samedi 30 janvier 2016

500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட மாநாடு கிழக்கு மாகாணத்தில்

கிழக்கு மாகாணத்தில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என மாகாண முதலமைச்சர் ஹாஃபீஸ் நசீர் அகமட் தெரிவித்துள்ளார்.
அவ்வகையில் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 500க்கும் அதிகமான முதலீட்டாளர்கள், இது தொடர்பில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் கலந்துகொண்டனர் என அவர் கூறுகிறார்.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை , கைத்தொழில், விவசாயம், கால் நடை மற்றும் மீன்பிடி என பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது தொடர்பாக மாகாண சபை தயாரித்துள்ள திட்டங்கள் இந்த மாநாட்டில் முன்வைக்கப்பட்டன எனவும் அவர் மேலும் கூறுகிறார்.
இந்த திட்டங்கள் மற்றும் யோசனைகள் தொடர்பாக சாதகமான பதில்கள் முதலீட்டாளர்களிடமிருந்து கிடைத்துள்ளதாகவும் அவர் நமது கிழக்கிலங்கைச் செய்தியாளர் உதயகுமாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய நிறுவனமொன்று கேரளாவில் உள்ளது போல் கிழக்கு மாகாணத்தின் கடலேரிகளில் சொகுசு படகு வீடுகளை அமைக்க முன்வந்துள்ளது எனவும் ஹாஃபீஸ் நசீர் அகமட் கூறுகிறார்.
உத்தேச முதலீடுகள் செயல்வடிவம் பெறும்போது கிழக்கு மாகாணத்தில் வேலை வாய்ப்புகள் பெருகி அங்குள்ள மக்களின் சமூகப் பொருளாதார வாழ்க்கை மேம்படும் என தாங்கள் நம்புவதாகவும் மாகாண முதலமைச்சர் நமது செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இந்தியா, சவுதி அரேபியா உட்பட பல நாடுகள் முதலீடுகளைச் செய்ய உறுதியளித்துள்ளன.bbc

Aucun commentaire:

Enregistrer un commentaire