dimanche 22 juillet 2012

காணிகளை விற்றுவிட்டு இன்று உரிமை கோருகின்றனர்! பிள்ளையான்


யுத்த காலத்தில் காணிகளை விற்ற சிங்கள மக்கள் இன்று கிழக்கில் காணி உரிமை கோரி வருவதாக கிழக்கு மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
இங்குள்ள மக்களுக்கு பிரச்சினை உண்டு. அது சிறிய, சிறிய பிரச்சினை. இந்தச் சிறிய பிரச்சினைகளை அரசாங்கம் தீர்த்து வைக்க வேண்டும். இந்த தேர்தலில் அரசாங்கமே வெற்றிபெறும். நிச்சயம் வெற்றிபெறும்.
இங்கு சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை உண்டு. சிங்களவர்களுக்கு உள்ள பெரிய பிரச்சினைகளான கல்விப் பிரச்சினை. தண்ணீர் பிரச்சினை போன்றனவற்றை நாம் தீர்த்து வைப்போம்.
ஆனால் அவர்கள் யுத்த காலத்தில் காணிகளை விற்றுப் பணம் பெற்றனர். இன்று உரிமை கோருகின்றனர். இது சட்டப் பிரச்சினை. மாவட்ட செயலாளர் அதனைத் தீர்த்து வைப்பார்.
முதலமைச்சர் என்ற வகையில் நாம் கிழக்கு மாகாணத்தில் அனைத்து மக்களையும் ஒரேவாறு கவனித்தோம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் எமக்கு ஒன்றே.

Aucun commentaire:

Enregistrer un commentaire