dimanche 24 novembre 2013

ஆயுதங்கள் இலங்கைக்கு விற்பனை செய்தமை குறித்து கமரூன் விளக்கமளிக்க வேண்டும்

இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டமை குறித்து பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விளக்கம் அளிக்க வேண்டுமென அந்நாட்டு ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இயந்திரத் துப்பாக்கிகளும் ஏனைய துப்பாக்கிகளையும் இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய ஏன் பிரித்தானிய அரசாங்கம் அனுமதியளித்தது என்பது குறிப்பிடப்பட வேண்டுமென ஆயுத ஏற்றுமதி கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் சேர் ஜோன் ஸ்டான்லி தெரிவித்துள்ளார்.எட்டு மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட் பெறுமதியான ஆயுதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த அனைத்து ஆயுதங்களும் கடற் கொள்ளை நடவடிக்கைகளை தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டது என்ற வாதத்தை ஏற்க முடியாது என எதிர்க்கட்சிகளும் குற்றம் சுமத்தியுள்ளன. ஆயுத விற்பனை தொடர்பில் பிரதமரும் அமைச்சர்களும் விளக்கம் அளிக்க வேண்டுமென சேர் ஜோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வெறெனினும், யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த சர்வதேச விசாரணைகளுக்காக பிரதமர் விடுத்த கோரிக்கைக்கு பூரண ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire