vendredi 4 mai 2012

சந்தர்ப்பம் சேனாதிக்கு கிடைக்கவில்லை போல...கொடி ஏந்தியமைக்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தில் சிங்கக்கொடி ஏந்தியமைக்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர ஊடகக் குரலினால் நடாத்தப்பட்ட மூத்த ஊடகவியலாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ். நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்..............அதையும்விட வேடிக்கையானதும் கேவலமானதுமான விடயம் என்னவெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் சிங்கக் கொடி ஏந்தியதைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, இதுபோல அரசாங்கத்தால் புலிகளின் முன்னாள் ஆயுதக் கடத்தல்காரரான குமரன் பத்மநாதனைக் கொண்டு வந்து தமது மேதினக் கூட்டத்தில் சிங்கக்கொடியை ஏந்த வைக்க முடியுமா எனச் சவால் விடுத்தார். அதாவது இரா.சம்பந்தனை குமரன் பத்மநாதனுக்கு ஒப்பிட்டுப் பேசினார்! (குமரன் பத்மநாதன் புலிகளின் ஆயுத முகவராகவும், இரா.சம்பந்தன் புலிகளின் அரசியல் முகவராகவும் கடந்த காலத்தில் இருந்ததால், ரணில் ஒப்பிட்டதில் தவறென்ன எனச் சிலர் வாதிடக்கூடும்) ஐக்கிய தேசியக் கட்சியுடன்  கூட்டுச் சேர்ந்ததிற்கு கூட்டமைப்பினருக்கு ரணில் கொடுத்த பரிசு இது!

இதுதவிர, யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி – தமிழ் கூட்டமைப்பு இணைந்து நடாத்திய மேதினக் கூட்ட மைதானப் பகுதியில் சிங்கக் கொடிகளுடன், புலிகள் இயக்கத்தின் கொடியுடன் சிலர் திரிந்ததாக  செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கமும் புலியும் (மிருகங்கள்) ஒன்று சேர்ந்தால், மனிதர்கள் பாடுதான் திண்டாட்டமாக இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை

1 commentaire: