jeudi 28 janvier 2016

இலங்கை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே ஆகியோரை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேச உள்ளார்.

மீன்பிடிக்க செல்லும் போது, எல்லை தாண்டி வந்து விட்டதாக கூறி அவர்கள் அடிக்கடி சிங்கள கடற்படையினர் பிடித்து சென்று விடுகிறார்கள்.
சில வார சிறைவாசத்துக்கு பிறகு தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது படகுகளை இலங்கை திருப்பி கொடுக்க மறுத்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண இருநாடுகளின் கூட்டு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா– இலங்கை நாடுகளின் வெளியுறவு மந்திரிகள், உயர் அதிகாரிகள், உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த ஆணையத்தின் கூட்டம் வருகிற 5–ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 5–ந்தேதி இலங்கை செல்கிறார்.
கூட்டு ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் சுஷ்மா சுவராஜ் தமிழக மீனவர்கள் பிரச்சனை குறித்து பேச உள்ளார். தமிழக மீனவர்கள் நலனை காப்பாற்ற அவர் இலங்கை அதிகாரிகளுடன் விரிவாக விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின்போது இலங்கை அதிபர் மைத்ரி பாலசிறிசேனா, பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே ஆகியோரையும் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேச உள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வடக்கு மாகாண முதல்–மந்திரி விக்னேஸ்வரனை சந்தித்து பேசவும் சுஷ்மா சுவராஜ் திட்டமிட்டுள்ளார்.
6–ந்தேதி சுஷ்மா சுவராஜ் யாழ்ப்பாணம் செல்கிறார். அங்கு இந்தியா உதவியுடன் கட்டப்பட்டுள்ள துரையப்பா விளையாட்டு அரங்கை திறந்து வைக்கிறார்.
அன்றே சுஷ்மா சுவராஜ் இந்தியா திரும்ப உள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire