இலங்கையில் 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஹோமோசபியன்ஸ் மனிதன் வாழ்ந்தான் என்பதை களுத்துறை, புளத்சிங்களப் பகுதியில் உள்ள பகியங்கல வளைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வரலாற்றுக் காலத்துக்கு முந்திய மனிதனின் எலும்புக்கூடு உறுதி செய்துள்ளதாக தொல்பொருள் திணைக்கள பிரதி பணிப்பாளர் கலாநிதி நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் இந்தப் பிரதேசத்தில் வரலாற்றுக்கு முந்திய கால மனிதனின் முழுமையான எலும்புக்கூடு மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில், ஆதிமனிதனின் மேலும் பல சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவனது உணவுப் பொருட்கள், சடங்குகள் தொடர்பான பொருட்கள், கல்லினால் ஆன கருவிகள் குறித்த சான்றுகளும் கிடைத்துள்ளன. மணிகளால் செய்யப்பட்ட நகைகள், மிருக எலும்பில் செய்யப்பட்ட ஆயுதங்களும் ஆகழ்வாய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று கலாநிதி நிமால் பெரேரா தெரிவித்துள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire