள சிக்கல் நிலைமையினை தீர்த்துவைக்குமாறும் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இச்சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்றுப் பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரே ஜனாதிபதியுடனான இம்முக்கிய சந்திப்பில் கலந்துகொண்டனர்.
 கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக தமிழர் ஒருவர் வருவதற்கான காரணங்களை எடுத்துரைத்த கூட்டமைப்பினரின் கருத்துக்களை நிதானமாகச் செவிமடுத்த பின், “தங்களது நியாயமான கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் நான் பொதுவாக மாகாணசபை விடயங்களில் தலையிடுவதில்லையென எண்ணியிருக்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் சங்கடம் புரிந்துகொள்ளத் தக்கதே. ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம் என்பதுபோல, இந்த கிழக்கு முதலமைச்சர் பதவியையும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது முஸ்லிம் காங்கிரசுக்கோ யாருக்கு விட்டுத்தந்தாலும் மறுதரப்பின் பகையைச் சம்பாதிக்க நேரும் என்பது அவருக்குத் தெரியும்.
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் எவரது ஆதரவை இழப்பது என்ற குழப்பம் அவருக்கு இருக்கும். ஏற்கனவே சிறுபான்மை இனங்களுக்கு தாராளமாக அமைச்சுப் பதவிகளை வழங்கி அவர்களை வளைத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர் ரணில்.
வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து காய்களை மிகத் தந்திரமாக நகர்த்தி வருகிறார் ரணில் விக்கிரமசிங்க. அமைச்சுப் பதவிகளை எல்லாம் தனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் ஆதரவுக் கட்சிகளுக்கும் வழங்கி, நாட்டின் நிர்வாகத்தை மெல்ல மெல்லத் தன் கைக்குள் எடுத்துக் கொள்கிறார் பிரதமர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான பிறகு, இதுகுறித்து அவரது கட்சியினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். ஜனாதிபதித் தேர்தலுக்காக இணைந்து செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியை மிகக் குறுகிய காலத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்த்துப் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஜனாதிபதி தலைமையிலுள்ள கட்சிக்கு ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டமானதுதான்.
தேர்தலில் வெல்லுவதற்கு சிறுபான்மை இன வாக்குகள் முக்கியம் என்ற நிலைமையில், தமிழ் கூட்டமைப்பையோ முஸ்லிம் காங்கிரசையோ பகைத்துக்கொள்ள வேண்டிய ஒரு முடிவைச் சொல்வதிலிருந்து தவிர்ந்துகொள்ள ஜனாதிபதி முயற்சிப்பது தெரிகிறது.
அவை ஒருபுறமிருக்கட்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் தமது பதவிகள் வாய்ப்புகளுக்காகத்தான் அரசதரப்பைச் சந்திப்பதும் பேசுவதுமாக இருக்கிறார்களே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்தும் தீர்வதற்கு வேண்டிய இனப்பிரச்சினைத் தீர்வுக்குப் பேசுவதாகவோ முயற்சிகள் எடுப்பதாகவோ செய்திகள் வரக் காணோம்.
தீர்வைக் கொண்டுவர முயற்சி செய்யாமல் அல்லது அதிகாரம் எதுவும் இல்லை என்று இவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் மாகாண சபைக்கான அதிகாரங்களை எடுப்பதற்கு முயற்சி செய்யாமல், அதையெல்லாம் விட்டுவிட்டு மாகாணசபை முதலமைச்சுப் பதவிகளையும் அமைச்சுப் பதவிகளையும் எடுப்பதற்கு ஏன் மினக்கெட்டுக் கொண்டிருக்கிறார்கள்?
அந்தப் பதவிகளை எடுத்த பிறகும் “எதுவும் செய்ய அதிகாரம் ஒண்டுமில்லை” என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? அந்தப் பதவிகளை எடுப்பதற்கு ஏன் ஆலாய்ப் பறக்க வேண்டும்? 2015-ல் தீர்வைக் கொண்டுவருவதற்கல்லவா இவர்கள் பேசவேண்டும்!

மூடச் சடங்கில் முக்கியச் சடங்கு!திருமணம்


திருமணச் சடங்குகளிலேயே பெரும் மூடச் சடங்கு மணமகளுக்குத் தாலி கட்டுதல் ஆகும். ஒருத்தி ஒருவனுக்கு உரியவளாகி விட்டாள் என்பதை எடுத்துக்காட்டும் சடங்காம். தாலி எனும் சொல் திருமணச் சின்னத்தைக் குறிக்கும் சொல். ஆக 11ஆம் நூற்றாண்டில்தான் பயன்படுத்தப்பட்டது.

கடவுள் எனப்படும் முருகன் செய்துகொண்ட ஒரு திருமணத்தில் தாலி கட்டியதாகக் குறிப்பு உள்ளது. அவனே செய்துகொண்ட இன்னொரு திருமணத்தில் (வள்ளி திருமணம்) இத்தகைய குறிப்பில்லை.

இக்கடவுளின் தந்தைக் கடவுள் செய்து கொண்ட (சிவன்) திருமணத்திலும்கூட இக்குறிப்பில்லை. தெய்வயானை என்பாளை முருகன் திருமணம் செய்துகொண்ட நிகழ்ச்சியை,

மங்கல நாணை மணிக்களம் ஆர்த்து  நங்கை முடிக்கோர் நறுந்தொடை சூழ்ந்தான் என்று கந்த புராணம் கூறுகிறது. மங்கல நாண் அணிவித்தானாம். அத்துடன் மலரையும் அவளின் கூந்தலில் சூட்டினானாம்.

திருமணத்தன்று மணப்பெண்ணுக்கு மலர் சூடுவதுதான், அவள் திருமணம் ஆனவள் என்பதற்கான அடையாளம் என்பதாக அகநானூற்றுக் காலத்திலிருந்தே வரும் பழக்கம். ஒன்றுக்கு இரண்டாக அடையாளம் இருக்கட்டுமே என்றானோ, கடவுள்? ஒன்றுக்கு இரண்டாக மனைவியைக் கொண்டவன் ஆயிற்றே!

தொங்குதல் எனும் பொருள் கொண்டது நாலுதல் எனும் சொல். நாலுதல் தாலுதலாகி அதுவும் சுருங்கி தாலி என்றாகியது என விளக்கம் தருகின்றார்கள் தமிழ் படித்தோர். தால், தாலம் என்பன பனைமரத்தின் பெயர்கள்.

பனங்குருத்தோலையால் செய்யப்பட்ட நகைகள் சிறுவர் சிறுமியர்க்கு அணிவிப்பது வழக்கம். தாலிக் கொழுந்தைத் தடங் கழுத்தில் பூண்டு என்று கண்ணனை வருணிக்கிறார் பெரியாழ்வார்.

திருமால் எனும் கடவுளின் ஆயுதங்கள் எனப்படும் சங்கு, சக்கரம், வில், வாள், கதை ஆகிய அய்ந்தையும் சிறு வடிவில் செய்து ஆண் குழந்தைக்கு அய்ந்து மாதம் வயதாகும்போது அணிவிக்கும் பழக்கம் இருந்தது. இதனை அய்ம்படைத் தாலி என்றனர்.

அய்ம்படைச் சதங்கை சாத்தி என்று பெரிய புராணத்தில் குறிப்பிடப்படுகிறது. தாலி அய்ம்படைத் தழுவு மார்பிடை என்று கம்பராமாயணம் பாடுகிறது. அய்ம்படை மார்பிற் காணேன் என்ற பரஞ்சோதி எழுதிய திருவிளையாடல் புராணம் கூறும்.

புறநானூற்றில்கூட (பாடல் 77) தார்பூண்டு தாலி களைந்தன்றுமிலனே பால்விட்டு அயினியும் இன்று அயின்றனனே எனக் கூறி, தலையானங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இளம் பருவத்திலேயே பகைவரை வென்றதைப் பாடுகிறது.

புலியுடன் சண்டை செய்து கொன்று அதன் பல்லைக் கொண்டு அணிசெய்து அதனைப் புலிப்பல் தாலி என்றனர். புறநானூறு (374). இதனை புலிப்பல் தாலிப் புலம்பு மணிச் சிறார் எனப் பாடுகிறது. இதனையே சிறுமியரும் அணிந்ததை அகநானூறு (பாடல் 7) இவ்வாறு பாடுகிறது.

புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி ஒலிக்குழைச் செயலை உடைமாண் அல்குல் என்று!

மறங்கொள் வயப்புலி வாய்பிளந்துபெற்ற
மாலை வெண் பற்றாலி _ என்று இதனைச் சிலப்பதிகாரமும் பாடுகிறது.
இதுதவிர, பின் தாலி எனவும் ஒன்றுண்டு என சிலப்பதிகாரம் கூறுகிறது.

