jeudi 27 juin 2013

13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான அமைச்சர்களை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சி

புதல்வரை அரசியலில் களமிறக்க 13ம் திருத்ததிற்கு ஆதரவான அமைச்சர்களை சந்திரிக்கா பயன்படுத்த முயற்சி –புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலில் களமிறக்குவதற்காக 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான அமைச்சர்களை முன்னாள் ஜனாதிபதி  சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முயற்சித்து வருவதாக 
ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவதற்கு சந்திரிக்கா முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
சமஷ்டி, பிரிவினைவாதிகள், ஐக்கிய தேசியக் கட்சி, எல்.எஸ்.எஸ்.பீ., சீ.பி.எஸ்.எல்., என்.எஸ்.எஸ்.பீ மற்றும் விஜய குமாரதுங்கவின் மஹஜன கட்சி ஆகியன 13ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கு இந்தக் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்த்து மீண்டு;ம் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தி அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சித் திட்டம் தீட்டப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire