mercredi 2 avril 2014

மோடிக்கு எதிராக திருநங்கையான கமலாபாய் சுயேட்சையாக போட்டி

வாரணாசி      ,  உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் போட்டியிட உள்ளார். தற்போது மோடியை எதிர்த்து திருநங்கையான கமலாபாய்(65) சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளார்.
கமலாபாய், அரவிந்த் கெஜ்ரிவால் மீது டெல்லியில் அரசை நடத்த முடியவில்லை என்ற கரைபடிந்துள்ளது. குஜராத் கலவரம் விவகாரம் தொடர்ந்து நரேந்திர மோடியை இன்னும் பற்றிப்பிடித்துக் கொண்டுள்ளது. நான் களங்கமற்று உள்ளேன். சிவனின் பல உருவங்களில் ஒன்றான அர்தநாரீஸ்சுவரர் வழியில் பிறந்தவர்கள் நாங்கள். எனவே எனக்கு ஆதரவு அளியுங்கள், எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும்,  மக்களுக்காக சேவை செய்துவரும் எனக்கு, தனியாக குடும்பமும் கிடையாது. நூற்றுக்கணக்கான ஏழைப் பெண்களுக்கு இலவசமாக மணம் செய்து வைத்திருக்கிறேன். ஆண்கள் அல்லது பெண்கள் ஆட்சிவந்தாலும் ஊழல் தொடர்ந்து நடந்து கொண்டே உள்ளது. இந்நிலையில் மூன்றாவது பாலினமான எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று கமலாபாய் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire