samedi 19 mai 2012

முன்னெடுப்புக் குறித்து இன்று ஹிலாரி பேசுவார் _

நல்லிணக்கத்துக்கான முன்னெடுப்புக்கள் மற்றும் வெளிக்கொணரப்பட்டுள்ள விடயங்கள் குறித்து இலங்கையின் பொறுப்புடைமை தொடர்பில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுடனான இன்றைய சந்திப்பின் போது பேச உள்ளார் என்று அமெரிக்க தூதுரக பேச்சாளர் தெரிவித்தார். 

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த திங்கட்கிழமை அமெரிக்கா சென்றார். இவ் விஜயத்தில் முக்கிய விடயமாகக் கருதப்பட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனுடனான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற உள்ளது. இதன் போது ஜெனிவா தீர்மானத்திற்கு அமைவான முன்னெடுப்புகளும் பொறுப்புடைமை குறித்தும் ஹிலாரி கிளின்டன் விரிவாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸுடன் பேச உள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire