dimanche 3 janvier 2016

சர்வதேச கால்பந்து நடுவராக திண்டுக்கல் ரூபாதேவி தேர்வு

சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட திண்டுக் கல்லை சேர்ந்த ஜி. ரூபாதேவி என்ற கால்பந்து வீராங்கனை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்லை சேர்ந்த கால்பந்து வீராங்கனை ஜி. தேவி (25) ரூபா. பிஎஸ்சி வேதியியல் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான படிப்பை முடித்துள்ள இவர், தொடக்கத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணி மற்றும் திண்டுக்கல் கால்பந்துக் கழக அணிக்காக விளையாடியவர். பின்னர் மாநில மற்றும் தேசிய அணிகளுக்கு தேர்வாகி பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

தேசிய, ஆசிய அளவிலான போட்டிகளில் நடுவராக பங்கேற் றார். கத்தார் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளிலும் நடுவ ராகப் பங்கேற்றார்.

இந்நிலையில் இவரை, சர்வதேச கால்பந்து போட்டிகளில் நடுவராக செயல்பட பிபா தேர்வு செய்துள் ளது. இதன் மூலம் தென்னிந்தியா வில் இருந்து சர்வதேச நடுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் என்று பெருமையை பெற்றுள்ளார்.

இதுகுறித்து மாநில பெண்கள் கால்பந்து கழக முன்னாள் தலைவர் மற்றும் திண்டுக்கல் கால்பந்து கழக கவுரவச் செயலாளர் எஸ்.சண்முகம் 'தி இந்து'விடம் திண்டுக்கல்லில் நேற்று கூறும்போது, "திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் கால்பந்து விளை யாட்டில் சிறந்து விளங்குகின் றனர். இதற்கு உதாரணம்தான் ரூபாதேவி "என்றார்.

ரூபாதேவி கூறும்போது, "இது எதிர்பாராத சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இந்த தருணத்தில் எனது நலன் விரும்பிகளுக்கும், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து சங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் "என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire