mercredi 24 avril 2013

அரசியல் கட்சியாக பதிவு செய்யும் சாத்தியம் இல்லை .சுரேசுக்கு பேபே மண்டையன் குழு தலைவருக்கு முதலமைச்சர் ஆசையா? முடியாது என்கிறார் சம்பந்தன்

முன்னாள் இராணுவ குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருக்கும்போது அதனை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் சாத்தியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோஸப்புடன் பேசியபோது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், முன்னாள் போராட்ட குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்போது அதனை பதிவு செய்ய முடியாது என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்ட குழுக்களின் முன்னாள் இழைத்த கொடூரங்கள் பற்றி அரசாங்கம் தகவல்களை சேர்த்துவைத்திருப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சி கருதுகின்றது. எனவே இப்போது பதிவு செய்ய முற்பட்டால் அரசாங்கம் சட்ட பிரச்சினைகளை கிளப்ப முடியும் என கட்சி நம்புகின்றது. ஆயினும், இலங்கை தமிழரசுக் கட்சி, அவர்களுடன் தேர்தல் ஒப்பந்தத்திற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது.
வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் பிளவு ஏற்படுவதை தடுப்பதற்கு மன்னார் ஆயர் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களும் முயன்று வருகின்றன. எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அதன் தலைவர்களை கேட்டுள்ளனர்

Aucun commentaire:

Enregistrer un commentaire