lundi 11 novembre 2013

ஜனாதிபதி அவர்களே! உங்களுக்கு கடிதம் எழுதிய அதே தினம் தம்பி பிரபாகரனுக்கும் “மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு” என்ற தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் ; வீ. ஆனந்தசங்கரி

a.sangary7
மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள்இ 
ஜனாதிபதி மாளிகைஇ 
கொழும்பு – 3.

அன்புடையீர்!

காமன்வெல்த் மாநாடு – ஓர் மறைமுக வரப்பிரசாதம்!
 - வீ. ஆனந்தசங்கரி
கடந்த 57 ஆண்டுகளில் 26 ஆண்டுகள் யுத்தத்தாலும்இ அதேயளவு காலம் - அதற்கு முன்பும் சொல்லொணாத துன்பங்களை அனுபவித்து நலிவுற்ற எமக்கு பூரணமான மனக்கலக்கமற்ற வாழ்க்கையையும் அமைதியையும் திரும்பப் பெறக்கூடியயதாக மீண்டும்; ஒரு பொன்னான வாய்ப்பு உங்களைத் தேடி வருகிறது என்பதை உரிமையோடு தங்களின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். சுருங்கச் சொன்னால் 1948ல் நாடு சுதந்திரமடைந்து 7 ஆண்டுகளின் பின் இன்றுவரை இனஇமத வேறுபாடற்று வாழும் மக்கள்இ பல்வேறு காரணங்களுக்காக பயத்துடனும்இ பீதியுடனும் வாழ்ந்திருக்கிறார்கள். நான் கூறப்போகும் விடயங்கள் உங்களுக்கு விருப்பமற்றதாக இருக்கலாம். ஆனால் அவை உண்மை மட்டுமல்ல எவர் மறுத்துக் கூறினாலும் அந்த நிலைமையைப் பார்க்கவும் உணரவும் முடியும்.

நான் உங்களுக்கு அனுப்பிய 26.07.2008 திகதியிட்ட கடிதம்இ “கிடைத்துள்ள பொன்னான வாய்ப்பை இந்த நாடு இழந்துவிடக் கூடாது”  என்ற தலையங்கத்தைக் கொண்டிருந்தது. அக்கடிதத்தில் “இன்னும் சில நாட்களுக்குள் உங்களை அலங்கரிக்கக் கூடிய மேலும் ஒரு பதவி வர இருக்கின்றது” என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். “1.7 பில்லியன் மக்களை உள்ளடக்கிய 7 நாடுகளின் அமைப்பாகிய சார்க் ஸ்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட இருக்கிறீர்கள்!  மேலும் எதுவித குற்றமும் செய்யாமல் பயப்பீதியுடன் வாழுகின்ற மக்களுக்கு சார்க் நாடுகளின் மாநாட்டை நடத்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளமை ஆண்டவனால் கொடுக்கப்பட்ட வரப்பிரசாதமாக அமைகிறது.  பஸ்இ புகையிரத பிரயாணங்களை விட சாதாரணமாக வீதியில்கூட நடந்துசெல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. சார்க் அமைப்பின் முக்கிய பணிகள் - அங்கத்துவ நாடுகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பதே! துரதிர்ஷ்டவசமாக அந்த நாட்களில் யுத்தம் நடந்து கொண்டிருந்தபடியால் விடுதலைப் புலிகளுடன் ஒரு தீர்வுக்கு வரக்கூடிய நேரமும் கனிந்திருக்கவில்லை. சூழ்நிலையும் சாதகமாயிருக்கவில்லை. அதிர்ஷ்டவசமாகஇ அதேபோன்றதொரு நிலையில் நடக்க இருக்கும் காமன்வெல்த மாநாடும் ஆண்டவனால் தரப்பட்ட ஒரு வரப்பிரசாதமாகவே எண்ணுகிறேன். 

ஜனாதிபதி அவர்களே! உங்களுக்கு கடிதம் எழுதிய அதே தினம் தம்பி பிரபாகரனுக்கும் “மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு” என்ற தலைப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் “எனது கடிதங்கள் எதையும் நீர் பொருட்படுத்தவில்லை. நீர் உட்பட மக்களுக்குத் தேவையான அமைதியைக் கொடுக்கக்கூடிய இனப்பிரச்சனைக்கு ஓர் நிரந்தரமான தீர்வை எட்டக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதென்பதை உமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இக்கடிதத்தை எழுதுகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தேன்.

ஜனாதிபதி அவர்களே மற்றவர்கள் சிலரைப் போல திரு வேலுபிள்ளை பிரபாகரன் இன்னும் வாழ்ந்து வருகிறார என நான் சொல்லமாட்டேன். அவர் இல்லை என்று நான் நம்புகிறேன். 2008ல் சார்க் மாநாட்டின் போது நிலவிய அந்த நிலைமை இப்பொழுது மாறிவிட்டது. அனைத்து தடைகளும் அகற்றப்பட்டு ஒரு பொன்னான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. 54 நாடுகளில் 53 நாட்டுத் தலைவர்கள் பெரிய அல்லது சிறிய என்ற பேதமின்றி சமபலத்துடன் உலகின் சனத்தொகையில் மூன்றிலொரு பங்கினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய காமன்வெல்த் அமைப்பின் மாநாட்டை நீங்கள்  தலைமை தாங்க இருப்பது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் - உங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் அனேகமாக அனைத்துத் தலைவர்களும் கலந்து கொள்வர். கனடிய பிரதம மந்திரியையும் இம்மாநாட்டில் கலந்து கொள்ள வைக்கவேண்டும். ஏனெனில் கனடா எமது நாட்டின் அபிவிருத்திக்கு பெரிதாக உதவியுள்ள ஒரு நட்பு நாடாகும். கட்டுநாயக்க விமான நிலையம் கனடிய அரசால் எமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டதோடு – கட்டுநாயக்க கொழும்பு அதிவேகப் பாதையை உருவாக்குவதில் முதற்கட்டமாக வனவாசலஇ கண்டி வீதி - களனிப்பாலச் சந்தி ஆகிய இரு இடங்களில் 60 ஆண்டுகளுக்கு முன்பு பாலங்கள் உருவாக்கப்பட்டு காரணம் தெரியாமல் கைவிடப்பட்டதொன்றாகும். அத்தோடு கனடாவின் 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தம் வகையில் அம்மாகாணங்களின் பெயரிடப்பட்ட 9 டீசல் ரயில் எஞ்சின்களையும் வழங்கியிருந்தது என்பதை ஞாபகமூட்டுவதோடு அந்த எஞ்சின்கள் இன்றும் சேவையில் இருக்குமென நான் நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக கனடாவில் இன்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. இதே போன்றதொரு நிலையில்தான் இந்தியாவிலும். இந்தியா பிரதிநிதித்துவப் படுத்தாத மாநாடு சேக்ஷ்பியரின் நாடகங்களில் ஒன்றான  டென்மார்க்கின் இளவரசன் ஹம்லெற் என்ற நாடகத்தின் ஹம்லெற் என்ற கதாபாத்திரம் இல்லாதிருப்பதை ஒத்ததாகும். இந்த நாட்டிற்குப் பிடித்த சாபக்கேடு பதவியிலுள்ள பலர் தாம் சம்பந்தப்படாத விடயங்களில் கருத்துக் கூறுவதாகும். நான் அடிக்கடி கூறுவதுபோல மகிந்த சிந்தனை வேறு சிலரின் சிந்தனையோடு கலக்கப்பட்டு மாசுபட்டும் பலவீனமடைந்துமுள்ளது. 

இந்தச் சந்தரப்பத்தில் தமிழ்நாட்டுத் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது சம்பந்தமாக ஏற்கனவே எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு வேண்டுகிறேன். மற்றும் 51 தலைவர்கள் மத்தியில் அவர்களுக்கு இவரின் பிரசன்னம் பெரியதோர் தாக்கத்தை கொடுக்கக்கூடியதாகும். இம்மாநாட்டில் இனப்பிரச்சனை சம்பந்தமாக எடுக்கப்படும் முயற்சி விரைவில் ஒரு நிரந்தர தீர்வுக்கு வழிசமைக்கக்கூடும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். 52 தலைவர்கள் எடுக்கும் ஒரு பொது நிலைப்பாடு சில சமயம் உள்ளுர் தலைவர்களின் சிந்தனையை மாற்றி ஏற்புடையதான ஒரு தீர்வை எட்டக்கூடும். அத்தகையதொரு நிலைப்பாடு எடுக்கப்படுமாயின் அது உங்களுக்கு ஒரு பெரும் உதவியாக அமையும். 

எனது பங்காக நீண்டகாலமாக தடுப்புக்காவலில் அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஆண்இ பெண்இ அவர்களின் அப்பாவிக் குழந்தைகள் அனைவரையும் இத் தலைவர்களை கௌரவிக்கும் வகையில் நிபந்தனை எதுவுமின்றி விடுவித்து அனைவரின் பாராட்டையும் பெற வேண்டுமெனக்  கேட்டுக்கொள்கின்றேன். இத்தலைவர்கள் உலகின் மூன்றிலொரு பங்கினரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்க! காந்திஜி அவர்கள் முதன்முதல் இலங்கைக்கு விஜயம் செய்தபோது இலங்கையும் இந்தியாவும் எக்காரணம் கொண்டும் முரண்படக் கூடாது எனக் கூறிச்சென்றதை நாம் மனதில் கொள்ள வேண்டும். 

காமன்வெல்த் மாநாட்டுடன் இலங்கை ஒரு புதிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு விரோதமான மனித உரிமை மீறல்இ காணிகள் அபகரிப்புஇ அரசுக்குச் சொந்தமில்லாத தனியார் வீடுகளை இடித்தழித்தல் இதேபோன்ற சிறுபான்மை இனத்தவர்களுடைய உள்ளத்தையும்இ உணர்வுகளையும் புண்படுத்தும் எச் செயலிலும் ஈடுபடாமல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 

 

வீ. ஆனந்தசங்கரிஇ
செயலாளர் நாயகம் 
தமிழர் விடுதலைக் கூட்டணி

Aucun commentaire:

Enregistrer un commentaire