mardi 29 mai 2012

தனிநாடு கோரி மேலும் இரு திபெத்தியர்கள் தீக்குளிப்பு

திபெத் தனிநாடு கோரிக்கையை வலுயுறுத்தி நேற்று இரண்டு திபெத்தியர்கள் மீண்டும் தீக்குளித்துள்ளனர்.
முதன்முறையாக திபெத்தின் டுயாயளய எனும் நகரில் தீக்குளித்த இவ்விருவரில் ஒருவர் இறந்த போதும் மற்றையவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திபெத்தினுள் நடைபெற்ற இரண்டாவது தீக்குளிப்பு சம்பவமாகவும் இது பதிவாகியுள்ளது.
சீனாவிடமிருந்து திபெத்தை தனிநாடாக பிரிக்க கோருவதே தீக்குளித்து தமது உயிரை மாய்ப்போரின் பிரதான நோக்கமாக இருப்பதாக திபெத்தின் கம்யூனிச கட்சியின் தலைவர் ஹாவோ பெங் தெரிவித்துள்ளார்.
லாஹாசாவின் மிக பிரபலமான ஆலயத்தின் முன்னர் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. 15 நிமிடங்களுக்குள் அங்கு ஒன்றுமே நடைபெறவில்லை என்பது போன்று சீன  பாதுகாப்பு அதிகாரிகளால் குறித்த பிரதேசம் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவிடமிருந்து திபெத்தை பிரிக்க கோரி கடந்த ஒரு வருடத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் தீக்குளித்து மாய்ந்துள்ளனர்.  அவர்களில் பெரும்பாலானோர் பௌத்தமத துறவிகள் என்பதுடன் திபெத்துக்கு வெளியேயே பலர் தீக்குளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1950ம் ஆண்டு திபெத் மீது இராணுவ ஆக்கிரமைப்பை மேற்கொண்ட சீன அரசு 1959ம் ஆண்டு அந்நாட்டை தன்வசமாக்கியதுடன், சீனாவின் ஒரு அங்கமே திபெத் என அறிவித்தது. அதை தொடர்ந்து திபெத்திலிருந்து வெளியேறிய அந்நாட்டின் ஆன்மீக தலைவர் தலாய் லாமா இந்தியாவில் தஞ்சமடைந்தா.ர்

Aucun commentaire:

Enregistrer un commentaire