jeudi 14 juin 2012

மறியல் போராட்டம் மட்டக்களப்பில் பல்கலைக்கழக ஊழியர்கள்

கிழக்கு பல்கலை கழகத்தின் அனைத்து கல்வி சாரா ஊழியர்களும் இன்று நண்பகல் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல்போராட்டங்களில் ஈடுபட்டனர்.காலை 11மணிமுதல் 1மணிவரை போராட்டம் தொடர்ந்தது.

கிழக்கு பல்கலைகழகத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள வந்தாறுமூலை, மட்டக்களப்பு , கல்லடி வளாகங்களின் கல்விசாரா ஊழியர்கள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு அரசடி சௌக்கியபீட வளாகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரியே இவ்ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. நாளை இவர்களின் போராட்டம் திருமலை வளாகத்தின் முன்னால் இடம் பெறவுள்ளது.
 

Aucun commentaire:

Enregistrer un commentaire