dimanche 8 septembre 2013

சமதர்ம கட்சிகளின்; சார்பில் நடராசா தமிழ் அழகன் ஆகிய நான் இத்தேர்தலில் போட்டியிடுகிறேன்.

2013 வடமாகாண சபை தேர்தலுக்கான எனது (நடராசா தமிழ்அழகன்) தேர்தல் விஞ்ஞாபனம்
எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில்;; பேராசிரியர் மற்றும் அமைச்சர் திஸ்ஸவித்தாரண தலைமை தாங்கும் லங்கா சமசமாஜ கட்சிஇ அமைச்சர் டியூ குணசேகர தலைமை தாங்கும் இலங்கை கம்னியூஸ்ட் கட்சிஇ அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமை தாங்கும் ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் மறைந்த விஜயகுமாரதுங்க தலைமை தாங்கிய லங்கா மகாஜன கட்சி ஆகிய சமதர்ம கட்சிகளின்; சார்பில் நடராசா தமிழ் அழகன் ஆகிய நான் இத்தேர்தலில் போட்டியிடுகிறேன்;;;;;;.
மேற்குறிப்பிட்ட கட்சிகள் தமிழ் மக்களின் உரிமைக்காகவும் மற்றும் அதிகார பரவலாக்கம்இ சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு பொருளார சமநிலை போன்ற பலவற்றிற்காகவும் தொடர்சியாக செயற்பட்டு வந்த கட்சிகளாகும். நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் உத்தியோகபூர்வ மொழிகளாக சிங்களமும் தழிழும் பிரயோகிக்கப்படவேண்டுமென சமசமாஜ கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய கலாநிதி என்.எம் பெரேரா அவர்கள் பிரித்தானிய ஆட்சிக்காலத்தில் 1937ம் ஆண்டு தேசிய அரசுப் பேரவையில் ஒரு பிரேரணையை முன்மொழிந்தார். 1956ல் லங்கா சமசமாஜ கட்சி கம்னியூஸ்ட்; கட்சி தலைவர்கள் சிங்களம் மட்டும் என்கின்ற பிரேரணையை எதிர்த்து தழிழும் உத்தியோகபூர்வ மொழியாக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து சிங்களத்தோடு தமிழும் உத்தியோகபூர்வ மொழியாக்கப்பட வேண்டுமென கோரினார்கள். இத்தகைய நிலைப்பாடு காரணமாக சிங்கள ஆதரவாளர்கள் எமது கட்சியாகிய லங்கா சமசமாஜ கட்சியிலிருந்து விலகி சிறிலங்கா சுதந்திர கட்சியில் இணைந்தார்கள். முன்பு தழிழ்மொழி அரசகரும மொழியாக்கப்பட்டிருந்தாலும்கூடஇ இன்று இடதுசாரி கட்சிகளின் முயற்சிகளினால் பல சவால்களுக்கு மத்தியில் தமிழ் அரச கரும மொழியாக அமுலாக்கப்படுகின்றது. சகல சமூகங்களுக்கிடையிலான அதிகார பகிர்வினை மேற்கொள்வதை உறுதி செய்வதற்காக இடதுசாரி கட்சிகள் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்குள்;;ளே போராடிகொண்டிருக்கின்றன. இதன் மூலம் சகல இனத்தவரும் பாலின வித்தயாசமின்றி இந்த நாட்டின் எப்பகுதியிலும் சமத்துவ உரிமைகளையும் வரப்பிரசாதங்களையும் அனுபவிப்பர். எமது அரசியல் யாப்பில் 13வது திருத்தத்தை தொடர்ந்தும் பேணுவதற்காக இடதுசாரிகள் பாரளுமன்றத்தில்; தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். இதன் விளைவாகவே வட மாகாண சபை தேர்தலானது தற்பொழுது நடைபெறுகின்றது. எமது கட்சி இன்று 13வது திருத்தச் சட்டத்தினை எமது அரசியல் யாப்பிலிருந்து மாற்றுவதற்கு தற்போது உள்ள அரசாங்கத்தோடு போராடியதன் விளைவே இத்தேர்தலாகும். இவ்வளவு காலமும் ஏனைய மாகாணங்கள் பெற்றுக்கொண்டஇ அனுபவித்த சகலதும் மக்களிற்கு கிடைக்க வேண்டும். முழுமையான அதிகார பகிர்வு நடைபெறவேண்டும்.
இத்தேர்தலில் என்னை வெற்றி பெறச்செய்வதன் மூலம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினுள் தமிழ் மக்கள் சார்பாக எனது ஆதரவினை நல்கி இடதுசாரிகளின் நிலைப்பாட்டினை பலப்படுத்துவேன்;. அந்த வகையில் இடதுசாரிகளாகிய நாம் புதியதொரு அரசியல் யாப்பினை விருத்தி செய்யும் நிலைப்பாட்டினையும் முன்னெடுப்போம். அதன்மூலம் சகல மக்களுடனான ஒரு நேர்மையான கலந்துரையாடல் மூலம் வெளித்தலையீடற்ற சுயாதீனமான பேச்சுவார்த்தையை மேற்கொள்வோம். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும்இ விருப்பு வாக்கு முறையிலான தேர்தல் முறையும் மாற்றியமைக்கப்பட்டு; மக்;களது பன்முகத்தன்மையும் சமத்துவ உரிமைகளையும் சந்தர்ப்பங்களையும் உறுதிசெய்வதையும் புதிய யாப்பானது உள்ளடக்கும் அதேவேளைஇ தேசத்தினை ஐக்கியப்படுத்துவதினையும் கொண்டிருக்கும்;. இவ்வுரிமையானது இனத்துவஇ பால்நிலைஇ சமயம் மற்றும் சாதி வேறுபாடற்ற வகையில் அமைந்திருக்க வேண்டுமென கூறும் அதேவேளையில் நாம் 13ம் திருத்தத்தை பேணவும் நடைமுறைப்படுத்தவும் கோருகின்றோம். பிரதேச மக்களின் நன்மைக்காக அத்திருத்தமானது உணர்வுபூர்வமுள்ள வகையில் அதிகார பகிர்வினை அதி உச்சமாக பிரயோகிக்க வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் என்னை மாகாணசபை பிரதிநிதியாக தெரிவுசெய்யும் பட்சத்தில்இ நான்;; வடமாகாண மக்களிற்கு கீழ்வரும் வேலைத்திட்டங்களை நிறைவேற்ற உறுதியுடன் உண்மையாக உழைப்பேன்.

