mardi 12 janvier 2016

சிகரெட்டுடன் கூடிய ஸ்மார்ட்போன்

புகை பிடிக்கும் பழக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர எலக்ட்ரானிக் சிகரெட்டுகள் உலகெங்கும் பரவலாக விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதுமையாக எலக்ட்ரானிக் சிகரெட்டுடன் ஸ்மார்ட்போன் ஒன்று வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜூபிடர் ஐ.ஓ.3 என்ற இந்த ஸ்மார்ட்போன், ஆன்ட்ராய்டு கிட்கேட் இயங்குதளத்துடன் வெளிவருகிறது. ஹெட்போனை போல் இ-சிகரெட்டு கருவியை பொருத்துவதற்கு தனியாக ஜேக் உள்ளது. இரண்டு பேட்டரிகளை கொண்ட இந்த போனில் ஒரு பேட்டரி போனிற்காகவும், மற்றொரு பேட்டரி அதிலுள்ள இ-சிகரெட்டிற்காகவும் இடம் பெற்றுள்ளது.

காபி, புதினா, சாக்லேட் என பல வாசனைகளில் திரவ கேட்ரிஜ்களுடன் கூடிய எலக்ட்ரானிக் சிகரெட் குச்சி இந்த போனுடன் தரப்படுகிறது. வேண்டிய நேரத்தில் இதை பொருத்தி புகைபிடித்துக் கொள்ளலாம். ஒரு கேட்ரிஜைக் கொண்டு 800 முறை புகைப்பிடிக்க முடியும். இதற்கென தனியாக திரவ கேட்ரிஜ்ஜூகளும் உள்ளன. புகை பிடிப்பதன் மீதுள்ள மோகத்தை குறைக்கும் வகையில் வேப் எனும் அப்ளிகேஷனும் தரப்பட்டுள்ளது. இந்த ஆப் எத்தனை முறை புகை பிடிக்கிறோம் என்பதை கணக்கிட்டு நமக்கு எச்சரிக்கை செய்கிறது. 3ஜி இண்டர்நெட் வசதியுடன் கூடிய போன் ரூ.20 ஆயிரத்திற்கும், 4ஜி வசதியுடன் கூடிய போன் ரூ.33 ஆயிரத்திற்கும் விற்பனைக்கு வருகிறது.

எனினும், வழக்கமான சிகரெட்டுகளுடன் ஒப்பிடுகையில் இது ஏதாவது கதிர்வீச்சு பாதிப்புகளை உண்டாக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனுக்கு அமெரிக்க மத்திய தகவல்தொடர்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire