samedi 18 février 2017

யுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

யுத்தத்தில் உயிர்தப்பிய பெண்கள் இன்னமும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சந்திரிக்கா,

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகள், தமது ஊரிலேயே உள்ள சில அதிகாரிகள் மற்றும் சில இராணுவத்தினரால் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

குறிப்பாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட விதவைகள் ஒரு விடயத்தை செய்து கொள்ள, பிரதேச அதிகாரிகளால் பாலியல் இலஞ்சமாக பயன்படுத்தப்படுகின்றனர்.

இந்த பாலியல் வன்கொடுமைகள் இன்னும் இடம்பெறுகின்றன. குறிப்பாக கிராமசேவக அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை இந்த பாலியல் துஷ்பிரயோகங்களை செய்கின்றனர். ஒரு ஆவணத்தில் கையொப்பம் இடுவதற்கு கூட பாலியலை இலஞச்சமாக கேட்கின்றனர். இதில் இராணுவத்தினரும் உள்ளடக்கம்.

பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டால் இவ்வாறான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலைமை ஏற்படாது.

பாலியல் துஷ்பிரயோகங்களால் பாதிக்கப்பட்ட பல பெண்கள் இன்னமும் அதிர்ச்சியில் உள்ளனர். அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு குறித்த பெண்களுக்கு உளவியல் ரீதியிலான சிகிச்சை தேவை. ஆனால் உளவியல் சிகிச்சையளிக்க நாட்டில் போதுமான நிபுணர்கள் இல்லை.

வெளிநாட்டில் இருந்து உளவியல் சிகிச்சை தொடர்பான நிபுணர்களை வரவழைத்தாலும் கூட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொழி பிரச்சினை ஏற்படும் என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire