dimanche 6 avril 2014

உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

ATA8பங்களாதேஷில் நடைபெற்ற டுவென்டி 20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு, உலகக் கிண்ணத்தை தன்வசப் படுத்திக்கொண்டது இலங்கை.
ATA2நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் இந்திய அணியை துடுப்பெடுத்தாடப் பணித்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்பில் விராத் கோளி, 58 பந்துகளை எதிர்கொண்டு 4 ஆறு ஓட்டங்கள், 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 77 ஓட்டங்களைப் பெற்று, இறுதி ஓவரின் இறுதிப் பந்தில் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா 26 பந்துகளை எதிர்கொண்டு 29 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக, நுவான் குலசேகர, ரங்கன ஹேரத், மத்தீவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
131 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்ததுடன், ருவென்டி 20 உலகக் கிண்ணத்தையும் முதன் முறையாகப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் குமார் சங்ககார 35 பந்துகளை எதிர்கொண்டு 1 ஆறு ஓட்டம், 6 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 52 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மோஹித் ஷர்மா, அஸ்வின், மிஸ்ரா, சுரேஸ் ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இன்றைய இறுதிப் போட்டியின் நாயகனாக இலங்கை அணியின் குமார் சங்கக்காரவும் தொடர் நாயகனாக இந்திய அணியின் விராத் கோளியும் தெரிவாகினர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire