இலங்கை கப்பல் கூட்டுத்தாபனம் சுற்றுலா கப்பல் சேவையொன்றை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இச்சுற்றுலா கப்பல் சேவையை கொழும்பு, காலி மற்றும் திருகோணமலை பிரதேசங்களை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது என்று இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சஷி தனதுங்க தெரிவித்துள்ளார்.
இச்சுற்றுலா கப்பல் சேவையை கொழும்பு நகரை பிரதான மையமாக கொண்டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கப்பல் சேவையானது கேந்திர முக்கியத்துவதற்கு அமைய காலி மாவட்டத்திற்கும் வழங்கப்படும் என்றும் திருகோணமலை துறைமுகத்தை புணரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், அம்பாந்தோட்டையின் அபிவிருத்திக்கமைய, யால சரணாலயத்தை மையமாகக் கொண்டு சுற்றுலா கப்பல் சேவையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.