dimanche 6 avril 2014

நாயகத்தை அவமதித்த தற்கால மனிதற்கு தூக்கு.

பாகிஸ்தானில் நபிகள் நாயகத்தை அவமதித்து செய்தி அனுப்பிய கிறிஸ்தவ தம்பதியருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கோஜ்ரா நகரத்தில் இம்மானுவல்-ஷகுப்டா கவுசர் என்ற தம்பதியர் தங்களது மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்தாண்டு யூலை மாதம் இம்மானுவல் தனது கைப்பேசியிலிருந்து, அப்பகுதி மசூதியின் பிரார்த்தனைத் தலைவர் மௌல்வி முகமது ஹுசைன் என்பருக்கு நபிகள் நாயகத்தை அவமதித்து செய்தியுறை அனுப்பியதாக் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு வந்த போது இம்மானுவலின் கைப்பேசி முன்பே தொலைந்து போனதால், இச்செயலை அவர் செய்திருக்க வாய்ப்பில்லை என இம்மானுவலின் வழக்கறிஞரால் வாதாடப்பட்டது.
மேலும் தனிப்பட்ட காரணங்களுக்காக தங்களின் எதிராளிகள் யாரேனும் இதுபோன்ற தவறுகளைச் செய்திருக்கலாம் என்றும் அந்தத் தம்பதியர் தரப்பில் முறையிடப்பட்டது.
எனினும் இவர்கள் தங்களின் குற்றச்சாட்டுகளை மறுத்தாலும், அதை ஏற்க மறுத்த நீதிபதி, நேற்று முன் தினம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இதுகுறித்து இத்தம்பதியரின் வழக்கறிஞர் கூறுகையில், இருவருமே குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள நிலையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire