lundi 18 juin 2012

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை மொஸ்கோவில் சந்தித்துப் பேச உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மெக்ஸிகோ, லா காபோஸ் நகரில், நடைபெற இருக்கும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். மேலும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்துப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதன்போது, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவையும் பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைத்து தலைவர்களையும் மன்மோகன் சிங் சந்திக்கும் நிகழ்ச்சி நிரலில் இலங்கை ஜனாதிபதியின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதன் பின்னர் இருநாட்டு தலைவர்களும் சந்திக்கும் முதலாவது நிகழ்வு இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. 
___

Aucun commentaire:

Enregistrer un commentaire