முதுகை மறைக்கும் அளவுக்கு முத்தாரத்தில் நவ ரத்தினங்கள் கோத்துச் செய்யப்படும் அணி பின்தாலி எனப்பட்டது. தாலி என்றால் தொங்குவது எனும் பொருளில்தான் இந்தப் பெயர். இவ்வாறே முன்பக்கம் தொங்கும் அணி சின்மணித்தாலி எனப்பட்டது.

ஆமைத்தாலி என்பதை அக்குவடமுடுத்து ஆமைத் தாலி பூண்ட அனந்தசயனன் தளர்நடை நடலானே எனப் பெரியாழ்வார் பாசுரத்தில் குறிப்பிடப்-படுகிறது. இதுவும் சிறுவர்கள் கழுத்தில் அணியும் நகை என்கிறார்கள்.

இவற்றால், தாலி என்பது மணமகன் மணமகளை மனைவியாக ஏற்றுக் கொண்டதன் அடையாளச் சின்னமாக அறியப்பட்டது என்பது சரியில்லை. தொங்கும் அணிகளைக் குறிக்கும் சொல்லாகத்தான் பயன்படுத்தப்-பட்டது.

சின்னம் இழையே

அகநானூற்றில் வரும் (பாடல் 86) மணமகளுக்குக் குளிப்பாட்டிய முதிய மகளிர்பற்றிப் பாடும்போது வாலிழை மகளிர் நால்வர்கூடி என வருகிறது. பாடல் 136இல் மழைபட்டன்ன மணன்மலிபந்தக்/இழையணி சிறப்பின் பெயர் வியர்ப்பாற்றி என வரும் வரிகளால் இழை அணிவிக்கப்பட்டது என உணரலாம்.

இந்த இழை வெறும் நூல் இழை மட்டுமே. இவர்கள் கூறும் தாலி கோக்கப்படாத வெறும் இழைதான் அணிவிக்கப்பட்டதாகக் கருதலாம்.

ஈகையரிய இழையணி மகளிரொடு
சாயின்றென்ப ஆய்கோயில்

என வரும் புறநானூற்றுப் பாடலில் (127) எல்லாப் பொருளையும் வாரி வழங்கிய ஆய் மன்னனின் மகளிர் ஓர் இழையை மட்டுமே அணிந்திருந்த காரணத்தால் ஒளி குறைந்து காணப்பட்டனர் எனக் கூறப்படுகிறது. தகதகக்கும் தங்கநகை இன்மையால் ஒளி குறையத்தானே செய்யும்?

கரிகால் பெருவளத்தான் இறந்தபோது அவனின் உரிமை மகளிர் அணிமணிகளைக் களைந்தனர் என்றாலும் இழையையும் களைந்துவிட்டனர் என்று புறநானூறு பாடல் 224இல் புலவர் கருங்குழலாதனார் பாடியுள்ளார். கணவனை இழந்தோர் கழற்ற வேண்டியது இழை எனப் பொருள்படுகிறது. தாலி அல்ல என்பதை உணரலாம்.

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் வந்து திருமணம் செய்துகொண்ட காட்சியைக் காட்டும் சிலப்பதிகாரம்கூட தாலி கட்டிய காட்சியைக் காட்டவில்லை. கோவலன் கொலை செய்யப்பட்டதை அறிந்த கண்ணகி தாலியை அகற்றினாள் எனப் பாடவும் இல்லை. வளையல்களை உடைத்தாள் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

ஆனால் தாலி மங்கல மகளிர் இழக்கக் கூடாத ஒன்று எனும் பொருளில் கந்தபுராணம் மட்டுமே முதலில் கூறியுள்ளது. திருப்பாற்கடலை (உலக வரைபடத்தில் அப்படியொரு கடல் இருக்காது _ புராணப் புளுகில் இதுவும் ஒன்று) தேவரும் அசுரரும் கடைந்தபோது எழுந்த ஆலகால விஷத்தைச் சிவன் உண்டதால் பிரம்மன், திருமால் முதலிய தேவர்களின் உயிரைக் காப்பாற்றினான் என்றும் அதன்மூலம் தேவர்களின் மனைவியரின் தாலிகளைக் காப்பாற்றினான் என்றும் பாடல் உள்ளது.

செற்றால முயிரனைத்தும் உண்டிடவே
நிமிர்ந்தெழலும் சிந்தை மேற்கொள்
பற்றாலங்கது நுகர்ந்து நான்முகனே
முதலோர் தம்பாவை மார்கள்
பொற்றாலி தனையளித்தோன் புகழ்போற்றி

என்பது பாடல். இதனால்தான் இந்தப் புளுகு கந்த புராணத்திலும் இல்லை என்கிற சொல்லடை உண்டானதுவோ?

ராம காதையைப் பாடிய கம்பன் இறந்தபோது பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருப்ப நாமடந்தை நூலிழந்த நாள் என்று ஒட்டக்கூத்தர் எனும் புலவர் பாடியதாகப் பாடல் ஒன்று உண்டு. கொண்டவன் இறந்தால் மகளிர் இழக்க வேண்டியது இழை என்றுதான் இப்பாடலும் குறிக்கிறது.

மாறாக, அபிதான சிந்தாமணி கூறுகிறது. திருமணத்தில் கொண்டோன் தெய்வம் வாழ்த்தித் தன் தேச சம்ரட்சணார்த்தம் தன் சந்ததியின் விருத்தியின் பொருட்டும் கொண்ட மனைவியின் கழுத்தில் தேவரிஷிகள் புரோகிதர் முதலியோர் சாட்சியாகக் கட்டும் அடையாளமாம்.

இதற்குத் தாலி என்பது முற்கால, தற்கால வழக்கம். இந்தத் தாலியைச் செல்வமுள்ளோர் பொன் முதலியவற்றாலும் மற்றவற்றாலும் செய்து அணிவர். செல்வமில்லா ஏழைகள் மரத்தாலும் ஓலையாலும் செய்து அணிவர்.

இதனைத் தாலபத்திரம் என்னும் ஓலையால் பலர் அணிதல் பற்றியே இதற்குத் தாலி என்று காரணப் பெயர் உண்டாயிற்று. மரத்தாலியும் உண்டாயிற்று போலும்.

இது வடநாட்டில் தற்காலம் சில கீழ் ஜாதியாரிடம் நடைபெறுகிறது. இதன் உரு, தேசங்கள் தோறும் ஜாதிகள்தோறும் வேறுபடுகிறது. இத்தாலி, பலவற்றால் செய்யப்படும் என்பதை ஸ்வர்ணேன ரஜதேனை வாதாம் ரேணதா ருஜைரபிஅதலா தால பத்ரேவா பவுஞ்ச சதுஸ்ரகம் எனும் ஸ்ரீஉத்தர காரண வாக்கியத்தால் அறிக. இதனைப் பதினாறு இழைகள் கொண்ட சூத்திரத்தில் கோக்க வேண்டும் என்பது. (பக்கம் 1234)

ஊருக்கு ஊர் வேறுபட்டும் ஜாதிக்கு ஜாதி மாறுபட்டும் காட்சியளிக்கும் தாலி பலவகைப்படும். 1. பெருந்தாலி, 2. சிறுதாலி, 3. தொங்குத்தாலி, 4. பொட்டுத்தாலி, 5. சங்குத்தாலி, 6. ரசத்தாலி, 7. தொப்புத்தாலி, 8. உருண்டைத்தாலி, 9. கருந்தாலி, 10. ஜாகாத்தாலி, 11. இருதாலி, 12. தாலிகட்டி எனப் பட்டியல் நீளும். இதன்னியில், காதுகளில் அணியும் தோடுகூட மங்கல அணியாகக் கருதப்பட்ட நிலையும் இருந்தது. 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரர் இயற்றிய மதுரைக் கலம்பகத்தில்,

நம்பா நினக்குஓலம் முறையோ எனக்கால
நஞ்சுண்டு பித்துண்டு நாம்தேவர் என்பார்
தம்பாவையர்க்கு அன்று காதோலை பாலித்த
தயவாளர்... என்று பாடிப் போகிறார்.

எனவே மலர் அணிந்தும், இழை அணிந்தும், வளை அணிந்தும், தோடு அணிந்தும் தாம் மணமானவர் என்பதை மகளிர் உணர்த்தி இறுதியில் தாலியை அணிந்து அதனை இசகுபிசகான இடத்தில் தொங்கவிட்டு அதைத் துருவிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற நிலைக்குக் கொண்டு வந்துள்ளதைக் கவனிக்க வேண்டும்.

இந்த நிலை தமிழ் மகளிர்க்கு மட்டுமே! தமிழ்நாட்டு மகளிர்க்கு மட்டுமே! வடநாட்டுப் பெண்கள் தாலி அணி-வதில்லை.

அவர்கட்குத் தாலி கட்டுவ-தில்லை. நெற்றிக் குங்குமம் மட்டுமே அடையாளம். பார்த்தாலே தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.

திருமணம் செய்துகொள்ளும் வரை அவர்கள் பொட்டு வைப்பதில்லை. வடநாட்டில் இல்லாதது தமிழ்நாட்டில் மட்டும் எப்படி வந்தது? தமிழர் திருமணத்தில் மட்டும் எப்படிப் புகுந்தது?

mercredi 21 janvier 2015

பிரெஞ்சு அடிவருடிகளான அல்ஜீரிய ஒட்டுக் குழுவினரின் கதை

"ஹார்கிஸ்": இவர்கள் யார் என்று தெரியுமா? தெரியாவிட்டால் ஒரு புலி ஆதரவாளரிடம் கேட்டுப் பாருங்கள். "ஒட்டுக்குழு" என்று பதில் சொல்வார். அல்ஜீரிய விடுதலைப் போரை நசுக்குவதற்காக, பிரெஞ்சு பேரினவாத அரசு பயன்படுத்திய துணைப் படையின் பெயர் தான் ஹார்கிஸ். அல்ஜீரியாவில் அவர்களின் பெயர் "ஒட்டுக் குழு!" 

அதாவது, எஜமான விசுவாசம் காரணமாக பிரான்சுக்கு சேவை செய்த அல்ஜீரிய துணைப் படையினர். விடுதலைக்காக போராடிய அல்ஜீரிய மக்களின் பார்வையில்: "இனத் துரோகிகள்". பிரெஞ்சு இராணுவம், தமது சொந்த இன மக்களை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்த நேரத்திலும், ஹார்கி ஒட்டுக் குழுவினர் எஜமானனின் காலை நக்கிக் கொண்டிருந்தனர்.
சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸில், பிரெஞ்சு பேரினவாத அரசுக்கு அடிவருடும் தமிழ் ஒட்டுக் குழுக்கள் பெருகி விட்டன. பிரெஞ்சு ஏகாதிபத்திய எஜமான் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக, தாங்களும் வெள்ளையர்கள் போன்று பாவனை செய்து கொள்கின்றனர். 
"பிரெஞ்சுக் கனவான்கள் தமிழர்களின் "உண்மையான" நண்பர்கள்... பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்... பிரெஞ்சு அரசுக்கு விசுவாசமாக சேவை செய்து நற்பெயரை சம்பாதிக்க வேண்டும்..." என்று, அடிமைகள் போன்று எஜமான விசுவாசம் காட்டும் இவர்கள், ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
சிறிலங்காவும், ஈழமும் தமிழ் தேசியவாதிகளினால் இரண்டு தேசங்களாக கருதப் படுகின்றன."சிங்கள சிறிலங்கா, தமிழீழப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது..." என்று அவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அல்ஜீரியா உண்மையிலேயே, நூறு வருடங்களுக்கும் மேலாக, பிரான்சின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டு வந்தது. 

அதன் அர்த்தம், குறைந்த பட்சம் காகிதத்திலாவது, அல்ஜீரியர்களும் பிரெஞ்சுப் பிரஜைகளாக கருதப் பட்டனர். ஆனால், இரண்டாந்தர பிரஜைகளாக உரிமைகள் இன்றி அடக்கப் பட்டனர். "பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்" என்று, இன்றைக்கு நேற்று பிரான்சுக்கு வந்த தமிழ் அடிவருடிகள் கனவு காண்கின்றனர். பிரான்சில் வாழும் அல்ஜீரியர்கள், கடந்த 150 வருடங்களாக, பிரெஞ்சு மொழியை சரளமாகப் பேசிக் கொண்டிருக்கும், பிரெஞ்சு பிரஜைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அல்ஜீரிய- முஸ்லிம் போர் வீரர்கள், பிரெஞ்சு இராணுவத்தில் சேவை செய்வது, ஏற்கனவே பல வருட காலமாக நடந்து வந்துள்ளது. பிரான்சின் காலனியப் போர்களிலும், அல்ஜீரிய வீரர்கள் போரிட்டுள்ளனர். ஆசியாவில் பிரெஞ்சுச் காலனியாகவிருந்த, வியட்நாம், கம்போடியாவில் நடந்த போர்களிலும் ஏராளமான அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள்.

ஐரோப்பாவில் நடந்த முதலாம் உலகப் போரில் மட்டும், கிட்டத் தட்ட ஒரு இலட்சம் அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள். இரண்டாம் உலகப் போரிலும் பல்லாயிரக் கணக்கான அல்ஜீரிய வீரர்கள், பிரான்சின் விடுதலைக்காக மரணத்தை தழுவியுள்ளனர். உண்மையில், பல இலட்சம் அல்ஜீரிய படையினரின் உயிர்த் தியாகம், இரண்டு உலகப் போர்களிலும் பிரான்சின் வெற்றியை தீர்மானித்தது.

தமிழீழம் போன்று, அல்ஜீரியா பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை எழுந்த பின்னர் தான், ஹார்கிஸ் ஒட்டுக்குழு உருவானது. ஏனெனில், அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானதும், அல்ஜீரிய வீரர்கள் ஏதாவது ஒரு பக்கத்தை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல முன்னாள் பிரஞ்சுப் படை வீரர்கள், FLN விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டனர். 

FLN (Front de Liberation Nationale) தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் போன்று ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும். ஈழத்தில் தோன்றிய தமிழ் தேசிய அலை காரணமாக, தமிழர்கள் புலிகளை ஆதரித்தது போன்று, அல்ஜீரியாவில் உருவான அல்ஜீரிய தேசிய அலை காரணமாக, அரேபியர்கள் FLN இயக்கத்தை பெருமளவில் ஆதரித்தனர்.

அதனால், பிரான்ஸ் தனக்கு விசுவாசமான ஒட்டுக்குழுவை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. அது தான் ஹார்கிஸ். ஆரம்பத்தில், பிரான்சுக்கு விசுவாசமான ஊர்க்காவல் படையாக அது தோன்றியது. பின்னர், பிரெஞ்சு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப் படை ஆகியது.

இன்றைக்கு பிரான்சில் வாழும் பல தமிழர்கள் தம்மையும், பிரெஞ்சு வெள்ளையராக பாவனை செய்து கொள்வதைப் போன்று, அன்றைக்கு பல அல்ஜீரியர்கள் தம்மையும் பிரெஞ்சு வெள்ளையர் என்று கருதிக் கொண்டனர். அப்படியானவர்கள் எஜமான விசுவாசம் காரணமாக ஹார்கிஸ் படையில் சேர்ந்து கொண்டனர்.

ஹார்கி வீரர்கள் பல தரப் பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள். பலர் பரம்பரை பரம்பரையாக பிரெஞ்சு எஜமானுக்கு சேவை செய்து சலுகைகளை அனுபவித்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். இருப்பினும், FLN பழிவாங்கல் நடவடிக்கைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் (ஈபிடிபி போன்றவர்கள்), FLN இயக்கத்தினுள் முரண்பட்டு பிரிந்தவர்கள்(கருணா குழு போன்றவர்கள்), போன்றவர்களும் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவில் சேர்ந்து கொண்டனர்.

பிரான்சில் இருந்து அல்ஜீரியா சுதந்திரம் அடைந்ததும், பிரெஞ்சு அரசுக்கு ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் தேவை இருக்கவில்லை. அதனால், பிரெஞ்சு இராணுவத் தளபதிகள் ஹார்கிஸ் படையினரிடம் இருந்த ஆயுதங்களை திருப்பி வாங்கிக் கொண்டு, அல்ஜீரியாவில் தவிக்க விட்டு ஓடி விட்டனர். அல்ஜீரியாவில் முன்பிருந்த பிரெஞ்சு குடியேற்றங்களில் (ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் மாதிரி) இருந்து வெளியேறிய பல இலட்சம் வெள்ளையின பிரெஞ்சுக் காரர்கள் மட்டுமே பிரான்சினுள் அனுமதிக்கப் பட்டனர். 

தங்களையும் நாயகர்கள் போன்று வரவேற்பார்கள் என்றெண்ணி, பிரான்சுக்கு சென்ற ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவர்களை வரவேற்க யாரும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, வருடக் கணக்காக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டனர். அவர்கள் பிரஞ்சு அரசினால் புறக்கணிக்கப் பட்டார்கள். தற்போது, பிரெஞ்சு சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்ந்த போதிலும், பிரெஞ்சு தேசத்திற்காக அவர்கள் புரிந்த தியாகம் உதாசீனப் படுத்தப் படுகின்றது.

அதே நேரம், அல்ஜீரியாவில் தங்கி விட்ட ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெற்றி மமதையில் இருந்த FLN போராளிகளினால் கொல்லப் பட்டனர். மக்களுக்கு முன்னிலையில் மானபங்கப் படுத்தப் பட்டனர். சித்திரவதை செய்யப் பட்டனர். சில இடங்களில், பிரெஞ்சு அடக்குமுறையினால் ஆத்திரமுற்ற பொது மக்களே, முன்னாள் ஹார்கிகளை அடித்துக் கொன்றனர். 

ஆயிரக் கணக்கான ஹார்கி படையினர், முன்பு பிரெஞ்சு அரசு அவர்களுக்கு வழங்கி இருந்த, வீரப் பதங்கங்களை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர். அல்ஜீரியா முழுவதும், மொத்தம் ஒரு இலட்சம் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப் படுகின்றது.

அல்ஜீரியா விடுதலைப் போராட்ட கால கட்டத்தின் போது, பிரெஞ்சுப் படையினரால் கொல்லப் பட்ட அல்ஜீரிய மக்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்திற்கும் அதிகமாகும். ஹார்கி அல்ஜீரியர்களே, தமது சொந்த இனத்தவரை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. சித்திரவதைகள் போன்ற மனித உரிமை மீறல்களிலும், போர்க் குற்றங்களிலும், பிரெஞ்சுப் படையினருடன் ஹார்க்கி ஒட்டுக்குழுவினரும் பங்கெடுத்துள்ளனர். 

அன்று அல்ஜீரியாவில் நடந்த போரில், பல இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்க் குற்றங்கள் அல்லது இனப்படுகொலை என்று நிரூபிக்கத் தக்கன. அந்த நேரம், ஐ.நா. மன்றம் அவற்றை விசாரிக்கவில்லை. ஏனென்றால், பிரான்ஸ் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட மேற்கத்திய வல்லரசு நாடு.

இன்றைக்கு, பிரெஞ்சு பேரினவாத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும், தமிழ் ஒட்டுக் குழுவினர், ஹார்கி ஒட்டுக்குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஒரு காலத்தில் தமிழ் மக்கள் அவர்களை துரோகிகள் என்று ஒதுக்கும் பொழுது, அல்லது பிரெஞ்சு அரசு தனது தேவை முடிந்தவுடன் கை விடும் நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.
மேலதிக தகவல்களுக்கு:
Harkis, les oubliés de la guerre d'Algérie           ..........நன்றி கலையகம்

200 மில்லியன் டாலர்கள் - ஐஎஸ்ஐஎஸ் கெடு.ஜப்பானிய கைதிகளை விடுவிக்க

அரபு நாடுகளான ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் சில பகுதிகளைக் கைப்பற்றி ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர் இஸ்லாமிய நாடாக அறிவித்து வருகிறது. மறுபுறம், அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் சேர்ந்து கொண்டு ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
 இதனால் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தினர், போரில் ஈடுபடும் நாடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் வண்ணம் பிணைக் கைதிகளின் தலைகளை துண்டித்து கொன்று வருகின்றனர். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கெதிரான நடவடிக்கைக்கு ஜப்பான் 200 மில்லியன் டாலர்களை நிதி உதவியாக அளிப்பதாக அறிவித்திருந்தார்.
எனவே, ஜப்பான் நாட்டிற்கு மிரட்டல் விடுக்கும் விதமாக கெஞ்சி கோட்டூ, ஹாருணா யுக்கவா என்ற 2 பேரை அவர்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர்.
 
பிணையக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளவர்களின் காணொளியை வெளியிட்டுள்ள ஐஎஸ்ஐஎஸ், அதில், “எங்களுக்கு எதிராக மேற்கத்திய நாடுகளுடன் ஜப்பான் சேர்ந்துள்ளதால், ஜப்பானியர்களை குறி வைத்துள்ளோம். எங்கள் பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல, நீங்கள் 100 மில்லியன் டாலர் கொடுத்துள்ளீர்கள்.
ஐஎஸ்ஐஎஸ் போராளிகளுக்கு எதிரான முட்டாள் தனமான இராணுவத் தாக்குதல்களை நிறுத்துவதற்கு இந்த ஜப்பானியர்கள் அவர்களது அரசை நிர்ப்பந்திக்க 72 மணிநேரம் தருகிறோம். அதற்குள் 200 மில்லியன் டாலர் தர வேண்டும்.
இதற்கு நீங்கள்தான் நெருக்கடி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த கத்தி உங்களின் தூக்கத்தை கெடுக்கும்” என்று கூறியுள்ளனர்.
 
விடுவிக்க பிரதமர் கோரிக்கை:
 
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள ஜப்பானியர்கள் இரண்டு பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே வலியுறுத்தியுள்ளார்.
 இது குறித்து பேசிய ஜப்பான் பிரதமர், “அவர்கள் பாதிக்கப்படக் கூடாது, எனவே அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நான் உறுதியாக வலியுறுத்துகிறேன்,” என்று ஜெருசேலத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

பீர் குடித்தால் மாரடைப்பு வருவதை தடுக்கலாம்: மருத்துவ ஆய்வில் தகவல்

குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு, மது வீட்டிற்கு நாட்டிற்கு கேடு, இவைஅனைவருக்கும் தெரியும். ஆனால் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், தினசரி பீர் குடித்தால் மாரடைப்பை தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..அமெரிக்காவில் பேராசிரியர் ஸ்காட் சாலமன் தலைமையில் ஹர்வர்டு மருத்துவ கல்லூரி குழுவினர் பீர் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள்  பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.
அமெரிக்காவில் 45 முதல் 64 வயதுக்குப்பட்ட 14,629 பேரிடம், தினமும் 350 மி.லி அளவு பீர் கொடுத்து சாப்பிட செய்தனர். இந்த பரிசோதனை முயற்சி தொடர்பாக அவர்களிடம் கடந்த 1987 மற்றும் 1989-ம் ஆண்டுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர்களிடம் 2011-ம் ஆண்டிலும் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் டீ குடிப்பவர்களை விட பீர் குடிப்பவர்களில் ஆண்களில் 20 சதவீதம் பேருக்கும், பெண்களில் 16 சதவீத பேருக்கும் குறைவாகவே மாரடைப்பு ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனை மருத்துவ குழுவினர் உறுதிசெய்துள்ளனர்

இலங்கையர் அகதிகளாக வாழக் கூடாது உலகின் எந்த மூலையில் இருந்தாளும் நாடு திரும்புங்கள்

இந்தியாவிலுள்ள அகதிகள் தாயகம் திரும்புங்கள்’
Mangala-Samaraweera“இலங்கையர்கள் உலகின் எந்தவொரு பகுதியிலும் அகதிகளாக இருக்கக் கூடாது. எனவே மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்பி வாருங்கள்” என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்தியாவில் வேண்டு கோள் விடுத்தார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற் கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இந்திய ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே மேற்படி வேண்டுகோளை விடுத்தார். ‘சகல இன மக்களினதும் வாக்குகளுடன் உண்மையான அரசாங்கம் இலங்கையில் தற்போது ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், உலகின் எந்தவொரு பகுதியிலும் இலங்கையர்கள் அகதிகளாக இருக்கக் கூடாது. தயவு செய்து தாய்நாட்டிற்கு வாருங்கள்.

உங்கள் அனைவரையும் வரவேற்பதற்காக திறந்த மனதுடன் நாம் நேசக்கரம் நீட்டுகின்றோம்’ என்றும் அமைச்சர் சமரவீர கூறினார்.

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு புதுடில்லி சென்றிருந்த அமைச்சர் மங்கள சமரவீர இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி. வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தவால், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் ஆகியோரையம் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரை இலங்கை வருமாறு அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த அழைப்பினை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

அதேநேரம், இச்சந்தர்ப்பத்தில் இரு வெளிவிவகார அமைச்சுக்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்கால இந்திய விஜயம் குறித்தும் ஆராய்ந்தனர்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி 1987 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர் 27 வருடங் களுக்குப் பிறகு இலங்கை வரவுள்ள இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி விளங்குவாரென எதிர்பார்க்கப் படுகிறது.

அமைச்சர் மங்கள சமரவீர, வெளி விவகார அமைச்சின் பதவிகளை பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

இலங்கை - இந்திய நாடுகளுக்கிடையேயான உறவை பலப்படுத்தும் நோக்கிலேயே நல்லெண்ண அடிப்படையில் இந்த விஜயம் அமைந்தது.

dimanche 18 janvier 2015

ஆயுதம்.பணம், தங்கம், கப்பல்கள் கே.பி.க்கு எதிராக வழக்கு ஜேவிபி

விடுதலைப் புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு, தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கையின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குமரன் பத்மநாதனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜேவிபி என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.
ராஜீவ் கொலை விசாரணைக்காக இந்தியாவின் சிபிஐ இண்டர்போலின் உதவியை கோரியுள்ளது (கோப்புப் படம்)
யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் என்று தன்னை அறிவித்துக் கொண்ட குமரன் பத்மநாதன் மீது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற ரீதியில் அவர் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது.
'(கே.பி. மீது குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையிலும்) எந்தவிதமான விசாரணைகளும் இன்றி, எந்தவிமான சட்டநடவடிக்கைகளும் இன்றி அவர் இன்று கிளிநொச்சியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றார்' என்றார் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
'பணம், தங்கம், கப்பல்கள் அனைத்தையும் மகிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் கே.பி.யும் சேர்ந்து பகிர்ந்துகொண்டார்களா என்கின்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது' என்றார் ராமலிங்கம் சந்திரசேகரன்.
விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் புனர்வாழ்வு பெற்று சிவில் வாழ்க்கையில் இணைந்துகொண்டிருப்பதை வரவேற்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.
ஆனால் கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் எந்தவிதமான புனர்வாழ்வு நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்படவில்லை என்றும் சந்திரசேகரன் தெரிவித்தார்.
கே.பி.-யின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் விபரம் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக விளக்கம் கோரப்படும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுக்கின்ற வழக்கு நடவடிக்கை தொடர்பில் குமரன் பத்மநாதனுடன் தமிழோசை தொடர்புகொண்டு கேட்டபோது, அதுபற்றி தற்போது கருத்துக்கூற முடியாது என்று கூறிவிட்டார்.

எழுத்தாளர் பெருமாள் முருகனிடம் போலீசார் நடத்திய கட்டப்பஞ்சாயத்து

எழுத்தாளர் பெருமாள் முருகனை பலவந்தப்படுத்தி நாமக்கல்லை விட்டு வெளியேறுமாறு செய்ததது அந்த மாவட்டத்தின் போலீசாரே என்று எழுத்தாளரின் வழக்கறிஞர் ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளர்ர்.சில நாட்களுக்கு முன்னதாக `மாதொருபாகன்’ என்ற நாவல் எழுதியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகன் சாதி ஆதிக்க அமைப்புகளினாலும் ஆர்எஸ்எஸ் மதவெறி அமைப்புகளினாலும் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டு, அவர் எழுதிய நாவல்களை திரும்ப பெறுமாறு நிர்பந்திக்கப்பட்டார்.
இது மாவட்ட நிர்வாகத்தின் முன்பாகவே பேச்சுவார்த்தை என்ற பெயரில் நடந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் நாமக்கல் ஊரை விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியேறிச் சென்று விட்டார். பின்னர் அவர் தான் எழுதுவதைநிறுத்தப்போவதாகவும் தனது நாவல்களை திரும்ப போவதாகவும் தனக்குள் இருக்கும் எழுத்தாளர் இறந்து விட்டதாகவும் மனம் நொந்து அறிவிப்பு வெளியிட்டார். ஒரு எழுத்தாளர் இப்படிப்பட்ட முறையில்
நிர்பந்திக்கப்பட்டு எழுதுவதையே நிறுத்தும் படி செய்வதும் ஊரைவிட்டு விரட்டியடிப்பதற்கும் தமிழகம் முழுவதும் கண்டனம் எழுந்தன.
இது தொடர்பாக பெருமாள்முருகன் மாவட்ட நிர்வாகத்துடன்பேச்சுவார்த்தை நடத்தச்சென்றபோது அவரது வழக்கறிஞர் ஜி.ஆர். சுவாமிநாதன் நடந்த விஷயங்களை அறிக்கையாக பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ளார்.. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது;12ம்தேதியன்று மாவட்ட ஆட்சித்தலைவருடன் பேச்சுவார்த்தைக்கு செல்ல என் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றோம். நாமக்கல் செல்லும் வழியிலேயே அப்பகுதி போலீசார்,
மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலகத்திற்கு நேரடியாக வர வேண்டாம் எனறும்வீட்டில் இருங்கள் நாங்கள் அழைத்துச் செல்கிறோம் என்று கூறினர். செல்லும்வழியில் போலீசார் மிரட்டினார்களாக என்று தொடர்ந்து கேள்விகேட்டதற்கு அவர் மிகுந்த தயக்கத்திற்கு பின்னர் தான் ஊரை விட்டு வெளியேறி இருப்பது நல்லது என்று போலீசார் கூறியதாக பெருமாள் முருகன் கூறினார். அதன்படி அவர்வீட்டில் இருந்தபோது அவரை போலீசார் அழைத்துச் செல்வதாக இருந்தது. ஆனால் பெருமாள் முருகனுடன் நானும் வருவேன் என்று வற்புறுத்தியதால் வேறுவழியின்றி என்னையும் அழைத்துச் சென்றனர்.
முன்னதாக அவருடைய மாணவர் களும் வருவதாக இருந்தது ஆனால் இவ்விவகாரத்தில மாணவர்கள் ஈடுபட வேண்டாம் என்று பெருமாள் முருகன் தவிர்த்து விடடார். மாலை 5 மணிக்கு நாங்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு போய்ச் சேர்ந்தோம் நாங்கள் பின்வழியாக அலுவலகத்திறகுள் வரவேண்டும் என்று கூறப்பட்டது. அங்கு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரியின் உதவி யாளர் அறைக்கு கூட்டிச் செல்லப் பட்டோம். அந்த அறையில் பெரு மாள் முருகனை போலீஸ் காவலர்கள் சூழ்ந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
.பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட வருவாய்த்துறை பெண் அதிகாரி பெருமாள் முரு கனை எதிர்த்து போராட்டம் நடத் தியவர்களுடன் நேரடியாக சந்திக்க ஏற்பாடு செய்திருக்கவில்லை. அவர் களை தனியே சந்தித்து அந்த அதி காரி பேசினார். பெருமாள் முருகன் பிரச்ச னையை வளர்க்க வேண்டாம் என்று விரும்பியதால் அவர் ஏற்கன வே இரண்டு அறிக்கைகளை விட்டிருந் தார். அந்த அறிக்கைகளை சுருக்கி என்னுடைய கையெழுத்தில் எழுதி தந்தேன் அதில் பெருமாள் முருகன்கையெழுத்திட்டிருந்தார். அதில்வருத்தம் தெரிவிப்பதாக கூறியிருந்தார். ஆனால் அந்த வருவாய்த்துறை அதிகாரி அது போதாது என்று கூறி அதை நிபந்தனையற்ற மன்னிப்பு என்று மாற்றச்செய்தார். அதை பெருமாள் முருகனும் நானும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவர் மிகுந்த வேதனைக்குள்ளானார்.
பின்னர் அதையும் அவர் ஏற்றுக்கொண்டு அதன் படி நிபந்தனையற்ற மன்னிப்பு என்று மாற்றி கொடுத்தார். பிரச்சனை அத்தோடு முடிந்துவிடும் என்றிருந்தோம் அந்த அதிகாரி அடுத்த அறையில் காத்திருக்க கூறினார் 15 நிமிடங்கள் கழித்து மீண்டும் நாங்கள் அறைக்கு அழைக்கப்பட்டோம். அந்தஅதிகாரி பெருமாள் முருகன் முன்னதாக அளித்த அறிக்கையின் நகலை வைத்துக் கொண்டு நாவலிலுள்ள சில பகுதிகளை நீக்கச் சொன்னார் விற்கப்படாத பிரதிகளை மீண்டும் எழுத்தாளரை திரும்பி எடுத்து கொள்ளக் கூறினார்.
அப்போது பெருமாள் முருகன் அவருக்கு எதிராக நடைபெற்ற முழுஅடைப்பின் நிர்பந்தத்தின் காரணமாக அவ்வாறு அந்த அறிக்கையில் கூறிடுவதற்கு தள்ளப்பட்டார் என்று நான்கூறினேன். ஆனால் அதையெல்லாம் யாரும் அங்கு பொருட்படுத்தவில்லை.மாவட்ட நிர்வாகமும் போலீசாரும் அவர்கள் கூறிய நிபந்தனைகளில் உறுதியாக இருந்தனர். இதனால் மிகவும் மனம் நொந்த பெருமாள் முருகன் எதையும் எழுதிக் கொள்ளுங்கள் எதையும் செய்து கொள்ளுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று மனமுடைந்த நிலையில் கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் நான் அந்த அதிகாரியிடம் எழுத்தாளரின் படைப்புச்சுதந்திரம் என்றகண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் அத்ற்க அந்த அதிகாரி நீங்கள் ஒரு வழக்கறிஞர் நீங்கள் பாட்டுக்குகூறி விட்டு போய் விடுவீர்கள் அதற்கு பின்னர் இந்த ஊரில்தான் பெருமாள் முருகன் இருக்க வேண்டும் என்று குரலை உயர்த்திக் கூறினார். நான் அவரிடம் எதற்கு குரலை உயர்த்தி பேசுகிறீர்கள் என்று கேட்டதற்கு என்னை வெளியே போங்கள் என்று கூறி விட்டார். இந்த நிகழ்வுகள் முழுவதும் பெருமாள் முருகனுக்கு போலீசார் எந்த ஆதரவும் காட்டவில்லை. மாவட்ட நிர்வாகமும் முழுமையாக அவரை கைவிட்டுவிட்டது. அவர்களை பொருத்தவரை இது சட்ட ஒழுங்கு பிரச்சனை மட்டுமே. அரசியல் சட்டத்திலுள்ள பிரிவு 19(1)(ஏ) வலியுறுத்தும்படைப்புச்சுதந்திரம் என்பதுஅவர்கள் பொருட்படுத்தப்படக்கூடியதாகவே இல்லை. போலீசாரே அவரை ஊரை விட்டு வெளியேறச் சொல்வதும் மாவட்ட நிர்வாகம் அவருக்கு ஆதரவாக நிற்கவில்லை என்பதும் ஒரு வேதனை தரக்கூடிய விசயமாக உள்ளது. இவ்வாறு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இன்று உலகின் தலைநகரமாகிவிட்டது பாரீஸ்

paris_22‘‘வாள்முனையைவிடப் பேனா வலியது’’ என்பார்கள்.துப்பாக்கியைவிட வலியதா? இதுதான் பாரீஸின் தற்போதைய தலைப்புச் செய்தி.
paris_2பிரான்ஸ் நாட்டின் ‘தலை’யான பாரீஸ் மிகப் பெரிய நகரம். இங்கு வசிப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 23 லட்சம். மொத்த பிரான்ஸில் சுமார் 19 சதவீதம் பேர் பாரீஸில் வசிக்கிறார்கள். பிரான்ஸின் இரண்டாவது பெரிய நகரம் மார்ஸெய்லெஸ் இது பாரீஸின் அளவில் மூன்றில் ஒரு பங்குகூட இல்லை.
நாட்டின் நிர்வாக, வணிக, கலாச்சார மையம் பாரீஸ்தான். பாரீஸ் தும்மினால் பிரான்ஸுக்கு ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும் என்பார்கள். ’இன்று உலகின் தலைநகரமாகிவிட்டது பாரீஸ்’’ என்கிறார் அதன் அதிபர் பிரான்கோயிஸ் ஹோலாந்த். கொஞ்சம் சோகமாகத்தான் இதைச் சொல்ல வேண்டிய சூழல்.
france_228நீங்கள் ஏதோ ஒரு வேற்று கிரகத்துக்கு பத்து நாட்கள் சென்று வந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அந்தப் பத்து நாட்களில் செய்தித் தாள் எதையும் படிக்கவில்லை. (அட, இது யாரையோ நினைவு படுத்துகிறதே!) இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட நகருக்கு கீழே உள்ள வி.ஐ.பிக்கள் விஜயம் செய்கிறார்கள் என்று தெரிய வருகிறது. உங்கள் யூகம் என்னவாக இருக்கும்?
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் அப்பாஸ், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோப், நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஸ்டோல்டென் பெர்க், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா – பட்டியல் முடியவில்லை. இத்தாலி, போர்ச்சுக்கல், ஸ்பெயின், மேற்கு ஆப்ரிக்கா போன்ற பல நாடுகளின் முக்கியப் பிரதிநிதிகளும் பங்கேற்றிருக்கிறார்கள் என்றால் அந்த நிகழ்வு எதுவாக இருக்கும் என்று நினைப்பீர்கள்?
ஒரு நாட்டின் தலைவர் இறந்திருப்பார். அதற்கு அஞ்சலி செலுத்ததான் அந்த நாட்டின் தலைநகருக்கு இத்தனை பேரும் வந்திருப்பார்கள் என்பதுதான் உங்கள் பதிலா? உங்கள் பதிலில் பாதி சரி. இறந்தது நாட்டுத் தலைவர் அல்ல. பத்திரிகையாளர்கள்.
பாரீஸில் நடைபெற்ற அஞ்சலி ஊர்வலத்தில் மேற்படி வி.ஐ.பி.க் களுடன் பொது மக்களும் லட்சக் கணக்கில் திரண்டு வந்திருந்தனர். மேற்கு ஐரோப்பாவில் உள்ள தேசம் பிரான்ஸ். இத்தாலி மற்றும் ஜெர்மனிக்கு மேற்கில் ஸ்பெயினுக்கு வடகிழக்கே அமைந்த நாடு. மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு. இங்கு பாயும் ரைன் நதி அட்லாண்டிக் கடலில் கலக்கிறது.
பாரீஸிலிருந்து வெளியாகும் சார்லி ஹெப்டோ என்ற வார இதழின் ஆசிரியரும் அங்கு பணியாற்றிய வேறு பலரும் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அல்கொய்தா அமைப்பு இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறது.
சார்லி ஹெப்டோ கிண்டலுக்கும் கேலிக்கும் புகழ் பெற்ற ஒரு வார இதழ். (ஹெப்டோ என்றால் வார இதழ் என்று அர்த்தம்). இடதுசாரிப் பார்வை கொண்டது. கிறிஸ்தவம், இஸ்லாம், ஜூடாயிசம் என்று சகட்டுமேனிக்கு எல்லா மதங்கள் மற்றும் பிரபல அரசியல் தலைவர்களையும் அங்கதம் செய்தது இந்த வார இதழ். இஸ்லாமை மட்டுமல்ல கிறிஸ்தவத்தையும் இந்த இதழ் கடுமையாக, நகைச்சுவையாக விமர்சிக்கத் தவறியதில்லை.
பல வருடங்களுக்கு முன் நபிகள் நாயகத்தைப் பற்றி வெளி யிட்ட கார்ட்டூன்களுக்காக தீவிர வாதிகள் 2011-ல் இந்த இதழின் அலுவலகத்தின் மீது வெடி குண்டுகளை வீசினார்கள். அந்த இதழின் இணையதளம் முடக்கப்பட்டது. சார்லி ஹெப்டோ தொடர்ந்து தான் வந்த அதே பாதையில் நடந்தது. (‘பட்டும் திருந்தவில்லை’ என்பதோ ‘அஞ்சாத மனப்போக்கு’ என்பதோ அவரவர் கோணத்தைப் பொறுத்தது).
அல்-காய்தா தீவிரவாதி களுக்கு அதிக எரிச்சலை அளித் திருக்கக்கூடும் என்று கூறப்படுவது 2011 நவம்பரில் வெளிவந்த இதழ். ‘’ஷரியா ஹெப்டோ’’ என்ற தலைப்பில் வெளியானது. ஷரியா என்பது இஸ்லாமியர்களின் ஒரு வகை சட்டம். நபிகள் நாயகம் இந்த இதழின் சிறப்பு ஆசிரியர் என்று குறிப்பிடப்பட்டது. போதாக் குறைக்கு ‘’இதைப் படித்துவிட்டு சிரிக்காவிட்டால் உங்களுக்கு 100 சவுக்கடி’’ என்று அவர் கூறுவதைப் போலவும் ஒரு கார்ட்டூன்!
ஹராகிரி என்பது இந்தப் பத்திரிகையின் பூர்வஜென்மப் பெயர். ஹராகிரி என்பதும் செப்புகு என்பதும் ஒரே அர்த்தத்தைத் தரும் வார்த்தைகள். ‘வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறப்பது’ என்பது இதன் பொருள். ஜப்பானிய சாமுராய் வீரர்கள், தாங்கள் எதிரிகள் கையில் பிடிபடுவோம் என்றால், தங்கள் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்து விடு வார்கள் (இலங்கை விடுதலைப் புலிகள் சயனைட் குப்பியை வாயில் சரித்துக் கொள்வதுபோல).
‘சிரித்து சிரித்து வயிறே வெடித்துவிட்டது’என்கிறோம் அல்லவா, அந்த அர்த்தத்தில் இந்த இதழ் தனக்கான பெயரைச் சூடிக் கொண்டது. ஆனால் அப்போதைய பிரான்ஸ் அதிபரின் மரணத்தையே கேலி செய்ததைத் தொடர்ந்து அது தடை செய்யப்பட்டது. சுமார் பத்து வருடங் களுக்குப் பிறகு அது சார்லி ஹெப்டோவாக மறுவடிவம் எடுத்தது. பழைய இதழில் பணியாற்றியவர்கள் கிட்டத்தட்ட அப்படியே இதிலும்.
இதன் அலுவலகத்துக்குள் ஜனவரி 8 அன்று நுழைந்த மூன்று முகமூடி நபர்கள் கண்மூடித்தன மாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பத்திரிகை ஆசிரியர் உட்பட ஒரு டஜன் பேர் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதலில் குறிப்பிட்ட பிரம்மாண்ட ஊர்வலம் நடத்தப்பட்டது என்பதைவிட, தீவிரவாதத்துக்கு எதிரான ஊர்வலம் இது என்பது மேலும் பொருந்தும்.
இது தவிர மாட்ரிட், நியூயார்க், லண்டன் போன்ற நகரங்களிலும் பெரும் ஊர்வலங்கள் நடந்தன. இந்த நகரங்களில் அல்-காய்தா தீவிரவாதிகள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். பிரான்ஸ் நாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எக்கச்சக்கம். நவீன சிந்தனைகளுக்கு கம்பளம் விரிக்கும் நாடான இது மிகத் தொன்மையான நாடும்கூட!
பிரான்ஸ் பற்றி நீங்கள் கேள் விப்படாமல் இருந்திருக்க முடி யாது. பிரெஞ்சு ஓபன் பந்தயங்கள், நெப்போலியன், ஜோன் ஆஃப் ஆர்க். ‘’பள்ளியில் பிரெஞ்சு மொழியை மூன்றாவது மொழியாகத் தேர்ந்தெடுத்தால் மிக அதிக மதிப்பெண்கள் பெறலாம்’’ என்று ஏதோ ஒருவிதத்தில் பிரான்ஸ் நமக்கு அறிமுகமாகியிருக்கும்.
ஜீன்ஸ் அணிந்தவர்கள் எல்லாம் பிரான்ஸை ஒரு கணமாவது நினைக்க வேண்டும். அங்குள்ள ‘டெனிம்ஸ்’ என்ற இடத்தில்தான் ஜீன்ஸ் அறிமுகமானது. திரைப்பட ரசிகர்கள் ‘கேன்ஸ்’ திரைப்பட விழாவை நினைவு கொள்வார் கள். தவிர, ‘செவாலியே’ சிவாஜி கணேசனை மறக்கலாகுமா?
பிரான்ஸை இன்னமும் அதிகமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தக் காரணங்கள் போதாதா? தவிர, வேறு காரணங்களும் உண்டு.
பாரீஸ் நகருக்குச் செல் பவர்கள் அங்குள்ள லூவர் அருங்காட்சியகத்துக்கு நிச்சயம் செல்வார்கள். அது ஒரு கலைப் பொக்கிஷம். மோனோலிசா ஓவியம்கூட அங்குதான் இருக்கிறது. பிரபல ‘டாவின்ஸி கோட்’ புதினம் இந்த மியூசியத்திலிருந்துதான் தொடங்குகிறது என்றால் சிலருக்குப் புரியக்கூடும்.
உலகின் பல நாடுகளிலிருந்தும் மக்கள் குவியும் இந்த அருங் காட்சியகத்துக்கு போயிருந்த போது ஒரு கடும் ஏமாற்றம் ஏற்பட்டது. ஓர் இடத்தில்கூட ஆங்கில அறிவிப்பு கிடையாது. அந்த அளவுக்குத் தங்கள் மொழி யான பிரெஞ்சு மீது வெறித்தனமான அபிமானம் அவர்களுக்கு. தவிர ஆங்கிலேயர்கள் மீது கொண்ட வரலாற்றுப் பகை இன்னமும் கொஞ்சம் மிச்சம் இருக்கலாம் என்பது கூடுதல் காரணம்.
ஆனால் ரொம்பவும் தொடக்க காலத்தில் பிரான்ஸ் நாட்டின் மொழி பிரெஞ்சு கிடையாது.
இப்போதுள்ள பிரான்ஸ் பகுதியில் அப்போது இருந்த நாட்டின் பெயர் கால் (Gaul – ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ் படித்தவர்களுக்கு இந்த நாடு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்). அப்போது பெல்ஜியம், சுவிட்சர்லாந்து போன்றவைகூட இந்த நாட்டின் பகுதிகளாக இருந்தன. அங்கு பேசப்பட்ட மொழி ஸெல்டிக்.
ரோம சாம்ராஜ்யம் பரந்து விரிந்த காலகட்டம். கால் நாட்டை மட்டும் சும்மா விடுமா? அந்த முழு தேசத்தையுமே தன் பிடிக்குள் கொண்டு வந்தது ரோம். இது நடந்தது கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு.
வேறு வழியில்லாமல் ரோம் மொழி மற்றும் ரோமானிய கலாச்சாரத்துக்கு தங்களை மெல்ல மெல்ல மாற்றிக் கொண்டார்கள் கால் மக்கள்.
ரோமானியர்கள் தங்கள் கைவரிசையை கால் நகரில் காட்டினார்கள் – நல்லவிதத்திலும் தான்! பிரம்மாண்டமான கட்டிடங் களும் அரங்கங்களும் எழும்பின.
பின்னர் சில காட்டுமிராண்டிக் கூட்டங்கள் அவற்றில் பலவற்றை அழித்துவிட்டாலும் இன்னமும் சில அருமையான மிச்சங்களை பிரான்ஸில் காண முடியும். முக்கியமாக மூன்று அடுக்கு கொண்ட நீர்த்தொட்டிகள், ரோன் பள்ளத்தாக்கில் உள்ள பிரம்மாண்ட நாடக அரங்கு, நிமஸ் என்ற இடத்திலுள்ள ஆலயம்.
சில நூற்றாண்டுகள் நகர்ந்தன. மன்னன் குலோவிஸ் என்பவரைத் தலைவராகக் கொண்ட பிராங்க் இனத்தவர் கால் நாட்டை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தார்கள். இந்த பிராங்க் இனத்தவர் ஜெர் மானிய குடிகளில் ஒரு வகையினர்.
பிராங்க் இனத்தவர் அந்தப் பகுதியை ஆக்ரமித்தவுடன் இந்தப் பகுதியை சில சிறிய பகுதிகளாகப் பிரித்தனர். பெயர் மாற்றம் நடைபெற்றது. அவர்கள் பெயர் அல்ல – நாட்டின் பெயர். மேற்குப் பகுதிக்கு ‘பிரான்ஸியா’ என்று பெயரிட்டனர். ஆக, கால் போச்சு பிரான்ஸ் வந்தது.
அப்போதுகூட பிரெஞ்சு அதிகாரபூர்வ மொழி ஆகிவிட வில்லை. ஆனால் கி.பி.1000-ல் பிரான்ஸை ஆண்ட மன்னன் பிரான்ஸியன் என்பவனுக்கு தீவிர மொழிப் பற்று. அவன்தான் பிரெஞ்சு மொழியை குறைந்தபட்சம் உயர் வகுப்பினராவது பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயம் ஆக்கினான். லத்தீனிலிருந்து பலவிதங்களில் மாறுதல் பெற்று புதிய வடிவமாக உருவாகியிருந்தது பிரெஞ்சு. இது பிரான்ஸின் அதிகாரபூர்வ மொழியானது.
கொஞ்ச காலத்துக்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா? ‘வேறு யாராவது அந்த நாட்டின் மீது படையெடுத்திருப்பார்கள்’ என்கிறீர்களா? அதேதான். இந்த முறை அதைச் செய்தது வைகிங் இனத்தவர். பிரான்ஸின் வடக்குப் பகுதி மீது இவர்கள் கண் வைத்தார்கள். வைகிங் இனத்தவர் ஸ்கான்டிநேவியா பகுதியில் வேர்விட்டவர்கள். (நார்வே, ஸ்வீடன், டென்மார்க் ஆகிய மூன்றும் இணைந்ததுதான் ஸ்கான்டிநேவியா).
சமாதானமாகப் போக விரும் பினார் பிரெஞ்சு மன்னன். தன் தேசத்தின் கணிசமான பகுதியை வைகிங் மன்னர்களுக்குக் கொடுத்துவிட்டு வெள்ளைக் கொடியைப் பறக்க விட்டார். அப்படி அளிக்கப்பட்ட பகுதியில் குடியேறியவர்கள் நாளடைவில் நார்மன்ஸ் அல்லது நார்ஸ்மென் என்று அழைக்கப்பட்டது தனிக்கதை.
காலச் சக்கரம் வழக்கம்போல் உருண்டது. 1666-ல் நார்மன் இனத்தைச் சேர்ந்த வில்லியம் என்ற ஒருவர் இங்கிலாந்தை ஆக்கிரமிப்பதற்காக கிளம்பினார். இவர் தனக்கு வைத்துக் கொண்ட பெயர் ‘வில்லியம் தி கான்கோரர்’. அதாவது வென்று கொண்டே இருக்கும் வில்லியம்! அவ்வளவு நம்பிக்கை.
‘’சுற்றி வளைத்துப் பார்த்தால் இங்கிலாந்து மன்னருக்கு நானும் உறவு. எனவே எனக்கும் வாரிசுரிமை இருக்கிறது’’ என்று கிளம்பினார்.
நடைபெற்றது ‘ஹேஸ்டிங்ஸ் யுத்தம்’. இது என்ன புதிதாக ஒரு கதாபாத்திரம் என்று கேட்காதீர்கள். யுத்தம் நடைபெற்ற இடத்தின் பெயர் அது. தன் பெயருக்கேற்ப வில்லியம் ஜெயித்தார். அடுத்த 400 வருடங்களுக்கு இங்கிலாந்தின் ஆட்சி மொழி பிரெஞ்சுதான். இந்த காலகட்டத்தில்தான் ஆங்கில மொழியில் பல பிரெஞ்சு வார்த்தைகள் புகுந்தன அதாவது புகுத்தப்பட்டன.
காலம் தொடர்ந்து நகர்ந்தது. பிரெஞ்சு ராணியான எலியனார் என்பவர் கணவனை விவாகரத்து செய்தது ஒரு வரலாற்றுத் திருப்பமானது. காரணம் அவர் விவாகரத்து செய்த லூயி ஒரு பிரெஞ்சு மன்னன். அவர் மறுமணம் செய்து கொண்ட இரண்டாம் ஹென்றி ஓர் ஆங்கிலேய மன்னன். இதன் காரணமாக, அந்தக் கால நியதிப்படி பிரான்ஸின் கணிசமான பகுதியும் முழு இங்கிலாந்தும் எலியனாருக்கு வந்து சேர்ந்தது. விவாகரத்து காரணமாக வந்தது பிரான்ஸ் பகுதி. மன்னன் ஹென்றி இறந்துவிட அவரிடம் வந்தது இங்கிலாந்து.
தன் மகன் ரிச்சர்டை மன்னனாக்கி விட்டு. ஆலோசகர் என்ற பதவியை ஏற்றார் எலியனார். இந்த ஆட்சியில் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இசைக் கலைஞர்களும், கவிஞர் களும், ஓவியர்களும் ஊக்குவிக்கப் பட்டார்கள். அந்தக் காலத்தில் உருவான இசை ஸ்டைல் இன்றள வும் உரு மாறாமல் இசைக்கப் படுகிறது.
எல்லா நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு வந்து தொலைக்குமே! ஒன்றல்ல இரண்டு பிரச்னைகள் பிரான்ஸை சின்னாபின்னமாக்கின.
1337-ல் தொடங்கி 1451 வரை நடைபெற்றது ‘நூறு வருட யுத்தம்’. (கணிதப் புலிகள் கன்ஃப்யூஸ் ஆக வேண்டாம். நூறைத் தாண்டினாலும் அதன் பெயர் நூறு வருட யுத்தம்தான்). பிரான்ஸ் எல்லைப் பகுதியை தன் பிடிக்குள் கொண்டுவர வேண்டும் என்று வெறித்தனமாக ஆசைப்பட்டது இங்கிலாந்து. பிரான்ஸ் கடுமையாக இதை எதிர்த்து நின்றது. இந்த இரண்டு நாடுகளின் மோதலில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தார்கள். எண்ணிலடங்காத பாதிப்புகள் உண்டாயின. போதாக்குறைக்கு அந்த சமயம் பார்த்து ப்ளேக் நோய் வந்தது. கொள்ளை நோய் என்பதால் இதிலும் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்தனர். பிரான்ஸ் இங்கிலாந்தின் வசப்பட்டது.
கொஞ்சம் விட்டுவிட்டுதான் என்றாலும் ‘கிட்டத்தட்ட’ தொடர்ச்சியாகவே போர்கள் நடந்து கொண்டே இருந்தன. சில குறிப்பிட்ட பகுதிகள் யாருக்குச் சொந்தம் என்பதிலிருந்து வாரிசுரிமை தொடர்பான சிக்கல்கள் வரை பல காரணங்களும் இந்த நூறு வருடப் போர் அணையாமல் தொடர்ந்து எண்ணெய் ஊற்றிக் கொண்டிருந்தன.
பிரான்ஸ் மன்னர்களுக்கு நிதி நிலைமை பிரச்னை இல்லை. மேற்கு ஐரோப்பாவின் மிகுந்த மக்கள் தொகை கொண்ட சக்தி வாய்ந்த நாடு அது. ஒப்பிடும்போது ஆங்கிலேய அரசாங்கம் அளவிலும் குறைவு – மக்கள் தொகையிலும் குறைவு. என்றாலும் ஆங்கில ராணுவம் மிகவும் கட்டுப்பாடு மிக்கதாக இருந்தது. அவர்கள் மிகத் துல்லியமாக அதிகப்படி நீளம் கொண்ட அம்புகளை தொலைதூரத்துக்கு எறிவதில் கில்லாடிகளாக இருந்தார்கள். இதன் காரணமாக பலமுறை அவர்களால் ஜெயிக்க முடிந்தது – கடல் வழித் தாக்குதல், தரைவழித் தாக்குதல் இரண்டிலும்.
சில பகுதிகள் (முக்கியமாக Duchy of Guynne என்ற பகுதி) யாருக்கு என்பதில் யுத்தம் தொடங்குவதும், ஒரு கட்டத்தில் சமாதானத்துக்கு ஒத்துக் கொண்டு பிரான்ஸ் மன்னன் அதை இங்கிலாந்துக்கு அளிப்பதும், பிரான்ஸ் மன்னனின் வாரிசு போரில் வென்று மறுபடியும் அந்தப் பகுதிகளை பிரான்ஸுடன் இணைப்பதுமாக போர் விளையாட்டு தொடர்ந்து கொண்டிருந்தது.
ராணுவ ரீதியாக பலமுறை வெல்ல முடிந்தாலும் இங்கிலாந்தினால் அரசியல் வெற்றிகளை சுவைக்க முடியவில்லை. பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் இங்கிலாந்தின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்தனர். இங்கிலாந்து மன்னன் ஐந்தாம் ஹென்றி பிரான்ஸ் நாட்டை வென்றான். வருங்காலத்தில் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவோ என்னவோ பிரான்ஸ் மன்னனான ஐந்தாம் சார்லஸின் மகளை மணந்து கொண்டு ஒரு மகனுக்கு அப்பா ஆனான். ‘’வருங்காலத்தில் என் மகன்தான் இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் அரசன்’’ என்றபடி கண்களை மூடினான். மறுபடி திறக்கவில்லை.
இந்தக் காலகட்டத்தில்தான் பிரான்ஸ் வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்த ஜோன் ஆஃப் ஆர்க் சிலிர்த்தெழுந்தாள்.பிரான்ஸில் உள்ள ஆர்லியன்ஸ் என்ற பகுதியில் ஒரு கிராமப் பெண்ணாக வளர்ந்தாள் ஜோன் ஆஃப் ஆர்க் என்று பின்னாளில் பிரபலமான அந்த வீராங்கனை. பதிமூன்று வயதிலேயே அவரால் பல தெய்வீக தூதர்களின் குரல்களைக் கேட்க முடிந்ததாம். மைக்கேல், மார்கரெட், கேதரின் போன்ற இறைத் தூதர்கள் இறைவனிடமிருந்து நேரடியாக அவருக்கு செய்திகளை அளித்தனராம்.
தன் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதைக்கூட அந்தக் குரல்கள் கூறின என்றாள் அவள். இங்கிலாந்துக்கு எதிராக 1429-ல் தன் தலைமையில் ஒரு படை புறப்படும் என்றும், அந்தப் போரில் தனக்கு பெரும் காயம் ஏற்படும் என்றும் அவர் கூறியது பின்னாளில் அப்படியே பலித்தது.
“எனக்கென்று ஒரு தெய்வீக வாளை கடவுள் அளித்திருக்கிறார். அது தூய கேதரின் மாதா கோவிலருகே புதைக்கப்பட்டிருக்கிறது. அதில் ஐந்து சிலுவைக் குறிகள் இருக்கும்’’ – இப்படி தனக்கு ஒரு தெய்வீக செய்தி வந்ததாக அவர் கூற, குறிப்பிட்ட இடம் தோண்டப்பட்டது. அங்கே ஒரு துருப்பிடித்த வாள். அதை சுத்தப் படுத்தியபோது, அதில் ஐந்து சிலுவைக் குறிகள் இருந்தன!
நலிவடைந்திருந்த பிரான்ஸை இங்கிலாந்திடமிருந்து மீட்பதற்கு மிகவும் முனைந்தார் ஜோன். தன் வீரத்திலும், பிரச்சாரத்திலும் சிறந்து நின்ற அவரை ஒரு சாகசக் கதாநாயகியாகவே பார்த்தனர் பிரெஞ்சு மக்கள்.
இங்கிலாந்து கடும் கோபம் கொண்டது. பிரான்ஸின்மீது தான் கொண்ட பிடிமானம் ஜோன் காரணமாக நழுவுகிறதே! இதுகூட ஒருவிதத்தில் இயல்பானதுதான். ஆனால் பிரான்ஸின் ஒரு பகுதியான பர்கண்டி என்ற பகுதியை ஆட்சி செய்தவர்களும் ஜோனை வெறுக்கத் தொடங்கியது காலத்தின் கொடுமை.
‘நேற்று பிறந்த ஒருத்தி தங்களைவிட புகழ் பெறுவதா?’ என்ற பொறாமை கொந்தளிக்க ஜோனை ரகசியமாக சிறை பிடித்து ஆங்கிலேயர்களிடம் விற்றுவிட்டார்கள் பர்கண்டி ஆட்சியாளர்கள். பதிலுக்குப் பத்தாயிரம் பிராங்க் தொகையை ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். ஆங்கிலேய அரசு ஜோன் மீது வழக்கு தொடுத்தது.
ஜி.எஸ்.எஸ்
(இன்னும் வரும்)