01. மாகாணசபை நிர்வாகத்தில் மக்களினுடைய பங்களிப்பினை ஊக்குவித்தல். மக்களுக்கு அதிகாரவலுவூட்டல்இ சகலதரப்பினர்களையும் உள்ளடக்கிய ஜனநாயக முறைமைத்துவ மற்றும் மக்களுடன் சினேகிதபூர்வமான ஆட்சிமுறை உருவாக்கப்படும். ஆட்சியிலிருக்கும் அரசுடனும் மாகாணசபை நிர்வாக மட்டங்களுடனும் நல்ல நட்புறவுறவு பேணிக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்.
02. வீடற்றவர்களுக்கும் நிலமற்றவர்களுக்கும் காணிகளை பகிர்ந்தளிப்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து தொழிற்படுவோம். அரச காணிகள் நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எமது கட்சியூடாக நடவெடிக்கை எடுக்கப்போம்.
03. மாகாண சபையின் புதிய உத்தியோகத்தர்கள் தெரிவின் போது திறமை அடிப்படையிலும் இனத்துவம்இ பால்நிலை மற்றும் சாதி வேறுபாடின்றி நீதிஇ நேர்மைஇ வெளிப்பாட்டு தன்மை அடிப்படையில் செயல்படுத்த வலியுறுத்துவேன்.
04. எல்லோருக்கும் சம சந்தர்ப்பவாய்ப்பு நடைமுறைப்படுத்தலை இலக்காகக்கொண்டே நாம் இத்தேர்தலில்; ஈடுபடுகின்றோம். எனவேஇ சகல மட்டங்களிலும் சாதி மற்றும் பால் வேறுபாட்டை இல்லாதொழிக்க முயற்சிகளை மேற்கொள்வோம்.
05. மாகாணத்தின் சமூக பொருளாதார வாழ்வில் எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் இளைஞர்கள் யுவதிகளை வலுவூட்டி தீவிரமாக செயல்பட என்னாலான முழு முயற்சிகளையும் முன்னெடுப்பேன்.
06. சபையின் சகல முகாமைத்துவத்திலும் ஊழல் செயல்பாடுகளை அகற்றுவதுடன்; மக்களிற்கான முன்னுரிமை வழங்கப்படும் சேவைகள் வெளிப்படையானதாக இருக்கவேண்டும்.
07. பயிற்சி மற்றும் ஆளுமை விருத்தி உருவாக்கம்இ தொழில் முயற்சி உருவாக்கம்இ கைத்தொழில் துறைகளில் ஏற்படுத்தப்படுவதுடன் சகல துறையினதும் அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்படும். புதிய விஞ்ஞான தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்துவதன் மூலம் விவசாயம் மற்றும் மீன்பிடிதுறைகள் அபிவிருத்தி செய்ய முயற்சிகளை மேற்கொள்வேன்.
08. எமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு உரிய கவனம் செலுத்தப்படும். மற்றும் நீர் மூல வளங்கள் பற்றாக்குறைக்கும் கவனம் செலுத்தப்படும். நிலத்தண்ணீர் மூலவளங்களுடன் வேறு தண்ணீர் மூலவளங்கள் பற்றியும் ஆராயப்படும். சிநேக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை உரம் போன்றவற்றின் பாவனை ஊக்கப்படுத்தப்படும். சுற்றுச்சூழல் பிரச்சினைகளான வீட்டுத்திண்மக்கழிவுகளை ஒழுங்குபடுத்தல் பிளாஸ்டிக் போத்தல் தகரம் பத்திரிகை கைவிடப்பட்ட உலோகம் பயன்படுத்தப்பட்ட ரயர் போன்றன சேகரிக்கப்பட்டு மீள் பாவனைக்கு உட்படுத்தப்படும். சமூகமக்கள் ஏற்றுக்கொள்ளாத நேரங்களில் மக்களுக்கு இடையுறுவிளைவிக்கும் தேவையற்ற ஒலிபெருக்கிப் பாவனையை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கட்டுமானப்பணிகளின்போது வெளியிடப்படும் தூசுகளால் சூழல் மாசுபடுவதையும் தடுப்பதோடு விசேடமாக வீதி கட்டுமானப்பணிகள் அவதானிக்கப்பட்டு மீள் அபிவிருத்தி செய்யப்படும்
09. உள்ளூர் தழிழ் சமூகத்திற்கு போதிய அளவு பணியாற்ற பொலிஸ் நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் தேவையான பொழுது தமிழ்மக்களுக்கு போதியளவு தமிழ் திறமையுள்ள உத்தியோகத்தர்களை அமர்த்துவதோடு சிங்கள மக்களுக்கும் போதியளவு சிங்கள திறமையுள்ள உத்தியோகத்தர்களை அமர்த்துவதை உறுதிசெய்வோம்.
10. ஏனைய மாகாணப்பாடசாலைகளோடு எமது மாகாணத்திலுள்ள பாடசாலைகளும் இணைந்த பங்குபற்றுதலூடாக தேசிய ஒருமைப்பாடு ஊக்கப்படுத்தப்படும்.

லங்கா சமசமாஜ கட்சி 137 கண்டி வீத யாழ்ப்பாணம்
021 221 9020 

Aucun commentaire:

Enregistrer un commentaire