mercredi 10 juillet 2013

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் உண்ணாவிரதம் மீனவர்களுக்கு ஆதரவாக கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

தென்பகுதி மீனவர்கள் முல்லைத்தீவுக்கு வந்து சட்டவிரோத மீன்பிடிப்பில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டி, அதனைத் தடுத்து நிறுத்துமாறு கோரி முல்லைத்தீவு மீனவர்கள் கடந்த சில தினங்களாக அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மூன்று மீனவர்கள் இவ்வாறு தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக சக மீனவர்களும் அங்கு கூடியுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு உண்ணாவிரதத்தில் ஈடுபடும் மீனவர்களுக்கு ஆதரவாக அங்குள்ள வர்த்தகர்கள் புதனன்று தமது கடைகளை அடைத்துள்ளனர்.
தனியார் பஸ் போக்குவரத்துக்குகளும் முன்னதாக அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால், அரச தலையீட்டின் காரணமாக போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire