jeudi 21 novembre 2013

முழுப் பைத்தியக்காரன்கூட அப்படிச் சொல்ல மாட்டான்.இணையத் தள செய்திகளுக்கு கட்டுப்பாடு அவசியம்!- வீ. ஆனந்தசங்கரி


a.sangary8விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் இடையில் நடந்த இறுதிப் போரில் புலிகள்தான் அப்பாவி மக்களை கொன்றார்கள் என்றும், அரச படைகள் கொலைகளில் சம்பந்தப்படவில்லை என்றும் நான் கூறியதாக சில இணைய ஊடகங்களில் வந்த செய்தி முற்றிலும் பொய்யானதாகும். புதுரக ஆயுதங்களை வைத்து இருசாராரும் கடும் சமர்புரியும்போது ஒரு சாரார் மக்களைக் கொன்றார்கள் என்றும் மறுபகுதியினர் கைகட்டி நின்றார்கள் என்றும் கூறுவதற்கு நான் ஒன்றும் பைத்தியக்காரன் அல்ல. ஏன் முழுப் பைத்தியக்காரன்கூட அப்படிச் சொல்ல மாட்டான். இது சம்பந்தமாக நான் யாருக்கும் பேட்டி கொடுத்ததும் கிடையாது.
கொழும்பில் மாநாடு நடந்துகொண்டிருந்த வேளை எனக்கே உரித்தான கடமையுணர்வோடு சில பத்திரங்களைத் தயாரித்து மகாநாட்டுக்கு வருகைதந்த தலைவர்களுக்கும், தூதரகங்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தேன். இம்மாதம் 12ஆம் திகதி மகாநாட்டுக்கு வருகைதந்த பல்வேறு நாட்டுதலைவர்களுக்கு நாட்டுநிலைமையை விளக்கியும் உலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினரைப் பிரதிநிதித்துவப் படுத்தும் 53 நாட்டுத் தலைவர்கள் மீண்டும் கூடுவது 100 ஆண்டுகளுக்கு சாத்தியம் இல்லை என்றும் சார்க் மாநாட்டின்போது தவறவிட்ட சந்தர்ப்பத்தைப்போல் அல்லாமல் அம்மாநாடு  7 நாட்டு தலைவர்கள். இப்போது வந்திருப்பது 53 நாடுகளின் தலைவர்களும், முக்கிய பிரதிநிதிகளும் எனவும் இந்தியாவையும், கனடாவையும் உள்ளடக்கி இம்மாநாடு நடைபெற உதவுமாறும் கேட்டிருந்தேன்.
அதன்பின் 14.11.2013 தேதியிட்டு சகல பிரதிநிதிகளுக்கும் நாட்டு நிலைமையை விளக்கி வேறு ஒரு கடிதம் எழுதி, அத்துடன் என்னால் ஜனாதிபதிக்கு 4.3.2013, 21.2.2013, 9.11.2012, 17.04.2012 ஆகிய திகதிகளில் அனுப்பிய கடிதங்களுடன் பொருத்தமாக 23.01.2013, 19.07.2012 ஆகிய திகதிகளில் கொடுக்கப்பட்ட இரு அறிக்கைகள் உள்ளடக்கி மொத்தாக 9 ஆவணங்களையும் அனுப்பியிருந்தேன். இந்த நாட்களில் நடந்த கவன ஈர்ப்புப் போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் போனதற்கு இதுவே காரணமாகும். காலத்திற்குக் காலம் சில இணையத்தளங்களும், ஊடகங்களும் என்னைப்பற்றி வசை பாடுவது வழக்கமாகிவிட்டது. இந்த நிகழ்வும் அதைப்போல ஒன்றுதான். தேவையிருக்கின்ற சிலர் இப்படிச் செய்கிறார்கள். அரசு போட்டாலென்ன ஆண்டவன் போட்டாலென்ன செய்தியைப் போட்டவர்கள் போடுவதற்கு முன் எனது வயதையும் அனுபவத்தையும் இன ஒற்றுமையையும் கவனத்திலெடுத்து ஒரு சொல் கேட்டுவிட்டுப் போட்டிருக்கலாம். இககூட்டை யார் குழப்பகிறார்கள் ஏன் குழப்புகிறார்கள் என்று ஊகித்துக்கொண்டு செய்தியை பிரசுரிக்காது விட்டிருக்கலாம். மூன்று வருடங்களாக நான் படும் அவமானத்திற்கு விரைவில் ஓர் முடிவு வரவேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்!.
பொதுநலவாய மாநாட்டை உரிய முறையில் எமது பிரச்சனைகள் அனைத்தையும் தழுவக்கூடிய வகையில் நாம் செயற்படத் தவறிவிட்டோம் என்ற கவலை எனக்குண்டு. இனிமேலும் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக கலந்துரையாடுவதை கவனத்திலெடுக்க வேண்டும். தலைவர்களுக்கு கொடுத்த ஆவணங்களோடு 16ஆந்திகதி டேவிட் கமரோனுக்கும், நம்நாட்டு ஜனாதிபதிக்கும் அவசர அவசரமாக எழுதிய கடிதங்களையும் கூடிய விரைவில் வெளியிட உள்ளேன்.
இணையத்தளங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகமுக்கிய பங்கினை வகிக்கின்றன. சிலர் இதை முறையற்ற விதத்தில் தவறாகப் பயன்படுத்துவது சமூகத்திற்கு நல்லதல்ல. சிலருக்கு இதுதான் வாழ்வாதாரம். சிலருக்கு பொழுதுபோக்கு! சிலருக்கு வரைவிலக்கணமின்றி எல்லோர் தலையிலும் குட்டிப் பார்ப்பது! சிலர் இவற்றை உபயோகித்து சிலரை தூக்கி வைப்பதும், வேறு சிலரை காலில் போட்டு மிதிப்பதும் வழக்கமாகிவிட்டது. சுய மகிழ்ச்சிக்காக ஒருவர் எதையும் செய்யலாம். ஆனால் மற்றவர்களை துன்பப்படுத்துவது நியாயமற்றதாகும். மக்களுக்கு சரியான நடுநிலையான செய்திகளை வழங்குவதே ஊடகங்களின் தர்மமாகும்,

Aucun commentaire:

Enregistrer un commentaire