dimanche 6 septembre 2015

ஐக்­கிய தேசியக் கட்­சியின் 69 ஆவது நிகழ்­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால .கருடன் நியுஸ்

ஐக்­கிய தேசியக் கட்­சியின் 69 ஆவது நிறை­வாண்டு விழா  ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைமையகமான சிறி­கொத்­தாவில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்த நிகழ்­விற்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தம அதி­தி­யாக கலந்துகொள்ளவுள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­மசிங்க தலை­மையில் இந்த நிறை­வாண்டு விழா காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

64 ஆண்­டு­க­ளுக்கு பிறகு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­வ­ரொ­ருவர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிறை­வாண்டு விழா­வில் கலந்துகொள்ளவுள்ளமை விசேட அம்சமாகும்.

ஐக்­கிய தேசிய கட்சி இலங்­கையின் முத­லா­வது பிர­தம மந்­திரி டி.எஸ் சேனா­நா­யக்­க­வினால் ஆரம்­பிக்­கப்­பட்­டது.   இதன்­போது எஸ்.டப்­ளியு.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்­கவும் அதே­கட்­சி­யி­லேயே இருந்தார்.   எனினும் 1951 ஆம் ஆண்டு எஸ்.டப்­ளியு.ஆர்.டி பண்­டா­ர­நா­யக்­க­வினால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire