vendredi 15 juin 2012

துப்பாக்கிச் சூடு ஜேவிபி கூட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.



இலங்கையின் தெற்கே அம்பாந்தோட்டை பகுதியில் கட்டுவன என்ற இடத்தில் ஜேவிபி என்று அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளியன்று மாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த சந்திரசேகரன் அவர்கள் தெரிவித்தார்.
மத்திய மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே அவர்கள் அந்தக் கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த தருணத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி 56 ரக துப்பாக்கியால் தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire