மட்டக்களப்பு நகரில் அமைக்கப்பட்டு வரும் பாரிய பொது நூலகத்தின் கட்டிட நிர்மாண பணிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது விசேட அபிவிருத்தி நிதி மூலம் 40 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
மட்டக்களப்பின் ஆச்சரியமாக சுமார் 250 மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் முழு முயற்சியின் கீழ் இந்த பொது நூலகம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக இதுவரையில் 150 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அடுத்த வருடம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படும் இந்த பொது நூலகமானது சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கான ஆரமடப நிதியையும் கிழக்கு மாகாண முதலமைச்சரே வழங்கியமை குறிப்பிட தக்கது
Aucun commentaire:
Enregistrer un commentaire