vendredi 11 mai 2012

கண்ணிவெடி அகற்றும் பணி முடிவுறும் வரை வடக்கிற்கு தேர்தல் கிடையாது

வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்பட்டு முறையான நிர்வாகம் ஏற்படுத்தப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இவ்வாறு தெரிவித்தார். அப்படியாயின் வடக்கில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டது எப்படி என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜனாதிபதி தேர்தலை நேரத்திற்கு நடத்த வேண்டியிருந்ததால் செய்ய வழியில்லாமல் போனதெனவும் அந்த நேரத்தில் மக்கள் வேறு இடங்களில் இருந்து வாக்களித்ததாகவும் குறிப்பிட்டார். தேர்தல் ஒன்று கட்டாயம் நடைபெற வேண்டும் எனவும் அதில் எந்த பின்னடைவும் கிடையாது எனவும் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவுற்ற பின்னர் தேர்தல் நடத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.




Aucun commentaire:

Enregistrer un commentaire