மெக்சிகோ: அமெரிக்காவில் தனது நிர்வாண புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்ட தோழியை 16 வயது சிறுமி ஒருவர் 65 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள குவாமுசில் பகுதியைச் சேர்ந்தவர் எரான்டி எலிசெத் குடியர்ரஸ்(16). அதே பகுதியில் வசிப்பவர் அனெல் பாயெஸ்(16). அந்த இருவரும் தோழிகளாக இருந்துள்ளனர். இந்நிலையில் அனெல் தானும் தனது தோழி எரான்டியும் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த எரான்டி ஆத்திரம் அடைந்தார். தனது தோழியை சந்திப்பதை தவிர்த்து ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்தார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அனெல் எரான்டியை கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி தனது வீட்டுக்கு சமாதானம் பேச வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து அனெல் வீட்டுக்கு சென்ற எரான்டி அவரது கழுத்தில் கத்தியால் 65 தடவை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அனெல் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற எரான்டி ஒன்றுமே தெரியாதது போன்று நடந்து கொண்டார். பின்னர் அனெலின் இறுதிச் சடங்கிற்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.mercredi 2 avril 2014
65 முறை தோழியை குத்திக் கொன்ற 16 வயது சிறுமி
மெக்சிகோ: அமெரிக்காவில் தனது நிர்வாண புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்ட தோழியை 16 வயது சிறுமி ஒருவர் 65 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள குவாமுசில் பகுதியைச் சேர்ந்தவர் எரான்டி எலிசெத் குடியர்ரஸ்(16). அதே பகுதியில் வசிப்பவர் அனெல் பாயெஸ்(16). அந்த இருவரும் தோழிகளாக இருந்துள்ளனர். இந்நிலையில் அனெல் தானும் தனது தோழி எரான்டியும் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த எரான்டி ஆத்திரம் அடைந்தார். தனது தோழியை சந்திப்பதை தவிர்த்து ட்விட்டரில் கொலை மிரட்டல் விடுத்தார். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத அனெல் எரான்டியை கடந்த மார்ச் மாதம் 19ம் தேதி தனது வீட்டுக்கு சமாதானம் பேச வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து அனெல் வீட்டுக்கு சென்ற எரான்டி அவரது கழுத்தில் கத்தியால் 65 தடவை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அனெல் சம்பவ இடத்திலேயே பலியானார். இதையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற எரான்டி ஒன்றுமே தெரியாதது போன்று நடந்து கொண்டார். பின்னர் அனெலின் இறுதிச் சடங்கிற்கு வந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire