dimanche 22 septembre 2013

போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வடக்கு மாகாண சபைத் தேர்தலில்

news
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் 
 வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர்.
மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன.
இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் ஆகியவற்றுக்கு ஏகோபித்த குரலில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.
முழு உலகத்தாலும் பெரும் எதிர்பார்ப்புடன் நோக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர் தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட ஆளும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெறும் ஆறு ஆசனங்களை மட்டும் பெற்றுப் படுதோல்வி கண்டது. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆசனம் 3  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாக, ஒரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமாக வென்றது.
வவுனியாவில் 6 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு ஆசனங்களை பெற்றது.
யாழ்ப்பாணத்தில் 16 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றியது. இரு ஆசனங்களை மட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்றது.
மன்னார் மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலா ஒவ்வொரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் பெற்றுக் கொண்டன.
வடக்கில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்று வரலாற்று வெற்றியை தனதாக்கியது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire