dimanche 8 septembre 2013

எதுவும் நடக்காது யார் முதலமைச்சராக வந்த்தாலும்

sekarவடக்கில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப்பது அரை இராணுவ ஆட்சி. அனைத்திலும் இராணுவம் தலையிட்டுக் கொண்டிருக்கின்றது. வன்னியில் திருமண வீட்டிற்கு கூட படையினரது அனுமதி பெறப்பட வேண்டியிருக்கின்றது. பாடசாலையில் மாணவர்கள் அரங்கேற்றும் நாடகத்தின் ஸ்கிரிப்ட்டினை அருகிலுள்ள படைமுகாமில் ஒப்படைத்து முன் அனுமதி பெறவேண்டி இருக்கின்றது.
இந்நிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் என்ன டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சராக வந்தால் என்ன சிலவேளைகளினில் நாமல் ஜனாதிபதியாக வந்தால் என்ன எதுவுமே நடக்கப்போவதில்லை என தெரிவித்தார் ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்
தேசியப்பிரச்சினைக்கு தீர்வுக்கான அணுகு முறைகள் எனும் கருப்பொருளில் நாளை யாழ்.பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடக்கவிருக்கும் ஜேவிபியினது பிரச்சாரக் கூட்டத்திற்கான முன்னறிவிப்பு பற்றிய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இத்தகைய கருத்தினை முன்வைத்திருந்தார்.
எவர் ஆட்சிபீடமேறினாலும் தமிழ் மக்களது பிரச்சினைகள் தீரப்போவதில்லை. தடுப்புக்களிலும் சிறைகளிலுமுள்ள இளைஞர்கள் விடுவிக்கப்படப் போவதில்லை. காணாமல் போனோhர் திரும்பப்போவதில்லை. அன்றாட விலைவாசிகள் குறையப் போவதில்லை. இத்தேர்தலின் பின்னர் அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றினதும் விலைகள் கூட்டப்படப் போகின்றது.
இந்நிலையில் தமிழ் மக்கள் தமக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள ஏனைய மக்களையும் ஒன்றிணைத்து போராடுவதை தவிர வேறு வழிகளில்லையெனவும் அவர் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire