dimanche 15 septembre 2013

மனம் திறந்தார் கோத்தாபய! புலிகளின் ஆயுதக் களஞ்சியங்களை அழிக்க அமெரிக்காவே உதவியது

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களை ஆழ்கடல் பகுதியில் வைத்து 2006 இற்கும் 2008 இற்கும் இடையிலானகால கட்டத்தில் அழித்தொழிக்க அமெரிக்க அதன் பூரண ஆதரவை வழங்கியிருந்தது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.கடற்புலிகளின் ஆயுதவிநியோகக் கப்பல்களை இலங்கை கடற்படையால் மூழ்கடிக்க முடிந்தபோது இந்த யுத்தத்தில் ஒரு திருப்பு முனை ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

2006 இற்கும் 2008 இற்குமிடையில் புலிகளின் மிதக்கும் ஆயுத களஞ்சியங்களில் நாம் 12 ஐ அழித்தோம் இது எவ்வாறு சாத்தியமானது? அமெரிக்கர்கள் மிகமிக உதவியாக இருந்தனர். புலிகளின் ஆயுத கப்பல்கள் இருந்த இடங்களை அமெரிக்கா எமக்கு காட்டித்தந்தனர் என பாதுகாப்பு அமைச்சர் செயலாளர் அவுஸ்ரேலிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களில் பெரும்பாலானவை திறந்த சந்தையில் வாங்கப்பட்டவை 
என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் புலிகளால் வாங்கப்பட்ட ஆயுதங்களில் பீரங்கிகளில் அநேகமானவை வடகொரியா மூலத்தை கொண்துடன் அவர்களிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகளும் இருந்தன இவை இலங்கை இராணுவத்தை எதிர்கொள்ள போதுமானவையாக இருந்ததைவிட கூடுதலானவையாக இருந்தன.

அது மட்டுமல்ல புலிகளிடமிருந்த பீரங்கிகள் எமக்கு அதிக உயிர் சேதத்தை ஏற்படுத்தியது உண்மை இலங்கையில் போரிட அமெரிக்கர்கள் முன்னர் தடுமாறும் போக்கை கொண்டிருந்தாலும் அவர்கள் புலிகளை நியாயப்படுத்தவுமில்லை, இலங்கை படைகளுக்கு ஆயுதங்களை வழங்கவுமில்லை.

இருப்பினும் அமெரிக்காவுடன் கூட்டுச்சேர்ந்த நாடுகளான பாகிஸ்தான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்தும் இலங்கையால் ஆயுதங்களை வாங்க முடிந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire